வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Tuesday, September 07, 2010

*3*: 4G - நான்காவது தலைமுறை கட்டமைப்பு

நான் தொலை தொடர்புத்துறை(Telecommunications)யில் அடுத்த தலைமுறை கட்டமைப்பு(Next Generation Network) என்ற வருங்கால தொழில்நுட்பத்தில் பணியாற்றி வருகிறேன். என் துறை சார்ந்த 4G Network பற்றி ஒரு சிறிய அறிமுகம். இப்பத்தான் 50,000 ஆயிரம் கோடி 2G Spectrum ஊழல் எல்லாம் ஒரு வழியாக அடங்கி... 3G ஏலம் முடிஞ்சி... 3G சேவைகளுக்காக காத்துக்கிட்டிருக்கோம். நீ என்னடான்னா... அதுக்குள்ள... 4G-ன்னு என்னமோ சொல்ற? என்று ஒரு சிலர் நினைப்பது எனக்கு புரிகிறது:)


இன்னும் சில ஆண்டுகளில் உலகில் உள்ள எல்லா செல்பேசி நிறுவனங்களும் தங்கள் சேவையை 4G-க்கு மாற்றி விடும். ஏன்.. அதன் காரணங்களைப் பார்ப்போம். அதற்கு முன்னால் இந்த 1G, 2G, 3G என்றால் என்ன என்று சுருக்கமாக விளக்குகிறேன்.

1G Network:
1G கட்டமைப்பு என்பது 1980-களில் முதன்முதலாக செல்பேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டபோது செல்பேசி கட்டமைப்புக்காக ஏற்பட்ட தொழில்நுட்பம். இது ஒரு தொடரிசை (Analog) FDMA (Frequency Division Multiplexing) தொழில்நுட்பம். இதனை AMPS (Advanced Mobile Phone System) என்றும் கூறுவார்கள். இந்த தொழில்நுட்பத்தின்படி நாம் செல்பேசி வழியாக பேச மட்டும்தாம் முடியும். SMS போன்ற சேவைகள் இந்த தொழில்நுட்பத்தில் கிடையாது.

2G Network:
2G கட்டமைப்பு 1990-களின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எண்ணியல் (Digital) தொழில்நுட்பம். இது TDMA (Time Division Multiplexing) மற்றும் CDMA (Code Division Multiplexing) என்னும் தொழில்நுட்பத்தில் இயங்குவது. இதன் மூலம் செல்பேசியில் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல புதிய சேவைகளை செல்பேசியில் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக குறுஞ்செய்தி (SMS), தொலை பேசுபவர்களின் செல்பேசி எண் (Caller Id) சேவைகள். இந்தியாவில் 1990-களின் மத்தியில் 2G தொழில்நுட்பத்தைக்கொண்டுதான் செல்பேசி சேவை தொடங்கப்பட்டது.

2.5G Network:
2.5G தொழில்நுட்பத்தில் முதன் முதலாக தகவல் பெட்டகம் (Packet) என்ற கட்டமைப்பு சேர்க்கப்பட்டது. இதனால் செல்பேசி வழியாக இணையம் (E-mail, Internet) சேவைகளை வழங்க முடிந்தது.

3G Network:
2.5G தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் பெட்டகம் (Packet) கட்டமைப்பின் வேகம் வீடியோ மற்றும் அகன்ற அலைவரிசை (Broadband) செயலிகளுக்கு (Applications) போதுமானதாக இல்லை. எனவே இந்த 3G தொழில்நுட்பத்தில் அகன்ற அலைவரிசை (Broadband) வேகம் அதிகரிக்கப்பட்டது. 3G கட்டமைப்பு 2003-ஆம் ஆண்டு காலகட்டதில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
  
4G NETWORK
 4G எனப்படும் இந்த நான்காவது தலைமுறை கட்டமைப்பு தொழில்நுட்பத்தின் முக்கிய மூன்று காரணிகள்(Factors): 
  1. அதி வேக அகன்ற அலைவரிசை சேவை (High Speed Mobile Broadband)
  2. குரல் (Voice) மற்றும் தரவு (Data) இரண்டிற்கும் ஒரே கட்டமைப்பு
  3. பெறுவெளி சுதந்திரம் (Access Independence)
1.அதிவேக அகன்ற அலைவரிசை (Mobile Broadband)

4G தொழில்நுட்பத்தால் 100MB/s-க்கும் அதிகமாக வேகமுள்ள அகன்ற அலைவரிசை சேவையை (Mobile Broadband) அளிக்க இயலும். இந்த அதிவேக அலைவரிசையினால் கிடைக்கப்போகும் சில சேவைகள்.
Mobile TV


1. அதிக வரையறை (High Definition) வீடியோ படங்களை அதி வேகத்தில் செல்பேசியில் பார்க்க இயலும்.

2. Mobile TV சேவை வழியாக நாம் எங்கிருந்தாலும் நம்முடைய விருப்ப TV சேனலை செல்பேசியில் பார்க்க முடியும்.



Mobile TV
3. Live Streaming முறையில் செல்பேசி வழியாக ஒரு நிகழ்ச்சியை நேரலையாக உலகத்தின் எந்த மூலையிலும் இருக்கும் உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். 
Live Streaming
உதாரணமாக உங்கள் குழந்தை அமெரிக்காவில் ஒரு கலை நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடுகிறது. அதை உங்கள் செல்பேசி காமிரா வழியாக படம் பிடித்து இந்தியாவிலுள்ள உங்கள் பெற்றோர்களுடன் நேரலையாக (Live Telecast) பகிர்ந்து கொள்ளலாம்.





Video Calling
4. Video Calling சேவை மூலமாக நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே பேச முடியும். நண்பர்களுடன் உட்கார்ந்து தண்ணி அடித்துக்கொண்டு இருக்கும்போது மனைவி செல்பேசியில் கூப்பிட்டால் நான் ஆபிசுல முக்கியமான மீட்டீங்ல இருக்கேன்னு டபாய்க்க முடியாது:(((
[ங்கொய்யால... இந்த சேவையை தடை செய்ய சொல்லனும்டா... என்று பல பேர் நினைப்பது எனக்கு நன்றாக கேட்கிறது:)))]



2.கட்டமைப்பு (Network)

2G மற்றும் 3G தொழில்நுட்பத்தில் நாம் பேசும் பேச்சுகளை (Voice) கடத்தி செல்வதற்கு சுற்றமைப்பு விசைமாற்றி (Circuit Switching) என்ற தனி கட்டமைப்பு. இணைய (Internet) சேவைகளை வழங்க தகவல் பெட்டக விசைமாற்றி (Packet Switching) என்ற தனி கட்டமைப்பு. ஆனால் 4G தொழில்நுட்பத்தில் இரண்டிற்கும் சேர்த்து ஒரே கட்டமைப்புதான். அதாவது 2G/3G கட்டமைப்பில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நாம் பேசுவது (குரல்) ஒரு பாதை வழியாகவும், இணைய சேவைகள் (E-mail, Web Browsing) இன்னொரு பாதை வழியாகவும் நம் செல்பேசியை வந்தடைகிறது. உதாரணமாக சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு குரல் ரோடு வழியாகவும், இணைய சேவை ரயில் பாதை வழியாகவும் வந்து சேருகிறது. 4G தொழில்நுட்பத்தில் நாம் பேசும் பேச்சுகள் எல்லாம் Voice over IP என்ற தொழில்நுட்பத்தின் வழியாக தகவல் பெட்டக (Packet) முறையில் கடத்தி செல்லப்படுகிறது. சென்னையிலுருந்து தஞ்சாவூருக்கு குரல், இணைய சேவைகள் இரண்டும் ஒரே ரயில் பாதையில் வந்து சேருகிறது. கீழேயுள்ள படத்தை பாருங்கள். தெளிவாக புரியும்...LTE (Long Term Evolution) என்பது 4G கட்டமைப்பின் ஒரு பகுதி.

4G Core Network
குரல்(Voice) மற்றும் தரவு(Data) இரண்டிற்கும் ஒரே கட்டமைப்பு என்பதனால் 4G கட்டமைப்பை நிறுவ ஏற்படும் செலவு குறைவு (Low Capital Expenses). ஒரே பாதை என்பதால் சாலையை அமைக்க ஆகும் செலவு கம்மி...ரயில் பாதை மட்டும் போதும்... ரோடு தேவையில்லை. அதேபோல் இந்த 4G கட்டமைப்பை (ஒரே பாதை) பராமரிக்க ஆகும் செலவும் குறைவு (Low Operational Expenses).

3.பெறுவெளி சுதந்திரம் (Access Independence)

4G தொழில்நுட்பத்தின் அடுத்த முக்கியமான அம்சம். 2G, 3G, WiMax போன்ற தற்போதைய பெறுவெளிகளையும் (Access) இந்த கட்டமைப்பு பயன்படுத்த உதவுகிறது. கீழேயுள்ள படத்தில் தெளிவாக விளக்கப் பட்டுள்ளது.


மேலும் 4G கட்டமைப்பினால் ஏற்படும் நன்மைகள்:

  1. மிகச்சிறந்த அகன்ற அலைவரிசை செயலிகள் (Broadband Applications)
  2. அலைவரிசை ஆற்றல் (Bandwidth Efficiency)
  3. நிறமாலை ஆற்றல் (Spectrum Efficiency)
  4. குறைந்த எடுத்து செல்லும் செலவு (Low Transportation costs)
மேலே சொன்ன காரணங்களினால் 4G கட்டமைப்பு தவிர்க்க முடியாத ஒன்று. எனவே சில ஆண்டுகளில் எல்லா செல்பேசி நிறுவனங்களும் தங்கள் சேவையை 4G-க்கு மாற்றி விடும்!

தமிழ் தொழில்நுட்ப வார்த்தைகளைத் தேடி எழுதுவதற்குள் டவுசர் கிழிஞ்சிருச்சு...:((( [நன்றி-லக்கிலுக்]. ஏதோ.... ஒரளவு 4G கட்டமைப்பு பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்:)


பி.கு:
4G தொழில் நுட்பம் பற்றி அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுத வேண்டும் என்ற முயற்சியில் எழுதிய பதிவு இது. புரிகிறதா, இல்லையா மற்றும் உங்கள் ஆலோசனைகளைக் கூறினால் தொலை தொடர்பு தொழில்நுட்பம் பற்றி வருங்காலத்தில் எழுத உதவியாக இருக்கும்.
                                *       *       *

52 comments:

பா.ராஜாராம் said...

சுஜாதாவின் சைன்ஸ் ஃபிக்ஸ்சன் கதை போல மிக சுளுவாக, எளிதாக புரிந்தது. (எழுத்துகள் புரிந்தது, படங்கள் புரிய என்ன செய்யணும்?) :-)

முக்கியமான ஒரு கேள்வி இன்ஜினியர்,

5G- கால கட்டத்தில் மனைவி போன் வழியாக வெளிநாடு வர வாய்ப்புள்ளதா? ஆம் எனில், எந்த ரெண்டு வயரை சேர்த்தால் ப்ராஜக்ட் ஃபெயிலராகும் என்பதை இன்னும் சற்று சுளுவான படத்துடன் விளக்கவும்.:-))

முனியாண்டி பெ. said...

It's very easy to understand...people like me. good posting

Indian said...

நல்ல கட்டுரை.

குடுகுடுப்பை said...

என் ஆரம்ப கால வேலை NGN than, Parley spec பயன்படுத்தி IP based call and feature server development லே இருந்து ,யூனிபைட் மெஸேஜிங் சுத்தி இப்போ என்னையே அறியாமல் ஹெல்த் கேரில் இருக்கேன், மீண்டும் என்னை திரும்ப டெலிகாமிற்கு அழைக்கிறது பதிவு.

நன்றி ரவி ஆலம்பிரியர்

Unknown said...

மிகவும் நல்ல கட்டுரை.நானும் இந்த தொலை தொடர்பு பிரிவில் வேலை செய்கிறேன்.இதைப்பற்றி இன்னும் நிறைய எழுதுங்கள்.

Thangavel Manickadevar said...

புரியும் படி இருக்கிறது. வாழ்த்துக்கள் ரவிசந்திரன்.

தமிழ் திரு said...

பயனுள்ள பதிவு ...4G எப்போ வரும் ?
!(உங்கள் பக்கத்துக்கு ஊர் கீழையூரை சேர்ந்தவன்)வாழ்த்துகள் அங்கிள் !

Robin said...

அருமையாக எழுதியுள்ளீர்கள். உங்கள் எழுத்துநடை நன்றாக இருப்பதால் தொழில்நுட்பத்தைக் கூட எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது. நன்றி.

வடுவூர் குமார் said...

அருமையாக எழுதியுள்ளீர்கள்

Balakumar Vijayaraman said...

எளிமைப்படுத்தி மிக நன்றாக எழுதியுள்ளீர்கள். பயனுள்ள இடுகை.

Anonymous said...

Really Good article

பாலா said...

நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்..!!!

வாலு பையன் said...

ரவி மாமா , இதை .. இதை, இதை தான் நான் எதிபார்த்தேன் ரொம்ப நல்லா எளிமையா எழுதுறீங்க .எங்களை மாதிரி பாமர மக்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கு. மாமா ஒரு சின்ன யோசனை ( இந்த 17 வருட அனுபவத்தை வைத்து ஒரு புத்தகம் எழுதலாமே ?)
நன்றியுடன் - Dr வலுபையன் PhD
www valupaiyan .tk

Unknown said...

ரொம்ப நல்லா இந்த டெக்னாலஜி பத்தி புரிய வைச்சிருக்கீங்க.. ரொம்ப நாட்களாக நான் அறிந்து கொள்ள ஆசைப்பட்ட விசயம்.. மிகவும் தெளிவாகவும் எளிமையாகவும் விளக்கியிருக்கீங்க..

எப்போ இந்த 4G மக்களுக்கு கிடைக்கும்?..

தொடர்ந்து இதுபோல பதிவுகளை எழுதுங்கள்..

அ.வெற்றிவேல் said...

அருமையான கட்டுரை..இது மாதிரி விஷ்யம் உள்ள கட்டுரைகள் வரும் தளங்கள் தமிழில் மிகக் குறைவு. தாங்கள் இது குறித்து தொடர்ந்து எழுதலாம்.. அன்புடன் வெற்றி

கோவி.கண்ணன் said...

சிறப்பான தகவல் தொழில்நுட்ப இடுகை.

KATHIR = RAY said...

தெளிவான சுருக்கமான விளங்கிக்கொள்ளும் வகையில் பதிவு
நேர்முக தேர்வு செல்பவர்களுக்கும் பயன்படும்

படத்துடன் விளக்கியது அருமை

தொடருங்கள் உங்கள் TG சேவையை

Mahi_Granny said...

3G , 4G எல்லாம் இப்பதான் புரியுது. நன்றி ரவி

எம்.எம்.அப்துல்லா said...

வெகு எளிதாகப் புரிந்தது அண்ணா. தொடருங்கள்.

priyamudanprabu said...

ங்கொய்யால... இந்த சேவையை தடை செய்ய சொல்லனும்டா... என்று பல பேர் நினைப்பது எனக்கு நன்றாக கேட்கிறது
///

எனக்கு என்னமோ உங்க குரல்தான் கேக்குது

நல்ல பதிவு தொடருக

Sridhar said...

This post is misleading. It claims LTE is the only 4G technology. But as per IMT, it still needs to come up with specifications for 4G Radio. LTE-Advanced and 802.16m are the possible candidates for 4G.

LTE can be considered as interim technology on the way to 4G (just like UMTS HSPA+)

Saravanan Edamelaiyur said...

It is a good posting and it is very easy to understand.

Proud to be "Tanjorian"

ஜோதிஜி said...

இதைத் தான் இதே தான் ஆரம்பத்தில் இருந்தே உங்களிடம் இருந்து எதிர்பார்த்தேன் ரவி. தெளிவா இருக்கு.
தொடரவும்

Kumaresan Rajendran said...

அருமை,

Bharath said...

மிக அருமையான introduction. அதுவும் டெக்னிகல் சமாச்சாரத்திற்கு தமிழ் வார்த்தைகளை ரசித்துப் படித்தேன்.
Sridhar சொன்னது போல் LTE 4G செல்வதிற்கு ஒரு வழி என்று தான் நினைக்கிறேன்.. LTE is also called as 3.9G

Ravichandran Somu said...

Sridhar--Thanks for your comments.

I never said that LTE is the only technlogy. I said "LTE (Long Term Evolution) என்பது 4G கட்டமைப்பின் ஒரு பகுதி"

My objective is to introduce 4G to common man in simple terms. Not detailed technical stuff since common man can't understand specs and IMT. I used the diagram to explain the concept of there's only one core all IP network in 4G unlike two different core networks - Circuit Network and Packet Network in in 2G/3G

FYI, I am a Core N/W architect.

Ravichandran Somu said...

அன்பு நண்பருக்கு!
வணக்கம். தங்கள் வலைத்தளித்தில் எழுதப்பட்டுள்ள
*3*: 4G - நான்காவது தலைமுறை கட்டமைப்பு

கட்டுரையினை எங்கள் தளத்தில் மீள் பிரசுரம் செய்ய தங்களின் அனுமதி வேண்டுகின்றோம்.
தங்கள் தளத்துக்கான இணைப்பும், பெயரும் சேரத்துக்கொள்ளப்படும் என்பதையும் அறியத் தருகின்றோம்
--
நன்றி
நட்புடன்
4Tamimedia Team
--------------------------------------------
மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் www.4tamilmedia.com பற்றி அறியத்தாருங்கள்.

Ravichandran Somu said...

படித்த, கருத்து தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!

Ravichandran Somu said...

பா.ராஜாராம்-- மிக்க நன்றி அண்ணா.
//(எழுத்துகள் புரிந்தது, படங்கள் புரிய என்ன செய்யணும்?) :-)//

கடைசி இரண்டு படங்கள் புரிவதற்கு கடினம். ஒரு கட்டமைப்பு(ஒரே பாதை) மற்றும் பெறுவெளி சுதந்திரம் என்ற அடிப்படை தகவல்தான் முக்கியம்.

//5G- கால கட்டத்தில் மனைவி போன் வழியாக வெளிநாடு வர வாய்ப்புள்ளதா? ஆம் எனில், எந்த ரெண்டு வயரை சேர்த்தால் ப்ராஜக்ட் ஃபெயிலராகும் என்பதை இன்னும் சற்று சுளுவான படத்துடன் விளக்கவும்.:-)//

அண்ணி பூரிக்கட்டையுடன் சவுதி வருவதற்கு நிச்சயமாக வாய்ப்புள்ளது! Only success... No failure:)))

ஜோ/Joe said...

அண்ணா ..கலக்கிபுட்டீங்க .

Ravichandran Somu said...

Smile Please! -- நம்ம ஊரு தம்பியா.. ரொம்ப சந்தோசம்.

வாலு பையன் -- நன்றி. நீ என்னோட NHSS classmate-ன்னு தெரிந்து விட்டது. மண்ட காயிது மச்சி. யாருன்னு சொல்லிடு.

பதிவுலகில் பாபு-- அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் Trial-லில் உள்ளது. இந்தியாவிற்கு ஒரு மூன்று ஆண்டுகளில் வந்து விடும்

மலாக்கா முத்துக்கிருஷ்ணன் said...

4G கைப்பேசிகளைப் பற்றி மிக மிக அருமையாக விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள். தெளிவான சிறப்பான கட்டுரை.

குறும்பன் said...

நல்ல இடுகை.

அமெரிக்காவில் Sprintல் மட்டுமே, 4G உண்டு. Apple iPhone 4 தான், அது iPhone 4G அல்ல. 4 ன்னா நாம 4Gன்னு நினைச்சிக்குவோம், வியாபார தந்திரம் அது.

4G பயன்படுத்த தனியாக அலைபேசி வாங்கனுமா? இருப்பதையை பயன்படுத்த முடியாதா?

நான் sprint phone தான் பயன்படுத்திறேன், ஆனா பல முறை படம் தெளிவில்லையே?

Anonymous said...

அறுமையான பதிவு. தமிழில் நுட்பங்களை புரியும்படி எழுத ஒரு திறன் வேண்டும். அது உங்களுக்கு உள்ளது. 1ஜி 2ஜி 3ஜி எது ஆனாலும் சாதாரண வாடிக்கையாளன் என்கிற முறையில் எனது பார்வை கட்டணத்திலேயே உள்ளது. 1ஜியில் 25 ரூபாயில் இருந்த அழைப்பு கட்டணம் 3ஜயில் 30 பைசாவாகக் குறைந்துள்ளது. 4ஜியில் இன்னும் குறையுமா?

Joe said...

Very informative and well written with diagrams, hats off to you!

Iam in Internet said...

பிரமாதம் ரவி! மிகச்சிறப்பாக தமிழாக்கியுள்ளீர்கள். என்போன்ற மலேசியத் தமிழனுக்கே புரிகிறதென்றால் தமிழகத் தமிழர்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. ராஜாராம் சொன்னதுபோல படங்கள்தான் புரியமாட்டேன் என்கிறது.1G, 2Gஇன் சேவைகளைச் சொன்னமாதிரி 3Gஇன் சேவைகளைப் பட்டியலிட்டு சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாய்ப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.அந்த கிழிந்த டிரௌசர் விஷயத்தில் எங்களால் ஏதும் உதவ முடியாமைக்கு வருந்துகிறேன். அன்புடன், K.தணிகாசலம், மலேசியா.

Ravichandran Somu said...

4TamilMedia தமிழ் செய்தி:

நன்றி!
இந்த இணைப்பில் காணலாம்
http://ww5.4tamilmedia.com/index.php/knowledge/information/471-4g-network

Jaianand said...

Hi ,

I am also working in the Telecom domain ...

Very nice article .. Keep going

Ravichandran Somu said...

Iam in Internet-- நன்றி சார்

//அந்த கிழிந்த டிரௌசர் விஷயத்தில் எங்களால் ஏதும் உதவ முடியாமைக்கு வருந்துகிறேன்//

படிக்கும்போது ஆங்காங்கே கொஞ்சம் நகைச்சுவைக்காக எழுதியது இது.

இணையத்தில் சற்று நேரம் செலவிட்டு தேடினால் போதும்... தமிழ் தொழில்நுட்ப சொற்களை பிடித்து விடலாம்... நாமே coin செய்து விடலாம்.

DURAI said...

REALLY VERY NICE TO LISTEN FROM YOU. NO ONE CAN TRANSLATE IN TAMIL LIKE THIS. WE HAVE TO APPRECIATE FOR YOUR TRYING. MAY GOD BLESS U. WE WANT MORE ABOUT 4G AND TAMIL ARTICLE.

THANKS A MILLION TON

THANKS&REGARDS
N. DURAI RAYAPPAN(A) N.D.R
THIRUTURAIPOONDI,
THIRUVARUR (D.T)

ஜோசப் பால்ராஜ் said...

மிக அருமையான பதிவு.
எளிமையா புரியிறமாதிரி சொல்லிருக்கிங்க.

தொடர்ந்து தொழில்நுட்பம் குறித்து எழுதுங்க. புத்தகமா இவை தொகுக்கப்படனும்.

ஆ.ஞானசேகரன் said...

எளிமை. அருமை..... தொடர்ந்து இது பொல் எழுதலாம்.... எதிர்பார்க்கின்றோம்

itamilcomputer said...

வணக்கம்,
எளிய தமிழில் இலகுவாக புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது.தங்களது பதிப்பை எனது ப்ளொக்கில் பதிவேற்றுவதற்கு தங்களின் அனுமதியை தயவுடன் வேண்டுகின்றேன்.

ப்ளொக் : http://itamilcomputer.blogspot.com

நன்றி

Ravichandran Somu said...

itamilcomputer--

//தங்களது பதிப்பை எனது ப்ளொக்கில் பதிவேற்றுவதற்கு தங்களின் அனுமதியை தயவுடன் வேண்டுகின்றேன்.//

தாரளமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அமுதா கிருஷ்ணா said...

இதெல்லாம் நமக்கில்லை என்று இத்தனை நாட்கள் படிக்காமலிருந்து இன்று தான் .. அருமையாக புரிந்தது.தொடரட்டும்..

Vela said...

ரொம்ப நல்ல முயற்சி ... பயனுள்ளதும் கூட.. எளிமையா இருக்கு

Ponchandar said...

அருமையான எளிமையான விளக்கங்கள் ! ! நானும் மிண்ணணுவியல் துறையில் சில காலம் பணி புரிந்தேன். இந்திய விமானப் படையில் Radar-பிரிவில் சில காலம் பணியாற்றினேன். தொடர்ந்து எழுதுங்கள் ! ! !

Senthil Kumar said...
This comment has been removed by the author.
Anonymous said...

மிகவும் நல்ல கட்டுரை,வாழ்த்துக்கள். ரொம்ப நாட்களாக நான் அறிந்து கொள்ள ஆசைப்பட்ட விசயம்.. மிகவும் தெளிவாகவும் எளிமையாகவும் விளக்கியிருக்கீங்க..

எப்போ இந்த 4G மக்களுக்கு கிடைக்கும்?..

தொடர்ந்து இதுபோல பதிவுகளை எழுதுங்கள்..

//தங்களது பதிப்பை எனது ப்ளொக்கில் பதிவேற்றுவதற்கு தங்களின் அனுமதியை தயவுடன் வேண்டுகின்றேன்.//

தாரளமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்

Anonymous said...
This comment has been removed by the author.
m.paramasivam said...

dear
core N/W architect,
informative article.
Best wishes to continue the good service.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.