மு.கு:
நான் சாம் பிட்ரோடா அவர்களுடன் 1991 ஆம் ஆண்டு டில்லியில் ஒரு மாதம் பணியாற்றியிருக்கிறேன். C-DOT-ல் இரண்டு ஆண்டுகள் (1992-1994, Bangalore) பணியாற்றியிருக்கிறேன். எனவே சாம் அவர்களைப் பற்றி நான் தெரிந்து கொண்ட, படித்த செய்திகளின் அடிப்படையில் இந்த கட்டுரையை எழுதி வருகிறேன். இது ஒரு மொழி மாற்றம் (Translation) அல்ல.
முனைவ்ர். சாம் பிட்ரோடா (3)
ராஜீவ் காந்தியுடனான அந்த முதல் சந்திப்புக்குப் பிறகு சாமும் ராஜீவும் அடுத்த சில நாட்களில் பல முறை சந்தித்துப் பேசி நெருங்கிய நண்பர்களானார்கள். பிரதமர் இந்திரா காந்தியுடன் நடந்த சந்திப்பு முடிந்த ஒரு சில மாதங்களில் மத்திய மந்திரிசபை சாம் தலைமையில் இந்திய தொலைத்தொடர்பு ஆராய்ச்சி நிலையத்தை (C-DOT, Centre for Development of Telematics) அமைக்க 50 கோடி நிதி ஒதுக்கி ஒப்புதல் அளித்தது. 1984 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் C-DOT டில்லியில் தொடங்கப் பட்டது. சாம் பிரதமர் இந்திரா காந்தியிடம் கீழ்க்கண்ட உறுதிமொழிகளை அளித்தார்.
- C-DOT தொடங்கி மூன்று வருடத்திற்குள் 128 தொலைபேசி இணைப்புகள் கொண்ட முதல் தாணியங்கி கிராமப்புற எண்ணியல் நிலைமாற்றி தொலைபேசி இணைப்பகத்தை (128 Lines Rural Automatic Exchange) உற்பத்தி செய்து விடுவோம்.
- ஐந்து வருடத்திற்குள் நகரங்களுக்குத் தேவையான 10,000 தொலைபேசி இணைப்புகள் கொண்ட எண்ணியல் நிலைமாற்றி தொலைபேசி இணைப்பகத்தை (10,000 Lines Multi Base Module Digital Exchange) உற்பத்தி செய்து விடுவோம்.
சாமின் பெற்றோர்கள் சிகாகோவில் சாமுடன் செட்டிலாகிவிட்டார்கள். சாமின் குழந்தைகள் சிகாகோவில் படித்துக் கொண்டிருந்தார்கள். எனவே சாமின் குடும்பம் சிகாகோவிலிருக்க சாம் மட்டும் டில்லிக்கு வந்து C-DOT பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். தனக்கு அளிக்கப்பட்ட ஒரு காரியதரிசியுடன் சாம் 1984 ஆகஸ்ட் மாதம் C-DOTன் பணிகளைத் தொடங்கினார். சாம் தனக்கு சம்பளம் வேண்டாம் என்று கூறிவிட்டார். ஆனால் அரசங்கா நிறுவனத்தில் சம்பளம் இல்லாமல் வேலை பார்க்க முடியாது என்ற விதிமுறையின்படி சாம் பெற்றுக்கொண்ட சம்பளம் ஆண்டு ஒன்றுக்கு ஒரு ரூபாய். (அம்மாகூட தமிழக முதலைமைச்சராக ஒரு ரூபாய் சம்பளத்தில் ஊழலே செய்யாமல் மக்கள் பணி ஆற்றினார் ஒரு காலத்தில்!!!)
இந்தியாவில் உள்ள அனைத்து I.I.T (Indian Institute of Technology) மற்றும் சிறந்த பொறியியல் கல்லூரிகளுக்கு கேம்பஸ் இண்டர்வியூக்குச் சென்று மாணவர்க்ளிடம் உரையாற்றினார். சாமின் உத்வேக உணர்ச்சி மிகுந்த பேச்சைக்கேட்ட மாணவர்கள் C-DOTல் சேர முன் வந்தனர். இதில் பாதி பேர் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் மேல் படிப்புக்காக செல்லவிருந்தவர்கள்! ஒரே மாதத்தில் 50 சிறந்த இளம் பொறியிலாளர்களைச் தேர்வு செய்தார் சாம். இப்படி இரவு பகலாக உழைத்து C-DOTஐ உருவாக்கிக் கொண்டிருக்கும்போது இடியென வந்து தாக்கியது அக்டோபர் மாதத்தில் பிரதமர் இந்திரா காந்தியின் கொலை! ஆனால் அடுத்த பிரதமர் ராஜீவ் காந்தி! சாமின் நெருங்கிய தோழர். ராஜீவ் பதவி ஏற்றுக்கொண்ட ஒரு மாதம் கழித்து சாமிடம் சொன்னது “நம்முடைய தொலை நோக்கு திட்டத்தில் எந்த மாறுதலும் இல்லை. எவ்வளவு செலவானும் பரவாயில்லை. நான் துணை நிற்பேன். உங்கள் பயணத்தை தொடருங்கள்”.
மேல் அதிகாரிகளுக்கு சார் போடுதல், கூழை கும்பிடு போடுதல் போன்ற நிர்வாகத்தால் புரையோடிக் கிடக்கும் அரசாங்க அலுவலகங்கள் உள்ள இந்தியாவில் முதன் முதலில் C-DOT என்ற அரசாங்க நிறுவனத்தில் ”திறந்த பண்பாடு (Open Culture)” என்ற அமெரிக்க பாணி வேலை பார்க்கும் பண்பாட்டை கொண்டு வந்தவர் சாம். அதன்படி யாரும் சார் போடுதல் கூடாது, எல்லாரையும் பேர் சொல்லித்தான் கூப்பிட வேண்டும். எக்காரணம் கொண்டும் மேல் அதிகாரிகளைப் பார்த்து பாரும் எழுந்து நிற்கக் கூடாது, பயப்படாமல் தைரியமாக மீட்டிங்கில் பேச வேண்டும், தேவையென்றால் சாமை எதிர்த்துப் பேசி கேள்விகள் கேட்க வேண்டும். இவைகள் ஒரு சில உதாரணங்கள். மத்திய அரசாங்க நிறுவனங்களுக்கு சம்பள அடிப்படை உள்ளதால் C-DOT பொறியிலாளர்களுக்கு அதற்கு மேல் கொடுக்க முடியாது என்ற காரணத்தால் சாம் பிற சலுகைகளை அள்ளிக்கொடுத்தார். அவற்றில் ஒரு சில:
1. C-DOT செலவில் வசிக்க வீடு (C-DOT leased accommodation)
2. வீட்டிலிருந்து அலுவலகம் போய் வர கார்
3. 365 X 24 கேண்டினில் இலவச சாப்பாடு
4. விளையாடி ரிலாக்ஸ் செய்ய இண்டோர் விளையாட்ரங்கம்
5. அலுவலக பயணத்திற்கு விமானப் பயணம். அந்தக் கால கட்டத்தில் I.A.S அதிகாரிகளுக்குக் கூட விமானப் பயணம் கிடையாது. முதல் வகுப்பு ரயில் டிக்கெட்தான். முக்கியமான மூத்த I.A.S அதிகாரிகள்தான் விமானத்தில் பயணம் செய்ய முடியம்.
அந்த காலகட்டத்தில் மிகச்சிறந்த தனியார் நிறுவனங்களில் கூட இளம் இஞ்சீனியர்களுக்கு இது போன்ற சலுகைகள் கிடையாது! இந்த சலுகைகள் மற்றும் சாமின் வழிகாட்டுதலில் C-DOT இளம் பொறியாளர்கள் வேலை, வேலை, வேலை என்று ஒருவித வெறியோடு கடுமையாக உழைத்தார்கள். வேலை, சாப்பாடு மற்றும் விளையாட்டு என்று ஒரு கல்லூரி விடுதி போலத்தான் இருக்கும் C-DOT அலுவலகம். சாமுடைய குடும்பம் சிகாகோவிலிருந்ததால் தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் சாம் அலுவகத்தில்தான் இருப்பார். இளைஞர்களுடன் ஜாலியாக அரட்டை அடித்தல், டேபிள் டென்னிஸ் விளையாடுதல், முதுகில் தட்டிக்கொடுத்து வேலை வாங்குதல் என்று ஒரு சக நண்பன், சகோதரன்போல் பழகுவார். C-DOT தலைவர் என்று ஒரு சிறிய பந்தாகூட இருக்காது.
சாம் மறைந்த பிரதமர் இந்திரா காந்திக்கு கொடுத்த வாக்குறுதிப்படி 1987ஆம் ஆண்டு C-DOTன் சொந்த தொழில்நுட்பத்தில் உருவான 128 தொலைபேசி இணைப்புகள் கொண்ட முதல் தாணியங்கி கிராமப்புற இணைப்பகம் தாயார்!. இந்த சமயத்தில் C-DOTன் பொறியியலாளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 500 பேர். சராசரி வயது 25! டில்லி, பெங்களூர் என்ற இரு இடங்களில் அலுவலகங்கள்.
இந்தியாவின் பிரதமரும், தன்னுடைய நண்பருமான ராஜீவ் காந்தி முன்னிலையில் 128 இணைப்புகள் கிராமப்புற தொலைபேசி இணைப்பகம் (128 RAX – Rural Automatic Exchange) வழியாக 1987 ஆம் ஆண்டு தொலைபேசி இந்திய தொலைபேசித்துறை வரலாற்றில் சாதனை நிகழ்த்திக் காட்டினார்.
இந்த கிராமப்புற தொலைபேசி இணைப்பகத்தின் முக்கிய அம்சங்கள்:
1. உறுதியான வடிவமைபு (Rugged Design); குறைந்த மின்சாரத்தில் இயங்குவது (Less power consumption). கிராமங்களில் மின்சாரத் தடைகள் இருக்கும் என்பதால் A/C இல்லாமலேயே வேலை செய்யும்.
2. உலகிலேயே கிராமங்களுக்காக குறைந்த (128 Lines) தொலைபேசி இனணப்புகள் கொண்ட மிகச் சிறிய முதல் தானியங்கி எண்ணியல் நிலைமாற்றி இணப்பகம் (Digital Automatic Exchange)
3. பல வடிமைப்புகள் (Patents) கொண்டது
அடுத்து செய்ய வேண்டியது, இந்தக் கிராமப்புற தொலைபேசி இணைப்பகத்தை இந்திய தொலைபேசி கட்டமைப்பில் சோதனை செய்து (Field Trial) , அதிக அளவில் உற்பத்தி செய்வது (Mass Production). ஆனால் அதற்கு காத்திருந்தன இந்திய அரசாங்க ஊழல் அதிகாரிகளின் எதிர்புகள். அந்த எதிப்புகளை சாம் எப்படி சமாளித்தார்?
- தொடரும்
9 comments:
சி-டாக் நிறுவனத்தைப் பற்றி நான் சமீப காலமாகத்தான் தெரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளேன். அதன் சிருஷ்டிகர்த்தாவான சாம் பிட்ரோடா பற்றி நீங்கள் எழுதும் இந்தக் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. நன்றிகள்
Srinivasan - நன்றி நண்பரே.
Very good narration. Keep going.
Indian - Thanks
ராஜிவ் காந்தியின் பரம் விசிறியான எனக்கு இந்த தொடர் நிறைய புது விஷயங்களை தெரிந்து கொள்ள உதவியது. நன்றி
ராஜிவ் காந்தியின் பரம் விசிறியான எனக்கு இந்த தொடர் நிறைய புது விஷயங்களை தெரிந்து கொள்ள உதவியது. நன்றி
அருமையான தொடர் ரவி..
நான் சாம் பிட்ரோடாவை இந்திய ஊழல் அரசு இயந்திரத்தின் ஒரு பகுதி என எண்ணியிருந்தேன். இத்தொடர் கண்டு தெளிந்தேன்.
இன்னிக்கு தொலை தொடர்பில் நாம் கண்டிருக்கும் அசுர வளர்ச்சிக்கு சாம் இட்ட அடித்தளமே காரணம்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
அமுதா -- நன்றி மேடம்
ஸ்ரீராம் -- நன்றி. பாஸ்டன் வாழ்க்கை எப்ப்டி இருக்கிறது? - முன்னாள் பாஸ்டன்வாசி :)
இவ்வளவு நல்லவரா இந்த ஆபீசர்...? :-)) நன்றிகள் அவருக்கும் உங்களுக்கும்.
Post a Comment