வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Friday, June 25, 2010

Dr.Sam Pitroda

முனைவர். சாம் பிட்ரோடாஇந்திய தொலைத்தொடர்பு புரட்சிக்கு (Telecommunications revolution) வித்திட்டவரும், நான் எனது தொலைத்தொடர்பு துறையில் குருவாக பின்பற்றும் முனைவர்.சாம் பிட்ரோடா (Dr. Satyanarayan Gangaram Pitroda) அவர்களைப் பற்றிய கட்டுரை.

கடந்த பதினைந்து வருடங்களில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்ட தொழில்நுட்ப சாதனைகள் ஆகியவற்றால் இன்று இந்தியாவில் எல்லோரது கைகளிலும் செல்பேசி. போகுமிடங்கும் மக்கள் செல்பேசியில் பேசிக்கொண்டே செல்கிறார்கள் அல்லது SMS அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். வடிவேலு ஒரு படத்தில் அவர் பயணம் செய்யும் பேருந்தில் இருக்கும் இன்னொருவருடன் செல்பேசியில் பேசிக்கொண்டே பயணம் செய்வார்! இன்று இந்தியாவில் உள்ள செல்பேசிகளின் எண்ணிக்கைகள் கிட்டத்தட்ட 60 கோடி.

ஆனால்..

25 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் தொலைத்தொடர்பு கட்டமைப்பை (Telecommunications infrastructure) காயாலன் கடைக்கு ஒப்பிடலாம். ஒருவர் வீட்டில் கருப்பு கலரில் ஒரு தொலைபேசி இருந்தால் அவர் மிகப் பெரிய பணக்காரர் அல்லது பெரிய அரசு அதிகாரி. அந்த தொலைபேசியில் பெரும்பாலும் டயல் டோனுக்கு பதில் “கொர்என்ற சத்தம்தான் வரும் அல்லது வேலை செய்யாது. நீண்ட தூர (STD/ISD) அழைப்பு வசதிகள் கிடையாது. வெளி ஊர்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு பேச வேண்டுமானால் டிரங் கால் (Trunk Call) பதிவு செய்து விட்டு மணிக்கணக்கில் காத்து கிடக்க வேண்டும். 97% சதவீத கிராமங்களுக்கு தொலைபேசி இணைப்பு கிடையாது. இப்படி இருந்த இந்திய தொலைபேசித்துறையை 1984-ஆம் ஆண்டு சி-டாட், C-DOT (Centre for Development Telematics) என்ற இந்திய அரசின் தொலைத்தொடர்பு ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கி தலைமைப் பொறுப்பேற்று வழி நடத்தி ஆறு ஆண்டுகளில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி திரும்பிய பக்கமெல்லாம் PCO (Public Calling Office) எனப்படும் பொது தொலைபேசி நிலையங்கள் அமைத்து, கிராமங்களில் தொலைபேசி இணைப்பங்களை நிறுவி தொலைபேசியை சாமன்ய மக்கள்களும் உபயோகிக்கும் சேவையாக மாற்றி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தவர் சாம் பிட்ரோடா. எல்லோராலும் டாக்டர்.சாம் என்று அன்போடு அழைக்கப்படுபவர்.


சாம் பிட்ரோடா, 1942 ஆம் ஆண்டு மே 4ம் தேதி ஒரிஸ்ஸா மாநிலத்தில் உள்ள டிட்டலார்க் என்னும் கிராமத்தில் பிறந்தார். அவருடைய தந்தையார் குஜாராத் மாநிலத்திலிருந்து ஒரிஸ்ஸாவிற்கு குடி பெயர்ந்து வந்த ஓர் தச்சு ஆசாரி (carpenter). அவர் நடத்தி வந்த கடையில் வந்த வருமானத்தில் தன்னுடைய 8 குழந்தைகளையும் பள்ளியில் படிக்க வைத்தார். சாம் 11 வயதில் குஜாராத் மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தார். 22 வயதில் மாகாராஸ்டிரா சாய்ராவ் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் (Physics) முதுகலைப் பட்டம் பெற்றவுடன் அவரது தந்தை கொடுத்த $400 டாலர் பணத்துடன் 1964 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று சிகாகோ நகரில் உள்ள Illinois Institute of Technology  கல்லூரியில் மின்சாரத்துறை முதுகலை (M.S in Electrical Engineering) பட்டப்படிப்பில் சேர்ந்தார். எல்லா இந்திய மாணவர்களைப்போல பகுதி நேர வேலை பார்த்து அதில் கிடைத்த பணத்தைக்கொண்டு படிப்பை முடித்தார். சிகாகோவில் உள்ள GTE என்ற நிறுவனத்தில் வேலையில் சேர்ந்து 1974 ஆம் ஆண்டு வரை GTE  நிறுவனத்தில் எண்ணியல் மின்விசையமைப்பு (Digital Switching) என்ற துறையில் ஆராய்ச்சி பொறியாளராக பணியாற்றினார். அவர் கண்டுபிடித்த ஆராச்சிகளுக்காக வாங்கிய வடிவமைப்புகள் (Patents) முப்பதுக்கும் மேல். இந்தக் காலகட்டத்தில் அவர் ஒரு இந்திய பெண்ணை திருமணம் செய்து கொண்டு அமெரிக்க குடியுரிமையும் (US Citizenship) பெற்று தனது பெரும்பாலன சகோதர சகோதரிகளையும், பெற்றோர்களையும் அமெரிக்காவிற்கு அழைத்துக்கொண்டு விட்டார்.

சாம் தனது தந்தையாரின் அறிவுரையின்படி 1974 ஆம் ஆண்டு இரண்டு அமெரிக்க நண்பர்கள் கொடுத்த பணத்தை மூலதனமாக கொண்டு வெஸ்காம் ஸ்விட்சிங் (Wescom Switching, Inc)  எனற நிறுவனத்தை தொடங்கினார். 20 வடிவமைப்புகளை (Patents) கண்டுபிடித்து, ஆறு ஆண்டுகள் கழித்து அந்த நிறுவனத்தை ராக்வெல் (Rockwell) என்ற நிறுவனத்திடம் விற்றதின் மூலம் அவருக்கு கிடைத்த பணம் $4 மில்லியன் டாலர்கள். டாக்டர்.சாம்  38 வயதில் ஒரு அமெரிக்க கனவு சுயமுனைப்பு கோடிஸ்வரர் (American dream self-made millionaire).

1981 ஆம் ஆண்டு சாம் விடுமுறைக்காக இந்தியா வந்து ஒரிஸ்ஸாவில் உள்ள அவருடைய சொந்த கிராமத்திற்கு சென்றிற்கும் வேளையில் அங்கிருந்து ஒரு முக்கியமான காரணத்திற்காக அமெரிக்காவிற்கு தொலைபேச வேண்டிய நிலைமை. ஆனால்.. அந்த கிராமத்திலிருந்து அவரால் தொலைபேச முடியவில்லை. விடுமுறை முடிந்து அமெரிக்கா திரும்பி வந்தவுடன் மனமெல்லாம் இந்தியாவைப்பற்றித்தான். அவருக்கே தன்னைப்பற்றி ஒரு குற்றவுணர்வு. 38 வயதில் தொலைத்தொடர்பு துறையில் 50க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளை (Patents) கண்டு பிடித்து கோடிஸ்வரனாக ஆகிவிட்டேன். ஆனால்.. என் தாய்நாட்டில் நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்க வேண்டிய தொலைபேசி கட்டமைப்பு மிக மோசமான நிலையில் உள்ளது. இந்திய தொலைபேசித்துறை  மேல்நாட்டு நிறுவனங்கள் கொடுக்கும் காலாவதியான இயந்திரவியல் விசைமாற்றிகளை (Mechanical Switches) கோடிக்கணக்கான பணம் கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் தொலைத்தொடர்பு கட்டமைப்புப் பற்றி எந்த ஒரு தொலைநோக்கு திட்டமும் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான DOT (Department of Telecommunications)யிடம் இல்லை. இந்த நிலைய மாற்ற வேண்டும் மனதில் ஒரு உறுதி எடுக்கிறார்.
                                                                                                                           -தொடரும்

தமிழ் வலைப்பதிவுலகில் நீண்ட பதிவுகளுக்கு அண்ணன் உண்மைத்தமிழன் வடிவமைப்பு (Patent) வைத்துள்ளதால் டாக்டர்.சாம் அந்த உறுதியில் போராடி எப்படி வெற்றி பெற்றார் என்பதை அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.

பி.கு:
இந்தக் கட்டுரையில் ஆங்கில தொழில்நுட்ப வார்த்தைகளுக்கான தமிழ் வார்த்தைகளை உபயோகப்படுத்தியிருக்கிறேன். இது படிப்பதற்கு இலகுவாக இருக்கிறதா அல்லது கடினமாக இருக்கிறாதா என்று கூறினால் அதற்கேற்ப அடுத்த பதிவுகளை எழுதுவதற்கு உதவியாக இருக்கும். 


21 comments:

Robin said...

நல்ல பதிவு!

VELU.G said...

நல்ல பதிவு

அருமையான தகவல்கள்

இப்படியே தொடரவும்

மோகன் குமார் said...

//தமிழ் வலைப்பதிவுலகில் நீண்ட பதிவுகளுக்கு அண்ணன் உண்மைத்தமிழன் வடிவமைப்பு (Patent) வைத்துள்ளதால் //

:))

ஜாக்கி சேகர் said...

நல்ல பதிவு... வரும் போதே எங்கள் தலைவர் உண்மைதமிழனை கலாய்ச்சிட்டிங்க...

ரவிச்சந்திரன் said...

ராபின் - நன்றி

வேலு - நன்றி

மோகன் - நன்றி

ஜாக்கி - நன்றி, அண்ணன் உண்மைத்தமிழன் நமக்கும் தலைவர்தான்!

சிங்கை நாதன்/SingaiNathan said...

//தமிழ் வலைப்பதிவுலகில் நீண்ட பதிவுகளுக்கு அண்ணன் உண்மைத்தமிழன் வடிவமைப்பு (Patent) வைத்துள்ளதால்// :)

Nice Post abt the pioneer in indian telcom.Eager to read the rest ..

Anputan
Singai Nathan

ஆ.ஞானசேகரன் said...

அருமையான தகவல்கள்

பா.ராஜாராம் said...

சிலம்பு சுழட்டுபவர்கள் 'தட்டி தொடுறேன்' என மண்ணை தொட்டு ஒரு வணக்கம் வைத்தாலும் அது குரு வணக்கம்தான்.

அப்படி, அருமையான தொடக்கமாக இருக்கிறது, குருவில் இருந்து...

வாழ்க!

ரவிச்சந்திரன் said...

@SingaiNathan,
Thanks. As a young 22 yrs old Engineer, I worked with him for about a month in New Delhi in 1991. He is my Guru. I can write lot about him and my C-DOT days. The problem is my Tamil typing and time :((

ரவிச்சந்திரன் said...

ஞானசேகரன் - நன்றி

பா.ராஜாராம் - நன்றி அண்ணே, உங்கள் கவிதையில் மட்டுமல்லாமல் கமெண்டிலும் ஊர் பக்கம் கூட்டிக்கிட்டு போயிடுரீங்க! ஒரு காலத்தில் எங்கள் கிராமத்து நாட்டாமையான என் பெரியப்பாவிடம் சிலம்பம் கற்ற நாட்களின் நினைவலைகள்!!

மணி மு. மணிவண்ணன் said...

வாழ்த்துகள். தேவையான பணி. தொடருங்கள்.

ரவிச்சந்திரன் said...

மணி மு. மணிவண்ணன் - கணணியில் தமிழ் வளர்க்கும் முன்னோடிகளில் ஒருவரான தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி!

தருமி said...

அதென்னமோ ... Sam அப்டின்னு பேரு இருந்தாலே ... இப்படித்தான் !!

:)

தருமி said...
This comment has been removed by the author.
ரவிச்சந்திரன் said...

தருமி - நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும் அய்யா :)

தருமி said...

ராஜீவ் காந்தி செய்தவைகளில் மிக முக்கிய நல்ல விஷயம் Sam Pitroda-வைத் தன் scientific advisor ஆக ஆக்கியதுதான். நீங்கள் சொல்லும் தொடர்பு சாதன வளர்ச்சியை நான் முழுமையாக உணர்ந்தவன்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

வாங்க ரவி..

மறுபடியும் எழுத வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்..!

இது போலவே இனி எப்போதும் எனக்குப் போட்டியாக எழுதி என் பேடண்ட் உரிமையை வெகுவிரைவில் பறித்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன்..!

இருக்குற பேருக்காகவே இப்பல்லாம் நிறைய எழுத வேண்டியிருக்கு.. அதுதான்..))))))))))))

ரவிச்சந்திரன் said...

உண்மைத்தமிழன் - மிக்க நன்றி!

//இது போலவே இனி எப்போதும் எனக்குப் போட்டியாக எழுதி என் பேடண்ட் உரிமையை வெகுவிரைவில் பறித்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன்..!//

உங்க கிட்ட நெருங்க முடியுமா அண்ணே:))

Indian said...

அருமையான தகவல்கள்.

இப்படியே தொடரவும்.

ரோஸ்விக் said...

அண்ணே இப்பதான் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அனைத்து பாகங்களையும் படிச்சுகிட்டு இருக்கேன். அசத்தலா இருக்கார் உங்க குரு... தொடருங்க....

Bharath said...

ஒரு ரியல் ஹீரோவைப் பற்றி ஒரு அருமையான கட்டுரை.. சீக்கிரம் தொடருங்கள்..