வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Tuesday, July 27, 2010

சீனா - Part 3

சீனா - Part 1

சீனா - Part 2

                                                                     சீனா-3

பிரச்சனைகள் இல்லாத மனிதன் கிடையாது... பிரச்சனைகள் இல்லாத நாடும் கிடையாது. சீனாவின் தற்போதைய பிரச்சனைகள் என்ன? எதிர் நோக்கும் சவால்கள் என்ன?

1. சீன அரசாங்கம் கம்யூனிசம் என்ற இரும்புக்கரத்தைக் கொண்டு தன் நாட்டு மக்களை ஆண்டு வருகிறது. மக்களுக்கு கருத்து சுதந்திரம் கிடையாது. முப்பது ஆண்டுகளுக்கு முன்னால பசி, பஞ்சத்தில் வாடிய சீனர்கள் இன்று வசதியாக வாழ்கிறார்கள். ஆனால், கூண்டுக்குள் அடைக்கப் பட்டிருக்கும் பறவைகள் போன்ற வாழ்க்கைதான். இத்தகைய இருக்கததை என்னால் பீஜிங் நகரில் நன்றாக உணர முடிந்தது. பீஜிங் நகரில் Tiananmen Square, Chairman Mao Memorial, Forbidden City, Summer Palace போன்ற முக்கியமான பகுதிகளில் எல்லாம் அணிவகுத்து நிற்கும் ராணுவ வீரர்களை பார்த்தவுடன் நம்மையறியாமல் ஒரு சிறிய பயம் மனதிற்குள் வந்து விடுகிறது. இப்படி எவ்வளவு காலம் சீனா தன் மக்களை அடக்கி வைத்திருக்க முடியும்? 1989 ஆம் ஆண்டு Tiananmen Square போன்ற ஒரு எதிர்ப்பை சீனா வருங்காலத்தில் சந்திக்க நேரிடலாம்....

2. கருத்து சுதந்திரம் இல்லாததால் சீனாவில் பத்திரிக்கைகள், தொலைகாட்சி நிகழ்ச்சிகள், இணைய தளங்கள் எல்லாம் அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப் படுகின்றன. மக்களின் கருத்து சுதந்திரத்தை அடக்கும் விதமாக FaceBook, Blogger போன்ற தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. There’s no media freedom in China! இதனால்தான் கூகுள் (Google) சீனாவிலிருந்து சில மாதங்களுக்கு முன்பு வெளியேறி விட்டது.

3. மிக குறைந்த தொழிலாளர்கள் கூலி காரணமாகத்தான் இன்று சீனா உலகத்தின் தொழிற்சாலையாக விளங்குகிறது. ஆனால்... குறைந்த உற்பத்தி செலவு, பெரிய லாபம் இதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்கும் சீனாவின் தொழிற்சாலை முதலாளிகள் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்காமல் அடிமைகளைப் போல் நடத்தி வேலை வாங்கிறார்கள் என்ற செய்திகள் அவ்வப்போது வந்துகொண்டிருக்கின்றன. சமீபத்திய உதாரணம், Apple, Dell, HP போன்ற நிறுவனங்களின் பாகங்களை உற்பத்தி செய்யும் சென்சென் (Shenzhen)நகரிலிருக்கும் Foxconn Electronics நிறுவனத்தில் ஒரு சில நாட்களில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்ட செய்தி. காரணம் இந்த தொழிற்சாலையில் வேலைபார்க்கும் 300,000 (மூன்று லட்சம்) தொழிலாளர்களை மாடுகளை தொழுவத்தில் அடைத்து வைத்திருப்பதைப் போல வசதிகள் இல்லாத விடுதியில் (Dormitory) தங்க வைத்து தினமும் ஓவர் டைம் வேலை செய்ய வைக்கும் கொடுமை! மூன்று இலட்சம் தொழிலாளர்கள் வேலை பார்க்கும் இந்த தொழிற்சாலையில் இவர்களுக்கென்று ஒரு யூனியன் கிடையாது!
  
4. எதையும் காப்பியடிப்பதில் சீனாவை மிஞ்ச இந்த உலகத்தில் யாரும் கிடையாது! இந்த செய்தியை படித்து பாருங்கள். மிரண்டு விடுவீர்கள்.


போலி பொருட்களை (Fake Branded items) உற்பத்தி செய்து விற்பதில் உலகின் முதல் நாடாக சீனா விளங்குகிறது. ஷங்காய் நகரில் Nanjing Road, பேஷன் தெரு (Fashion Street) என்றழைக்கப்படுகிறது. இந்த தெருவில் உள்ள கடைகளில் டாப் பிராண்ட் பொருட்கள் கிடைக்கும். ஆனால் அந்த தெருவில் நடந்து செல்லும்போது கைகளில் பெரிய போலி பொருட்களின் பட்டியலுடன் (Catalogue) பயணிகளை மொய்ப்பார்கள். அவர்கள் அழைத்து சென்று விடும் சிறிய சந்து கடைகளில் விற்கும் போலி பொருட்களுக்கும் உண்மையான பொருட்களுக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது சிரமம். நான் அசந்துபோய் விட்டேன்! என் ஆஸ்திரேலிய வகுப்புத்தோழன் மிக அபாராமாக பேரம் பேசி 100 Yuan-க்கு (6000 ரூபாய்) 10 Rolex கைக்கடிகாரங்கள் வாங்கினான்!! இந்த திருட்டுத்தனத்தை (Piracy) தடுக்காத சீனாவை நோக்கி உலக நிறுவனங்கள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால சீனா இதற்காக எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை. காராணம் இந்த தொழில் சீனாவில் ஒரு மிகப் பெரிய வர்த்தகம் (Industry)

5. மேலே சொன்னதைப் போன்ற பல காரணங்களால் உலக நாடுகள் எல்லாம் சீனாவை நோக்கி கூறும் குற்றம் மனித உறிமைகள் மீறல் (Human Rights violation).

6. சீனாவின் அரசாங்க அலுவலங்களில் இந்தியாவைப்போல் பரந்து விரிந்து கிடக்கும் லஞ்சம். பணம் கொடுக்காமல் எந்த காரியத்தையும் சாதிக்க முடியாது

7. சீனாவின் வளர்ச்சி சீனா முழுவதுமான ஒரு சீராண வளர்சியல்ல. சீனாவின் கிழக்கு கடற்கரை பகுதி (East coastal region) தான் தொழிற்சாலைகளால் வளர்ச்சியடைந்துள்ளது. சீனாவின் உள்நாட்டு பகுதி, மேற்கு பகுதிகள் பெரிதாக வளர்சியடையவில்லை. காரணம் தொழிற்சாலைகள் கிடையாது. இதனால் கிராமப்புற உள்நாட்டு, மேற்கு பகுதிகளிலிருந்து சீனாவின் கிழக்கு கடற்கரை நகரங்களையும், தொழிற்பேட்டைகளையும் நோக்கி தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த பிரச்சினை சீனாவிற்கு தற்போது பெரும் சவாலாக உள்ளது.

8. திபெத், தைவான் பிரச்சனைகள்.....

9. சீனாவின் பொருளாதாரம் கடந்த முப்து ஆண்டுகளாக சராசரியாக ஆண்டிற்கு 10% வளர்ச்சியடைந்து வருகிறது. இதே அளவு வளர்ச்சி வரும் ஆண்டுகளிலும் தொடரும் என்பது கேள்விக்குறி? பொருளாதாரத்தின் வளர்ச்சி குறைந்தால் அதனால் ஏற்படும் பிரச்சனைகளை சீனா சமாளிக்க வேண்டும்.

10. சீனா தன் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களின் விலை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக அதன் நாணயம் யுவான் (Currency) மதிப்பை குறைவாக வைத்துக்கொள்ள (Undervalued ) பல யுக்திகளை கையாண்டு வருகின்றது. அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் இதை கடுமையாக கண்டிக்கின்றன. எவவளவு காலம் இதை தொடர முடியும்?


சீனா vs. இந்தியா பற்றி அடுத்த பதிவில்....................
                                       --- தொடரும்
சீனா படங்கள்:
                            Chinese Soldiers
                            Tiananmen Square
                            Beijing Traffic Jam
                            Beijing Pollution
                           Chinese Soldiers



15 comments:

கோவி.கண்ணன் said...

//பேசி 100 Yuan-க்கு (6000 ரூபாய்) 10 Rolex கைக்கடிகாரங்கள் வாங்கினான்!! இந்த திருட்டுத்தனத்தை (Piracy) தடுக்காத சீனாவை நோக்கி உலக நிறுவனங்கள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால சீனா இதற்காக எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை. காராணம் இந்த தொழில் சீனாவில் ஒரு மிகப் பெரிய வர்த்தகம் (Industry)//

தாஜ்மகாலுக்கே டூப்ளிகேட் செய்து வைத்திருப்பவர்கள் அவர்கள்.
http://www.random-good-stuff.com/2008/01/22/windows-of-the-world-shenzhen/

ஜோ/Joe said...

ரவி அண்ணா,
மிகவும் பயனுள்ள தகவல்கள் . சீனா ஊதப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு பலூன் என்கிறீர்கள் .பார்க்கலாம். தொடருங்கள்.

கோவியார்,
அந்த டூப்ளிகேட் தாஜ்மகாலுக்கு முன்னால் நானும் புகைப்படம் எடுத்துக்கொன்டிருக்கிறேன். :)

வின்சென்ட். said...

சரியான முறையில் அலசியிருக்கிறீர்கள். ஆனாலும் காப்பியிடிப்பதில் கூட ஒரு நேர்த்தி இருக்கிறது. 20 வருடங்களுக்கு முன் அறிமுகமான வெட்டி வேர். ஊ.த. http://maravalam.blogspot.com/2008/03/blog-post_06.html


தொலைநோக்கு பார்வையுடன் கடுமையான உழைப்பு
http://maravalam.blogspot.com/2009/03/blog-post_26.html

ஜோதிஜி said...

மிகவும் மகிழ்ச்சியாய் உள்ளது.

ஒவ்வொரு வரியும் ஐவரி. ரசித்துப் படித்தேன். கடினமான விசங்களை மிக எளிமையாக எதார்த்தமாக கொடுத்து உள்ளீர்கள்.

சீனாப் பற்றிய முழு நீள புத்தகங்கள் படித்த பாதிப்பை விட இதை விட எளிமையாக சொல்ல முடியாது.

தொடருங்கள்....

ஜோதிஜி said...

தமிழிஷ் இன்ட்லி பட்டையை பொறுத்தவும்

Unknown said...

பொதுவாகவே சாட்டிலைட் படங்களில் சீனாவின் பரவலான வளர்ச்சி தெரியவில்லை, அதுவும் இரவில் நிறைய பகுதிகள் இருட்டாகவே இருப்பதாக ஆய்வுகள் சொல்வதால், இந்தியாவை இவ்வாறு பார்க்கும்போது இங்கு ஒட்டு மொத்த சீரான வளர்ச்சி சில வாடா மாநிலங்களை தவிர்த்து தெரிகிறது, அதனால்தான் ஒரு கட்டத்தில் புரட்சி வெடித்து சீனா துண்டு துண்டாக மாறும் வாய்பிருப்பதாக நிறைய ஆய்வுகள் சொல்கிறது...

நல்ல பகிர்வு .. தொடர்ந்து நல்ல தகவல்களை தருவதற்கு மிக்க நன்றி ...

ஜோதிஜி said...

என்னுடைய கணக்குப்படி நீங்களும் செந்திலும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர் என்று தான் கருதுகின்றேன்.

தேவன் மாயம் said...

சீனாவின் ஜாதகத்தை பிட்டுபிட்டு வைத்துள்ளீர்கள். நாம் அவர்களை முந்துவது எப்போது?

பா.ராஜாராம் said...

வியக்க வைக்கும் புள்ளி விபரங்கள் ரவி! தெளிவான நடை. தொடரவும்..

Ravichandran Somu said...

கோவி.கண்ணன் -- நன்றி கோவியாரே!

ஜோ -- நன்றி
//சீனா ஊதப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு பலூன் என்கிறீர்கள் .பார்க்கலாம். தொடருங்கள்.//

இல்லை ஜோ. ஒரு நடுநிலையான பார்வையில் சீனாவின் + மற்றும் - களை பட்டியலிட்டேன். சீனாவின் + கள் அதிகம். சோவியதி யூனியன், ஜப்பான் போன்ற நாடுகள் செய்த பொருளாதார கொள்கை தவறுகளை சீனா செய்யாது என்பது என் கருத்து

Ravichandran Somu said...

வின்சென்ட் -- மிக்க நன்றி சார். இன்றுதான் உங்கள் வலைப்பதிவை பார்வையிட்டேன். மிக அருமை. 21 வயது வரை வயல்களில் இறங்கி வேலை பார்த்த நானும் ஒரு விவசாயிதான். இந்த வார இறுதியில் தங்களின் வலைப்பதிவை வாசிக்கிறேன்.

Ravichandran Somu said...

ஜோதிஜி -- தங்களின் தொடர் வருகைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி.

தமிழிஷ் பட்டையை சீக்கிரம் பொருத்தி விடுகிறேன்.

ஆமாம்... நானும் செந்திலும் மன்னார்குடி பகுதி கிராமத்தை சேர்ந்தவர்கள். செந்தில் பரவாக்கோட்டை கிராமம். நான் வெட்டிக்காடு கிராமம். இந்த இரண்டு கிராமங்களையும் இணைப்பது மன்னார்குடி நகரம்.

Ravichandran Somu said...

செந்தில் -- நன்றி தம்பி

//சீனா துண்டு துண்டாக மாறும் வாய்பிருப்பதாக நிறைய ஆய்வுகள் சொல்கிறது...//

இந்த கருத்திலிருந்து சற்று நான் மாறுபாடுகிறேன். சீனா சோவியத் யூனியனின் வீழ்சியின் மூலம் பாடம் கற்றுக்கொண்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டு திட்டத்தில் பெரும் பணத்தை உள்நாட்டு, மேற்கு பகுதிகளின் வளர்ச்சிக்கு ஒதுக்கியுள்ளது. சீனாவின் மேற்கு பகுதிகளில் புதிய சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்து மிகப் பெரும் சலுகைகளை நிறுவனங்களுக்கு கொடுக்கும் திட்டத்தை தற்போது செயலாற்றி வருகிறது.

Ravichandran Somu said...

தேவன் மாயம் -- மிக்க நன்றி டாக்டர்!

//நாம் அவர்களை முந்துவது எப்போது?
//

தற்போதைய அரசியல்வியாதிகளின் பிடியிலிருந்து விடுபட்டு தொலைநோக்கு பார்வையுள்ள நல்ல தலைவர்கள் ஆட்சியில் அமரும்போது!!

Ravichandran Somu said...

பா.ரா -- தொடர்ந்து அளித்து வரும் உற்சாகத்திற்கு மிக்க நன்றி அண்ணே!