வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Saturday, June 26, 2010

Dr.Sam Pitroda - Part 2

முனைவ்ர். சாம் பிட்ரோடா (2)


சாம் சிகாகோ நகரிலிருந்து இந்திய தொலைபேசித்துறை (DOT-Department of Telecommunications) நிறுவனத்தின் தலைவர் அவர்களுக்கு தன்னைப்பற்றியும், இந்திய தொலைத்தொடர்பின் கட்டமைப்புக்கு செய்ய வேண்டிய செயல் திறண்கள் பற்றி ஒர் கடிதம் எழுதினார். ஆனால்.. அந்தக் கடிதத்திற்கு எந்த பதிலும் வரவில்லை. மீண்டும் ஒரு நீண்ட கடிதம் எழுதினார். அதே கதைதான்.... நோ பதில். தனது முயற்சியில் சளைக்காமல் மூன்றாவது கடிதம் எழுதினார். மூன்றாவது கடிதத்திற்கு DOT தலைவரிடமிருந்து பதில் வந்தது. அதில் தன்னை டில்லியில் வந்து நேரில் பார்க்குமாறு எழுதியிருந்தார். இதற்கு எடுத்துக்கொண்ட காலம் ஏழு மாதங்கள்!

சாம் உடனே சிகாகோவிலிருந்து கிளம்பி டில்லி வந்து DOT தலைவரை பார்த்து தனது செயல் திட்டங்களை விளக்கி கூறினார். அதைக் கேட்டு மிகவும் வியப்படைந்த DOT தலைவர், உங்கள் திட்டங்கள் அருமையானவை. ஆனால் அதற்கு நிறைய செலவுகள் ஆகும். நிறைய கொள்கை அளவிலான மாற்றங்கள் (Policy Changes) தேவை. அதற்கான அதிகாரம் எனக்கும் கிடையாது, தொலைத்தொடர்பு அமைச்சருக்கும் கிடையாது என்றார்.

“அப்படியென்றால் அந்த அதிகாரம் யாரிடம் உள்ளது?என்று கேட்டார் சாம்.

“பிரதமர்

“நான் பிரதமர் இந்திரா காந்தியை சந்திக்க வேண்டும். உடனே ஏற்பாடு செய்து கொடுங்கள்என்றார் சாம்.

இதைக்கேட்டு ஒரு கணம் அதிர்ச்சியாகிவிட்டார்  DOT தலைவர். என்னடா இவன் தொடர்ந்து லெட்டர் எழுதி இம்சை கொடுக்கிறானேன்னு கூப்பிட்டு பேசுனா, சர்வ சாதாரணமா பிரதமரிடம் அழைத்துக்கொண்டு போன்னு சொல்றான் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார். ஆனால 39 வயது சாமின் இளமை, அவருடைய சாதனைகள், அவருடைய கண்களில் இருந்த ஒரு வெறி ஆகியவற்றை தெரிந்துகொண்ட DOT தலைவர் என்னால் முடிந்த வரை ஏற்பாடு செய்கிறேன். ஆனால் உடனே முடியாது, பல நாட்கள் ஆகலாம் என்கிறார். பராவாயில்லை நான் ஒரு மாதம் வரை டில்லியில் தங்கும் திட்டத்தோடுதான் வந்துள்ளேன். வெயிட் செய்கிறேன் என்றார் சாம்.

DOT தலைவர் தனது தொடர்புகளை பயன்படுத்தி சாமிற்கு இரண்டு வாரங்கள் கழித்து பிரமதர் இந்திரா காந்தியிடம் பேசுவதற்கு 10 நிமிடங்கள் அப்பாயின்மெண்ட் வாங்கி கொடுத்தார். ஆனால் சாம் எனக்கு 10 நிடங்கள் போதாது. 10 நிமிடங்களில் ஒன்றும் தெளிவாக எடுத்துக் கூற முடியாது. ஒரு மணி நேரம் வேண்டும் என்றார். என்னடா இவனோட ஒரே தொல்லையா போச்சே என்று நினைத்துக்கொண்டே பிரதம்ர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது பிரதமர் அலுவலகம் முடியாது என்று கூறிவிட்டது. சாம் DOT தலைவருக்கு மிக்க நன்றி கூறிவிட்டு, பிரதமரிடம் ஒரு மணி நேரம் அப்பாயின்மெண்ட் கிடைக்கும்போது எனக்கு தெரியப்படுத்துங்கள் நான் திரும்பி வருகிறேன் என்று தெரிவித்துவிட்டு சிகாகோ திரும்பி வந்துவிட்டார்.

பிரதமரிடம் கிடைத்த 10 நிமிட அப்பாயின்மெண்டை வேண்டாமென்று கூறி திரும்பிச் சென்ற சாமின் உறுதி DOT தலைவருக்கு அவரின் மேல் மேலும் ஈர்ப்பை ஏற்படுத்தியது. தனது நண்பர்களின் உதவியுடன் சாமைப்பற்றியும் அவருடைய செயல் திட்டங்கள் பற்றியும் அப்போது தொழில் நுட்பங்களில் அதிக ஆர்வம் கொண்ட பைலட்டாகா பணியாற்றிக் கொண்டிருந்த ராஜீவ் காந்தியிடம் கொண்டு சேர்த்தார். ராஜீவ் காந்தி சாமைப் பற்றி விபரங்களைச் சேகரித்து கொடுக்குமாறு அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தையும், RAW-விடம் கேட்டிருக்கிறார் (Background and Security checks)  

சாம் டில்லியிலிருந்து சிகாகோ திரும்பி ஆறு மாதாங்களாகியும் DOT தலைவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை என்பதால் ராக்வெல் (Rockwell) நிறுவனத்தில் அவருடைய துணைத் தலைவர் (Vice President) வேலையில் கவணம் செலுத்த ஆரம்பித்து விட்டார். 1984 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சாமிற்கு பிரதமர் அலுவகத்திலிருந்து அவருக்கு பிரதமர் இந்திரா காந்தியுடன் ஒரு மணி நேர அப்பாமெண்ட் பற்றிய தகவல் வருகிறது. பிரதமர் அலுவகத்திற்கு தனது வருகையை உறுதி செய்து தகவல் அனுப்பிவிட்டு பிரதமருடனான சந்திற்பிக்கு தேவையான பிரசண்டேசன் சிலைடுகள் (Presentation slides) தாயார் செய்யும் வேலைகளில் இறங்கி விட்டார்.

1984 ஆம் ஆண்டு தொடக்கத்தில் டில்லிக்கு வந்து பிரதமரை சந்திக்க் சென்றார். அங்கு போனால் பிரதமர் இந்திரா காந்தி, அவருடைய பக்கத்தில் ராஜீவ் காந்தி மற்றும் காபினெட் மந்திரிகள் அந்த கான்பரன்ஸ் அறையில். தன்னைப் பற்றி அறிமுகப் படுத்திக்கொண்டு இந்திய தொலைத்தொடர்பின் கட்டமைப்பின் அவசியம், அதற்கான தொலைநோக்கு திட்டம் பற்றிய தனது பேச்சை தொடர்ந்தார். இந்திரா காந்தி மற்றும் அமைச்சர்களிடமிருந்து சரமாரியான கேள்விகள். எல்லாவற்றிற்கும் பொறுமையாக பதிலளித்து விளக்குகிறார். அவர் அளித்த தொலைநோக்கு திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:


1. இந்தியாவின் கிராமங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தியா தன்னுடைய சொந்த தொழில்நுட்பத்தில் எண்ணியல் மின்நிலைமாற்றிகளை (Digital Switches) தாயாரிக்க வேண்டும்.
2. இந்திய தொலைப்பேசித்துறை காலாவதியான தொழில்நுட்ப இயந்திரவியல் நிலைமாற்றிகளை (Mechanical Switches) இனிமேல் வாங்கக்கூடாது
3. இந்தியா தன்னுடைய சொந்த தொழில்நுட்ப எண்ணியல் மின்நிலைமாற்றிகள் சந்தைக்கு வரும்வரையில் அடுத்த் ஐந்து ஆண்டுகளுக்கு பெரு நகரங்களின் தேவைக்கு மேல் நாட்டு நிறுவனங்களிலிருந்து விலை அதிகமானலும் எண்ணியல் மின்நிலைமாற்றிகளை வாங்க வேண்டும்  

 ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கூட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. கூட்டம் முடிந்தவுடன் ராஜீவ் காந்தி வந்து சாமின் கைகளைக் குலுக்கி, கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்து இந்த சந்திற்பிக்கு நான்தான் ஏற்பாடு செய்தேன் என்கிறார். தன் வயதுடைய இளைஞரான ராஜீவ் காந்தியை நன்றியுடன் பார்க்கிறார் சாம் (ராஜீவ் சாமைவிட இரண்டு வயது இளையவர்). ஒரு ஆழமான நட்பின் தொடக்கம்.......!!
                                                      -தொடரும்


3 comments:

பா.ராஜாராம் said...

சும்மா சுறு சுறுன்னு போகுது ரவி.

தொடரவும்..

ரவிச்சந்திரன் said...

பா.ரா - மிக்க நன்றி அண்ணா!

ரோஸ்விக் said...

விறுவிறுப்பாத்தான் இருக்குது அண்ணா..