வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Thursday, July 01, 2010

Dr.Sam Pitroda - Last Part (5)


முனைவ்ர். சாம் பிட்ரோடா (5)







1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியது. வி.பி.சிங் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆட்சியை கைப்பற்றியது. கேரளாவைச் சேர்ந்த உன்னிகிருக்ஷ்ணன் தொலைத் தொடர்பு மந்திரியானார். சாம் தனது அறிவியல் ஆலோசகர் (Scientific Advisor to Prime Minister) பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் தொலைத் தொடர்பு குழ தலைவர் அரசியல் சாராத பதவி (Non political appointment) என்பதால் இந்த பதவியை ராஜினாமா செய்ய வில்லை. தான் தொடங்கிய திட்டங்களை முழுமையாக முடிக்க வேண்டும் என்று தனது கொள்கையில் உறுதியாக இருந்தார்.

சாம் அவர்கள் ராஜீவின் நண்பர் என்பதை மனதில் கொண்டு தொலைத் தொடர்பு மந்திரி உன்னிகிருக்ஷ்ணன் சாமிற்கு பல தொல்லைகள் கொடுத்தார். ஆனால் சாம் அவற்றை கண்டு கொள்ளாமல் தனது திட்டங்களை தொடர்ந்து செயல் படுத்தும் வேலைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். பல மாதங்கள் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்தும் தாங்கிக் கொண்டு ராஜினாமா செய்யாமல் வேலை பார்க்கும் சாமை பார்த்து கோபம் கொண்டு சாம் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி விசாரணைக் கமிசன் அமைத்தார் உன்னிகிருக்ஷ்ணன். இதை சாம் சற்றும் எதிர் பார்க்கவில்லை. கோடிக் கணக்கில் அமெரிக்காவில் சம்பாதிக்ககூடிய வேலையை விட்டு விட்டு இந்தியாவிற்கு திரும்பி வந்து ஒரு ரூபாய் சம்பளம் வாங்க்கிக்கொண்டு இரவு பகலாக தாய்நாட்டிற்கு உழைத்த என் மீதா ஊழல் குற்றசாட்டு என்று வேதனையில் துடித்தார் சாம். இதன் பலன் 1990 ஆம் ஆண்டில் தனது 48 வயதில் சாமிற்கு பெரிய மாராடைப்பு (Massive Heart Attack).

இந்தியா முழுவதும் உள்ள விங்ஞானிகள், போராசிரியர்கள், தொலைத் தொடர்பு பொறியிலாளர்கள் கொதித்து போய் அரசாங்காத்திற்கு எதிராக போரட்டத்தில் ஈடுபட்டார்கள். சாமிற்கு நான்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சாம் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றசாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா கூறி தொலைத்தொடர்பு மந்திரி உன்னிகிருக்ஷ்ணன் மீது கடும் அதிருப்தியை தெரிவித்தார். 1990 ஆம் ஆண்டு வி.பி.சிங்கின் அரசாங்கம் ஆட்சியை இழந்தது. சந்திரசேகர் காங்கிரஸ் ஆதரவில் பிரதமரானர். பை பாஸ் அறுவைச் சிகிச்சை முடிந்து பல மாதங்கள் ஓய்வுக்குப் பிறகு 1991 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் தொலைத் தொடர்பு குழு தலைவர் பணிக்கு திரும்பினார். ஆனால் 1991 ஆம் ஆண்டு மே மாதம் தனது உற்ற தோழன் ராஜீவ் காந்தி கொலையால சாம் மிகவும் மனமொடிந்து போய்விட்டார். நரசிம்மராவ் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டவுடன் அப்போதைய தொலைத் தொடர்பு மந்திரி ராஜேக்ஷ் பைலட்டிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு 1991 ஆம் ஆண்டு இறுதியில் குடும்பத்துடன் சிகாகோவிற்கு திரும்பி சென்று விட்டார் சாம்.

சிகாகோவிற்கு திரும்பி வந்தபிறகு சில காலம் ஓய்வெடுத்து விட்டு C-SAM, Inc என்ற கம்பெனியை தொடங்கி இன்றும் வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார். 2004 ஆம் ஆண்டு டாக்டர். மன்மோகன் சிங் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டவுடன் இந்திய அறிவுசார் ஆணையத்தை (National Knowledge Commission) அமைத்து அதன் தலைவராக சாம் அவர்களை தலைவராக நியமித்தார். 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை அறிவுசார் ஆணையத்தின் தலைவராக பணியாற்றி 300-க்குக் மேற்பட்ட பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு சமர்பித்தார். 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங்கின் அறிவியல் ஆலோசராக (Scientific Advisor to Prime Minister) ஆக பணியாற்றி வருகிறார்.

இந்திய அரசு 2009 ஆம் ஆண்டு சாம் அவர்களுக்கு “பத்மபூசன் விருது வழங்கி கவுரவித்தது.  

இந்திய தொலைத் தொடர்பில் புரட்சி ஏற்படுத்தி பல சாதனைகள் செய்த முனைவர். சாம் பிட்ரோடா அவர்கள் மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்து இந்தியாவின் முன்னேற்றதிற்கு உதவ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

சில சுட்டிகள்:

1. சாம் அவர்களைப் பற்றிய you tube வீடியோகள்:
  


  



  
பி.கு:

1. 1991 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் சாம் அவர்கள் தொலைத் தொடர்பு குழு தலைவராக பணியாற்றிய போது அவரது அலுவகத்தில் புது கணணியை நிறுவி Novell LAN கணணி கட்டமைப்பில் இணைத்து சாம் அவர்களுக்கு Novell LAN கணணி கட்டமைப்பை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இந்த 22 வயது சிறியவன் விளக்கியிருக்கிறேன். சாம் அவர்களுடன் பணியாற்றிய போது ஏற்பட்ட பிரமிப்புகளுக்கு தனி பதிவு தேவைப்படும். சாம் அவர்கள் தொடங்கிய C-DOT நிறுவனத்தில் வேலை பார்க்க வேண்டும் என்று எண்ணி C-DOT-க்கு விண்ணப்பம் செய்து தேர்வாகி 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத்தில் C-DOT, Bangalore-ல் சேர்ந்தேன்.

2. இந்திய தொலைத் தொடர்பு கட்டமைப்புக்கு வெவ்வேறு கால கட்டத்தில் ஒரு துளி பங்காற்றியிருக்கிறேன்

  • 1992-1992 ஆம் ஆண்டுகளில் C-DOT-ல் பணியாற்றியபோது C-DOT முதல் 10,000 தொலைபேசி இணைப்புகள் இணைப்பகம் சோதனையில் (Field Trial) பணியாற்றியது. மேலும் த்மிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் பல C-DOT எண்ணியல் 500-2000 Lines தொலைபேசி இணைப்பகங்களை நிறுவியிருக்கிறேன்
  • 1998 ஆம் ஆண்டு இந்தியாவில் முதன் முதலில் கட்டணம் இல்லா (Toll Free ) தொலைபேசி சேவையை அறிமுகப் படுத்திய புராஜக்டில் C-DOT-டோடு இணைந்து பணியாற்றியிருக்கிறேன்
  • 2006-2007 ஆம் ஆண்டுகளில் ரிலையன்ஸ் தொலைபேசி நிறுவனத்தின் Voice Over IP கட்டமைப்பை வடிவமைத்தவர்களில் நானும் ஒருவன் (Architect) 
  • 2008 ஆம் ஆண்டு முதல் BSNL, MTNL, Reliance Communications, Bharti AirTel  போன்ற நிறுவனங்களுக்கு அடுத்த தலைமுறை கட்டமைப்பு (Next Generation Networks) என்ற தொழில் நுட்பத்த்திற்கு ஆலோசகராக (Consultant) பணியாற்றி வருகிறேன்.

சரி.. இவ்வளவு தூரம் படித்து தொலைத் தொடர்பு பற்றி ஓரளவு தெரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். எனவே இந்த ஆடியோவைக் கேட்டு “யார் அந்த இன்கம்மிங்என்று கொஞ்சம் சொல்லி விட்டு போங்களேன்.


-- நிறைவு --


23 comments:

கோவி.கண்ணன் said...

நல்ல தகவல்கள், 90ல் மாரடைப்பு ஏற்பட்டு அதன் பிறகு 20 ஆண்டுகளுக்கும் மேல் கடுமையாக உழைக்கிறார் என்றால் வியப்பாக இருக்கிறது.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அருமை! பிரமிப்பூட்டும் வகையில் இருக்கிறது.

கே.பி.உன்னிக்கிருஷ்ணன் அவ்வளவு கெட்டவரா?

சாம் பிரிட்டோ மலையாளி இல்லையோ!?

Ravichandran Somu said...

கோவி.கண்ணன் - நன்றி கோவியாரே!

ஜோதிபாரதி - நன்றி!
//கே.பி.உன்னிக்கிருஷ்ணன் அவ்வளவு கெட்டவரா?//

இந்திய அரசியல்வாதிகளில் நல்லவர்கள் இருக்கிறார்களா?

தருமி said...

//90ல் மாரடைப்பு ஏற்பட்டு ..//

அடடே .. நம்ம கேசு.. :(

Ravichandran Somu said...

தருமி சார் - பை பாஸ் அறுவை சிகிச்சை முடிந்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் சாம் துடிப்புடன் செயல் படுகிறார். நீங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆராக்கியமாக வாழ்வீர்கள்!

வின்சென்ட். said...

இந்தியாவின் தற்போதய முன்னேற்றம் நிச்சயம் தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் தான்.ஆனால் இதற்கு பின் இவ்வளவு போராட்டாமா? விறுவிறுப்பாக இருந்தது உங்களின் பதிவுகள். உங்கள் குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்.

Joseph said...

எனக்கு தெரிஞ்சு ஒரு தொடர மிக விறுவிறுப்பா சீக்கிரமா எழுதி முடிச்சது நீங்களா தான் இருப்பிங்க.

கொஞ்சம் முன்னடி இத எழுதியிருக்கலாம் நீங்க. மணற்கேணியில ஒரு அருமையான கட்டுரை விட்டுப் போயிருச்சு.

தொடர்ந்து நம்ம நாட்டுல தொலை தொடர்பு துறை அசுர வேகத்துல வளர்ந்ததோட அடிப்படை காரணங்கள எழுதுங்க அண்ணா.

Ravichandran Somu said...

வின்செண்ட் - நன்றி

ஜோசப் - நன்றி தம்பி

//தொடர்ந்து நம்ம நாட்டுல தொலை தொடர்பு துறை அசுர வேகத்துல வளர்ந்ததோட அடிப்படை காரணங்கள எழுதுங்க அண்ணா//

Will do....

Anonymous said...

மிக அருமையான கட்டுரை. கட்டுரை என்பதைவிட தெளிவுரை என்பதே பொருந்தும், சாம் ராஜீவின் நண்பர் என்பதுதான் தெரியுமே தவிர நாட்டிற்காக இவ்வளவு அர்ப்பணிப்பு செய்தவர் என்று தெரியாது.
இவரைப்பொல் சிலரால்தான் இந்த அரசியல்வியாதிகளை மீறி நம் நாடு முன்னேறுகிறது.

நன்றி

பா.ராஜாராம் said...

மொத்த கட்டுரையும் நண்பர்களிடம்,(keralaites) வாசித்துக் காட்டினேன் ரவி. சர்ச்சைகள் இருந்தது. ஆனால், அதீத நாட்டுப் பற்று இருக்கிற நண்பர்கள் என்பதால், நான்/ நாம் ஜெயித்தோம். (இந்த நாமில் என் மலையாளி நண்பர்களும் அடக்கம்) உங்களை என் நன்பன்/ சகோதரன் என்பதில் மிகுதி சந்தோசம்.

இந்த கட்டுரையை, என் தளத்தில் லிங்க் கொடுக்க விருப்பம். உங்கள் அனுமதிக்குப் பிறகு செய்யணும்.

Ravichandran Somu said...

பரிதி நிலவன் - தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

Ravichandran Somu said...

பா.ரா - அண்ணே, Dr.சாம் அவர்களைப்பற்றி இந்த தொடரை ஒரே மூச்சில் தொடர்ந்து எழுதி முடித்தற்கு தாங்கள் தொடர்ந்து அளித்து வந்த ஊக்கமும் ஆதரவும் முக்கிய காரணம்.

//இந்த கட்டுரையை, என் தளத்தில் லிங்க் கொடுக்க விருப்பம். உங்கள் அனுமதிக்குப் பிறகு செய்யணும்//

நான்கு வருடங்களுக்குப் பிறகு வலைப்பதிவில் எழுத வந்திருக்கும் எனக்கு கிடைத்த் மிகப் பெரிய அங்கீகாரம். நன்றி என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட முடியாது! கட்டாயம் செய்யுங்கள்.

ரோஸ்விக் said...

ஜோசப் அடுத்த மணற்கேணி புத்தகத்திற்கு இந்த கட்டுரையையும் சேர்த்துக் கொள்ளலாம். அண்ணே இருக்குற ஃபாஃர்மை பார்த்தல் இன்னும் சில பல கட்டுரை தேறும் போலிருக்கே! :-)

அண்ணே நிறைய தெரிந்துகொண்டேன். இன்னும் அவர் பல ஆண்டுகாலம் வாழட்டும்.

ரோஸ்விக் said...

ஜோசப் அடுத்த மணற்கேணி புத்தகத்திற்கு இந்த கட்டுரையையும் சேர்த்துக் கொள்ளலாம். அண்ணே இருக்குற ஃபாஃர்மை பார்த்தல் இன்னும் சில பல கட்டுரை தேறும் போலிருக்கே! :-)

அண்ணே நிறைய தெரிந்துகொண்டேன். இன்னும் அவர் பல ஆண்டுகாலம் வாழட்டும்.

Ravichandran Somu said...

ரோஸ்விக் -- Dr.சாம் பற்றிய அனைத்து இடுகைகளையும் படித்து கருத்து தெரிவித்தற்கு மிக்க நன்றி தம்பி!

பத்மா said...

wow

Ravichandran Somu said...

Pitroda to head National Innovation Council:

http://www.business-standard.com/india/news/pitroda-to-head-national-innovation-council/402345/

Balakumar Vijayaraman said...

அனைத்து பகுதிகளையும் வாசித்தேன். மிக அருமையான, துல்லிய விவரங்களுடன் கூடிய சிறந்த கட்டுரை. வாழ்த்தும், நன்றியும்.

உங்கள் அனுமதியுடனும், விவரங்களுடனும் கட்டுரையை, நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசை.

Ravichandran Somu said...

வி.பாலகுமார்-- தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

//உங்கள் அனுமதியுடனும், விவரங்களுடனும் கட்டுரையை, நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசை//

மிக்க மகிழ்ச்சி...தாரளமாக செய்யுங்கள்.

KASBABY said...

fantastic.i know little about am.but your blog tells all.interesting.Best wishes

Unknown said...

Recently I bumped with your blog. Fantastic and inspiring a lot.

Unknown said...

Recently I bumped with your blog. Fantastic and inspiring a lot.

selvarajan said...

உங்கள் அனுமதியுடனும், விவரங்களுடனும் கட்டுரையை, நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசை
i am working in cdot past 26 years

you can see this url u can find some youre old friends

www.cdot25years.com

selvarajan

selvarajan@yahoo.com