வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Friday, September 10, 2010

*9*: கர்நாடக சங்கீதம்

முஸ்லிம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகள்!

கர்நாடக சங்கீதம்

நான் சிறுவனாக இருந்தபோது பார்த்து, கேட்டு வளர்ந்தது தப்பாட்டம், கரகாட்டம், அரிச்சந்திரா, ராமர், வள்ளித்திருமணம் போன்ற தெருக்கூத்து நாடகங்கள். எனவே 23 வயது வரை கர்நாடக சங்கீதம் என்றால் விலை என்ன என்றுதான் கேட்பேன். அப்படி ஒரு ஞானம்! ஆனால்... இன்று கர்நாடக சங்கீத இசை கேட்பது என்பது என்னுடைய முக்கியமான பொழுதுபோக்கு மற்றும் Relaxation! இதற்கு காரணம்... என் நண்பன் ராஜாராம்! நானும் ராஜாராமும் 10-ம் வகுப்பு முதல் B.E வரை ஏழு வருடங்கள் ஒரே வகுப்பு... ஒரே பெஞ்ச்.

1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் C-DOT-ல் வேலை கிடைத்து பெங்களூர் சென்றேன். அப்போது ராஜாராம் I.I.Sc-ல் M.E முடித்துவிட்டு Ph.D பண்ணிக்கொண்டிருந்தான். எனது கல்லூரி நண்பர்கள் பலர் I.I.Sc பக்கத்தில் யஷ்வந்த்பூரிலுள்ள லாட்ஜ் ஒன்றில் மாத வாடகையில் தங்கியிருந்தார்கள். நானும் அங்கே சென்று அடைக்கலமானேன். நான் வேலை நேரம் போக பெரும்பாலும் ராஜாராமனுடன் அவன் ஹாஸ்டல் ரூமில்தான் இருப்பேன். அப்போது அவன் கர்நாடக இசை கேசட்டுகளைப் கேட்டுக்கொண்டிருப்பான். நான் அவன் ரூமுக்கு சென்றவுடன் செய்யும் முதல் காரியம் “டேய்.. என்னடா இந்த ஆளு/அம்மா ஆஆஆ.........ன்னு கத்திகிட்டு இருக்காங்க. இதப்போய் கேட்டுகிட்டுயிருக்கே.. I.I.Sc-க்கு  வந்து கெட்டு போயிட்டடாஎன்று சொல்லி டேப்ரிக்கார்டை ஆப் பண்ணி விட்டு சினிமா பாடல் கேசட்டை சுழல விடுவேன். ஆரம்பத்தில் இதைப்பற்றி ராஜாராம் ஒன்றும் கண்டு கொள்ள மாட்டான்.

ஒரு சில மாதங்கள் கழித்து “டேய்.. நானும் ஒன்ன மாதிரிதான் இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தேன். என்னோட பிராமின் நண்பர்கள்தான் எனக்கு சொல்லிக்கொடுத்தார்கள். இத கொஞ்சம்.. கொஞ்சமா கேட்டு பாருடா. அப்ப இந்த இசையின் அருமை புரியும்என்றான்.

Ph.D செய்யும் அறிவாளி சொன்னா சரியாத்தான் இருக்குமென நினைத்து “சரிடா.. நானும் கேட்டுப்பார்க்கிறேன்என்றேன்.

அப்படி வா. வழிக்குஎன்று சொல்லிவிட்டு கர்நாடக இசை என்றால் என்ன? தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர், சியாம சாஸ்திரிகள் மூவரும் சங்கீத மும்மூர்த்திகள் மற்றும் கல்யாணி, சண்முகப்பிரியா, ரஞ்சனி, பைரவி, காப்பி அப்படீன்னு ராகங்கள் என்று என்னமோ சொன்னான்.
“எனக்கு தெரிஞ்சதெல்லாம் குடிக்கிற காப்பிதாண்டா.. ஆனாலும்
கல்யாணி, சண்முகப்பிரியா, ரஞ்சனி, பைரவி அப்படீன்னு பிகர் பெயர்களா நீ சொல்றதனால.. ஒரு கிக் இருக்கும்போல இருக்குடா!

நான் சொன்னது ஒனக்கு ஒன்னும் புரிஞ்ரிக்காதுன்னு எனக்கு நல்லா தெரியும் என்று சொல்லிக்கொண்டே ஒரு கர்நாடக சங்கீத பாடலை போட்டு இத நல்லா கேளு என்றான். கேட்டேன். பிறகு அதே ராகத்திலுள்ள சில சினிமா பாடல்களை போட்டு இந்த பாடல்களையும் கேளு என்றான். கேட்டேன்.

“கர்நாடக சங்கீத பாடலுக்கும்.. இந்த சினிமா பாடல்களுக்கும் என்ன ஒற்றுமை?

எல்லா பாடல்களும் ஒரு சில சமயங்களில் கேட்கும்போது ஒரே மாதிரியா இருந்ததுடா

Good…இந்த பாடல்கள் எல்லாம் ஒரே ராகம்டா

சட்டென ஏதோவொரு ஈர்ப்பு ஏற்பட்டது. மேலும் ராஜா பல முக்கியமான ராகங்களின் கர்நாடக சங்கீத பாடல்கள் மற்றும் அந்த ராகத்திலுள்ள பாடல்கள் எல்லாவற்றையும் சொல்லி எழுதிக்கொடுத்து கேசட்டுகளை கொடுத்து கேட்க சொன்னான். அந்த சமயத்தில் என்னிடம் டேப் ரிக்கார்டர் கிடையாது. கர்நாடக இசையை கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் உடனே ஒரு டேப் ரிக்கார்டர் வாங்கி ராஜாராம் கொடுத்த கேசட்டுகளையும், பாடல்களையும் கேட்க ஆரம்பித்தேன். கர்நாடக இசை கேட்க ஆரம்பித்தவுடன் எனக்கு முதலில் பிடித்தது.. பாடகர் பல விதங்களில் ஸ்வரங்கள் பாடுவது அதை வயலினிஸ்ட் பாலோ செய்வது. மிருதங்க வித்வானின் தனி ஆவர்த்தனம் ஆகியவை. இந்த ஆர்வத்தில் தொடர்ச்சியாக கேட்க ஆரம்பித்தேன்.

பையனுக்கு கர்நாடக சங்கீதத்தில் ஆர்வம் வந்துவிட்டதை தெரிந்துகொண்ட ராஜா அடுத்த தூண்டிலை எனக்கு வீசினான்.

இந்த வெள்ளிக்கிழமை சாயங்கலாம் மல்லேஸ்வரம் கோவிலில் கச்சேரி இருக்கு நான் போறேன்.. நீயும் வற்றியாடா?என்றான்.
சரியென்று சொல்லிவிட்டு கச்சேரிக்கு ராஜாராம் மற்றும் அவன் I.I.Sc நண்பர்களுடன் சென்றேன். ஹைதராபாத் சகோதரர்களின் கச்சேரி. அந்த கச்சேரி ஒரு மறக்க முடியாத அனுபவம். ஹைதராபாத் சகோதரர்களில் ராகாவாச்சாரிக்கு கனீரென்ற குரல்... சேஷாத்திரிக்கு சற்று மென்மையான குரல். இருவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு  பாடுகிறார்கள்.... மிருதங்கத்தில் திருவாரூர் பக்தவச்சலம் அதகளமாக பின்னி பெடலெடுக்கிறார்... வயலின் வித்வானும் அருமையாக வாசிக்கிறார். கர்நாடக இசை, ராகங்கள் பற்றி எதுவும் தெரியாத நான் ஏதோ ஒரு சக்தியின் பிடியில் மெய்மறந்து கேட்டேன். கச்சேரி முடிந்ததும் ராஜாவிடம் சொன்னது.

ராஜா.. இனிமேல் எங்கு கச்சேரிக்கு போனாலும். என்னையும் கூட்டிக்கிட்டு போடா
அடுத்து சென்ற கச்சேரி கத்ரி கோபால்நாத்தின் சாக்ஸபோன் கச்சேரி. எனக்கு சிறு வயதிலிருந்து நாதஸ்வரம், மேளம் கேட்க மிகவும் பிடிக்கும். காரணம்.. எட-அன்னவாசல் கிராமத்திலிருக்கும் என் அம்மா வழி தாத்தா  வீட்டிற்கு பக்கத்தில் நாதஸ்வர, மேள வாத்திய கலைஞர்கள் வாழ்ந்தார்கள். சிறுவனாக தாத்தா வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் வாசிப்பை கேட்பேன். கதரியின் சாக்ஸபோன் இசை நாதஸ்வர இசை போன்று இருந்ததால் சட்டென்று சாக்ஸ் இசை மீது அளவில்லா ஆர்வம். சாக்ஸபோன் ஒரு வெஸ்டர்ன் இசைக்கருவி அதில் கர்நாடக சங்கீத சுரங்கள் வாசிப்பது மிகவும் கடினம். கதரி ஒரு ஜீனியஸ் என்றான் ராஜா. அன்றிலிருந்து இன்றுவரை கதிரி கோபால்நாத்தின் சாக்ஸபோன் இசைக்கு நான் அடிமை!
நானும் ராஜாராமும் மாதா மாதம் HMV சென்று M.S.சுப்புலட்சுமி, D.K.பட்டம்மாள், M.L.வசந்தகுமாரி, T.N.சேஷகோபாலன்,T.Vசங்கரநாரணன், ஹைதராபாத் சகோதரர்கள், மகாராஜபுரம் சந்தானம், கதிரி கோபால்நாத், மாண்டலின் சீனிவாசன், சுதா ரகுநாதன் etc., போன்ற சங்கீத வித்வான்களின் கேசட்டுகளை பட்டியல் போட்டு வாங்கினோம். அந்த பழக்கம் இன்று வரை தொடர்கிறது!

சென்னை டிசம்பர் மாத சங்கீத கச்சேரிகள் கேட்பதற்காக நானும் ராஜாராமனும் 1992-ஆம் ஆண்டு டிசம்பரில் சென்னை சென்று வரும் அளவிற்கு என் கர்நாடக சங்கீத ஆர்வம் வளர்ந்துவிட்டது. அதன்பிறகு, பாஸ்டன், சிங்கப்பூரில் கச்சேரிகள் நடக்கும்போது வாய்ப்பு கிடைக்கும்போது கச்சேரிகளுக்கு சென்று வந்துகொண்டிருக்கிறேன்.

நான் முறையாக கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டவனல்ல. இன்றுவரை எனக்கு ராகங்களின் ஆரோகனம், ஆவரோகனம் பற்றி எதுவும் தெரியாது. ஹம்சத்வனி, ஆபேரி, சண்முகப்பிரியா, கரகரப்பிரியா, கல்யாணி, நாட்டை, மோகனம், சிவரஞ்சனி, சுப பந்துவரளி etc., போன்ற முக்கியமான ராகங்களின் பாடல்களை கேட்டு Pattern Recognition முறையில் ராகங்களை தெரிந்து கொள்ள முடியும். நான் கர்நாடக சங்கீதம் கேட்க கற்றுக்கொண்டது Pattern Recognition மற்றும் சினிமா பாடல்களின் மூலமாகத்தான்.
உதாரணமாக “சண்முகப்பிரியாராகத்தை எடுத்துக்கொள்வோம். இந்த ராகத்திலுள்ள “சரவணபவ என்னும் திருமந்திரம்என்ற இந்த பாடலைக் கேளுங்கள்.



இதே ““சண்முகப்பிரியாராகத்திலுள்ள சினிமாப் பாடல்கள்:

  1. மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன... (தில்லானா மோகனாம்பாள்)
  2. நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே... (பழைய பாடல் படம் தெரியவில்லை)
  3. தம்.. தம். தன தாளம் வரும் (புதிய வார்ப்புகள்)
  4. கண்ணுக்குள் நூறு நிலவா.. (வேதம் புதிது)
  5. தகிட.. தமிதி.. தந்தான.. (சலங்கை ஒலி)
இப்படி கேட்டு “கர்நாடக சங்கீதம்தெரியாதவர்கள் கற்றுக்கொள்ளலாம்.  திரைப்படப்பாடல்கள் மூலமாக கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்ள சிகாகோவிலுள்ள தமிழ் மொழி அறக்கட்டளையின் நிறுவனர் திரு. ராம்மோகன் அவர்களின் முயற்சியில் “திரைப்படப் பாடல்களில் மரபிசைஎன்ற தலைப்பில் 7 CD-கள் உள்ள தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்கள். அதன் விவரம் இங்கே.


எனக்கு கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால்.. என் குழந்தைகள் இருவரும் தற்போது கர்நாடக சங்கீதம் கற்றுகொண்டு வருகிறார்கள். மகளின் பெயர் சுருதி!

வேலை டென்சன் மற்றும் மன அழுத்தங்கள் இருக்கும்போது நான் ரிலாக்ஸ் செய்யும் முறை இதுதான். ஒரு மணி நேரம் வியர்த்துக்கொட்ட மெது ஓட்டம் அல்லது ஜிம்மில் workout. பிறகு வெண்ணீரில் நல்ல குளியல். Bose- ஹோம் தியேட்டரில் ஒரு கர்நாடக இசைவட்டை சுழலவிட்டுவிட்டு கையில் பியர்! அடடா.... அந்த சுகத்தை அனுபவித்து பார்த்தால்தான் தெரியும்.

இசை என்பது நாம் கேட்டு மகிழ கடவுள் நமக்கு கொடுத்திருக்கும் ஒரு அற்புதமான கலை. காலில் சக்கரம் கட்டிக்கொண்டு அலையும் இந்த அவசர வாழ்க்கையில் உங்களுக்கு பிடித்த இசையை தினமும் கேட்டு மகிழுங்கள். குறிப்பாக படுக்க போகும் முன்பு கண்ட குப்பை சீரியல்களையும், செய்திகளையும் TV-யில் பார்க்காமல் அமைதியான இசையை கேட்டுக்கொண்டு ஒரு நல்ல புத்தகத்தை ஒரு அரை மணி நேரம் படியுங்கள். ஆனந்தமாக தூக்கம் வரும்!


எனக்கு கர்நாடக இசையை சொல்லிக்கொடுத்து அறிமுகப்படுத்திய என் நண்பன் ராஜாராமுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!


M.S.சுப்புலெட்சுமி அம்மாவின் தெய்வீக குரலில் இந்த கரகரப்பிரியா ராக பாடலைக் கேட்டு பாருங்கள்! You'll start liking carnatic music!


                   *           *           *

23 comments:

Simulation said...

ரவிச்சந்திரன்,

தமிழ்த் திரையிசையில் ராகங்கள் என்ற தலைப்பில் பல இடுகைகள் இட்டுள்ளேன். உங்களுக்குப் பிடிக்கின்றதாவென்று சொல்லுங்கள்.

http://simulationpadaippugal.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

- சிமுலேஷன்

Simulation said...

இதையும் பாருங்கள்.

http://ragachintamani.blogspot.com/

- சிமுலேஷன்

அறிவிலி said...

நண்பர்களின் மூலமாகவே நமது ரசனைகளும் ஈர்ப்புகளும் மாறுகின்றன எனபது நிதர்சனமான உண்மை.

நட்சத்திரப் பதிவருக்கு வாழ்த்துகள்.

அது ஒரு கனாக் காலம் said...

வேலை டென்சன் மற்றும் மன அழுத்தங்கள் இருக்கும்போது நான் ரிலாக்ஸ் செய்யும் முறை இதுதான். ஒரு மணி நேரம் வியர்த்துக்கொட்ட மெது ஓட்டம் அல்லது ஜிம்மில் workout. பிறகு வெண்ணீரில் நல்ல குளியல். Bose- ஹோம் தியேட்டரில் ஒரு கர்நாடக இசைவட்டை சுழலவிட்டுவிட்டு கையில் பியர்! அடடா.... அந்த சுகத்தை அனுபவித்து பார்த்தால்தான் தெரியும்//


எனக்கு டிரைவ் செய்து கொண்டே ஐ பாடல் கர்நாடக இசை கேட்பது மிகவும் பிடித்த விஷயம் ... இத்தனை வயதில் அதை கற்று கொள்ள பிரம்ம பிரயர்த்தனம் செய்கிறேன் ... கடவுள் சித்தம் என்னமோ , நீ நன்றாக ரசித்தாலே போதும் ..அப்படிங்கற மாதிரி இருக்கு.

உங்களுக்கு வாய்ப்பும் /நேரமும் கிடைத்தால் ராதா கல்யாணம் / சீதா கல்யாணம் போன்ற நிகழ்சிகளுக்கு போய் வரவும் ... ரெண்டு / மூணு நாள் விடிய விடிய சங்கீதம் தான், பக்தியும் இருந்தால் ரொம்பவம் நல்லது ... பாகவதர் மெய் மறந்து ஒன்றி பாடுவார் , நடுவில் நாம் எல்லாம் விழிப்புடன் இருக்கவேண்டும் என்பதற்காக , இடையிடையில் நாமவெளி ... ரொம்ப வேகமாக , சின்ன சின்ன வார்த்தைகளால் இருக்கும் ... ஒரு முறை போனால் மறக்க மாட்டீர்கள் ... திரும்ப திரும்ப போவீர்கள்

ஜோதிஜி said...

வேலை டென்சன் மற்றும் மன அழுத்தங்கள் இருக்கும்போது நான் ரிலாக்ஸ் செய்யும் முறை இதுதான். ஒரு மணி நேரம் வியர்த்துக்கொட்ட மெது ஓட்டம் அல்லது ஜிம்மில் workout. பிறகு வெண்ணீரில் நல்ல குளியல். Bose- ஹோம் தியேட்டரில் ஒரு கர்நாடக இசைவட்டை சுழலவிட்டுவிட்டு கையில் பியர்! அடடா.... அந்த சுகத்தை அனுபவித்து பார்த்தால்தான் தெரியும்//

தலைவரே இங்கே அப்டியெல்லாம் வாய்ப்பில்லை, நேரா தெரு முக்குக்கு போனா டாஸ்மார்க் வரும், பக்கத்துல ஒரு சாக்கடை, அதுல ஒரு வண்டிக்கடை, ஊத்திக்கிட்டு துப்பிக்கிட்டு தின்னுட்டு வாந்தி மேல மிதிக்காம ..........

எதிரே வர்ற மாமாக்கிட்ட பிடிபடாமா
பொண்டாட்டி தூங்கிட்டாளான்னு பார்த்துட்டு பூனை மாதிரி உள்ள நுழைந்து......

அது ஒரு கனாக் காலம்.......

இப்படித்தான் நாங்கல்லாம் ரிலாக்சு செய்யுறோம்.

எரிச்சல கௌப்பாதிஙக சுந்தர்.

ஜோதிஜி said...

ரவி உங்கள் மற்றொரு விருப்பங்களையும் உணர்ந்து கொண்டேன்.

சகாதேவன் said...

கர்நாடக சங்கீதம் பற்றிய உங்கள் பதிவு அருமை. சண்முகப்ரியாவில் அமைந்த பாடல்களில் -- "நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே உன்னை..." -- சதாரம் படத்தில் டி.எம் எஸ் பாடியது. ஜி.ராமநாதன் இசை. படத்தில் ஜெமினி கணேசன். எனக்கு ரொம்ப பிடிக்கும்.
சகாதேவன்

dogra said...

இன்றைய உலகத்தின் வாழ்க்கை முறை காரணமாக மன உலைச்சல் ஏற்பட்டு இளைஞர்கள் உடலை உதர் வைக்கும் பாப் பாடல்களை தேடுகிறார்கள். ஆனால் அந்த பாடல்கள் மன உலைச்சலை அதிகரிக்கின்றனவே தவிர குறைப்பதே இல்லை.

நல்ல பொருத்தமான கட்டுரை. நன்றி.

ஜோசப் பால்ராஜ் said...

தஞ்சாவூர் தண்ணியிலயும், திருவையாறு காத்துலயும் சங்கீதம் இருக்கும்னு சிந்துபைரவி படத்துல ஒரு வசனம் வாரும்.

நாம தஞ்சாவூர்காரங்க, தானாவே சங்கீதம் வந்துரும்.

கத்ரி கோபல்நாத் - நான் பள்ளிக்கூடம் படிக்கிற காலத்துல இருந்தே அவரோட இசைக்கு ரசிகன். அதே போல சுதா ரகுநாதன், நித்ய ஸ்ரீ, உன்னிக்கிருஷ்ணண் கச்சேரிகள் தஞ்சாவூர் பகுதிகள்ல நடக்கிறப்ப மிஸ் பண்ணாம பார்த்துடுவேன்.

PRABHU RAJADURAI said...

இந்தப் பதிவினைப் படிப்பதே ஏதோ உற்சாகமளிப்பதாக உள்ளது. முன்பு லலிதா என்பவர் மரத்தடி குழுவில் கர்நாடக ராகங்கள் குறித்து சுவராசியமாக எழுதுவார். உங்களைப் போல கேள்வி ஞானம் என்று அடக்கமாக கூறிக்க்கொண்டாலும், கர்நாடக சங்கீதம் தெரியாத எவருக்கும் அதனைப் படிக்க ஆர்வமாக இருக்கும்...

ஜோ/Joe said...

ஆர்வத்தை தூண்டி விட்டு விட்டீர்களே அண்ணா :)

தருமி said...

//Bose- ஹோம் தியேட்டரில் ... கையில் பியர்! அடடா.... அந்த சுகத்தை அனுபவித்து பார்த்தால்தான் தெரியும்.//

இல்லீங்க .. !

Mahi_Granny said...

pattern recognition எல்லாம் வருமா எனத் தெரியவில்லை. வாசிக்கும் போது கற்றுக் கொள்ள ஆசைவருகிறது.

எம்.எம்.அப்துல்லா said...

நானும் கேள்வி ஞானம் ஆளுதான்.அப்படியே பிக்கப் பண்ணி சினிமாவுலயும் பாடிட்டேன் :)

Unknown said...

வாழ்நாளில் ஒரு முறையாவது கர்நாடக சங்கீதம் கேட்காதவன் எதையோ இழக்கிறான்.

ஏழு சுவரங்கள் இல்லாத எந்த பாட்டும் வராது.

பல இசையமைப்பாளர்கள் திரையிசையில் தோய்த்துக்
கொடுத்தார்கள். என்னவென்று தெரியாமலேயே கேட்டோம்.

கிழ் வரும் பாட்டை யூ டூப்பில் கேட்கவும்.

NILAVE NEE INTHA SETHI SOLLAAYO=TAMIL FILM SONG

http://www.youtube.com/watch?v=6kFWetbQNZ8

Ravichandran Somu said...

Simulation-- தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. மிக அருமையாக தொகுத்துள்ளீர்கள். வாழ்த்துகள்! தங்களின் வலைத்தளம் எனக்கு முன்பே அறிமுகம். சில கட்டுரைகள் படித்திருக்கிறேன். ஆனால்.. பின்னூட்டம் போட்டதில்லை:(

அறிவிலி- நன்றி அண்ணே!

அது ஒரு கனாக் காலம்-- தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

Ravichandran Somu said...

ஜோதிஜி-- தலைவரே, பியர் மற்றும் ரெட் ஒயின் சாப்பிடுவதற்கு வீட்டு CEO-விடமிருந்து அனுமதி உண்டு. I don't take any other drinks!

சகாதேவன்-- தகவலுக்கு நன்றி

sinthanai-- நன்றி

ஜோசப் பால்ராஜ்-- தம்பி, உனக்கும் கர்நாடக சங்கீத கச்சேரிகள் கேட்க பிடிக்கும் என்பது மிக்க மகிழ்ச்சி. உங்க ஊர் திருவையாருக்கு பக்கத்துல இருக்கிற ஊராச்சே:)

Ravichandran Somu said...

Prabhu Rajadurai-- நன்றி வக்கீல் சார்.

ஜோ-- கேட்டுப் பாருங்கள் ஜோ.

தருமி-- ஐயா, சிங்கபூருக்கு இன்னொரு டிரிப் வாங்க ... நம்ம வீட்ல பார்ட்டி வச்சிடலாம்:)

Mahi_Granny-- நன்றி. ஒரு கச்சேரிக்கு போய் கேட்டுப் பாருங்கள். ஆர்வம் வந்து விடும்

Ravichandran Somu said...

எம்.எம்.அப்துல்லா-- தம்பி, தங்களுக்கு பிடித்த சினிமாத்துறையில் மென்மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகள்!

கே.ரவிஷங்கர்-- நன்றி.

//வாழ்நாளில் ஒரு முறையாவது கர்நாடக சங்கீதம் கேட்காதவன் எதையோ இழக்கிறான்//

நிதர்சனமான உண்மை!

ஜோதிஜி said...

ஜோதிஜி-- தலைவரே, பியர் மற்றும் ரெட் ஒயின் சாப்பிடுவதற்கு வீட்டு CEO-விடமிருந்து அனுமதி உண்டு. I don't take any other drinks!


பெருமூச்சு ரவி. நமக்கு அந்தப் பிரச்சனையே இல்லை.
,
,
,
,
,
,
,
,
,
,
,

நாங்க தான் காந்திதாத்தாவுக்கு இப்ப பேரனா மாறிட்டோம்ல..........

Ravichandran Somu said...

//ஜோதிஜி said...

நாங்க தான் காந்திதாத்தாவுக்கு இப்ப பேரனா மாறிட்டோம்ல..........//

Good boy!

NITHYAVANI MANIKAM said...

arumai nanba....

karnataka sangeethatil pala arputangal irukinrane...

http://nithyavani.blogspot.com/

inthe valaipagutiyil karnataka sangeetatai patriya sila vilakangal irukinrane

RVS said...

அற்புதம் ரவி! நல்ல ரசனை உங்களுக்கு.

பிடித்த பானங்களுடன் பாடல் கேட்பது இனிதுதான்! :-)