பதிமூன்று வருடங்களுக்குப் பிறகு சீனாவிற்கு கடந்த ஏப்ரல் மாதம் சென்று வரும் வாய்ப்பு கிடைத்தது. எனது MBA படிப்பில் “Business in China” என்ற ஒரு பாடத்திற்குகாக சீனாவில் இரண்டு வாரங்கள் தங்கி படிக்க வேண்டும். அதன்படி ஏப்ரல் மாதத்தில் ஷங்காய் (Shanghai) நகரில் ஒரு வாரமும், பீஜிங் (Beijing) நகரில் ஒரு வாரமும் வகுப்புகள் நடைபெற்றன. கடந்த பத்து ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சி அசாத்தியமானது. சீனாவின் இந்த வளர்ச்சி பற்றி ஊடகங்கள் (Media) வழியாக கேட்டு தெரிந்து கொண்டதுதான். இரண்டு வாரங்கள் சீனாவில் தங்கி படித்த இந்த அனுபவம் சீனாவைப்பற்றி எனக்கு ஓரு Eye opener. நான் நேரில் பார்த்த புதிய சீனாவைப் பற்றி எனது பார்வையில் இந்த கட்டுரை.
இரண்டாவது உலகப் போரில் ஜப்பானியர்களின் பிடியில் மாட்டி சீனர்கள் அனுபவித்த சித்ரவதைகள் எண்ணிலடாங்கதவை. அதன்பின் சீனாவின் பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைந்து போனது. பல போரட்டங்களுப்பிறகு மா செதுங் (Mao Zedong) தனது தலைமையில் 1949 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி பீப்பிள்ஸ் ரிபபளிக் சைனா (People’s Republic of China) என்னும் புதிய சீனாவை கம்யூனிச கொள்கைகளின் அடிபபடையில் நிறுவினார்.
சேர்மன் மா செதுங் புதிய சீனாவின் தந்தை என்றழைக்கப்ப்டுகிறார். ஆனால் கம்யூனிசத்தை அடிப்படையாகக் கொண்ட அவருடைய ”அபார முன்னோக்கி தாவுதல் (The Great Leap Forward)” மற்றும் ”கலாட்சார புரட்சி(Cultural Revolution)” கொள்கைகள் மிகப்பெரும் தோல்வி அடைந்தன. இதனால் சீனர்கள் ஏராளமான தொல்லைகளை அனுபவித்தார்கள். குறிப்பாக ”அபார முன்னோக்கி தாவுதல்” கொள்கையால் 1958-1961 காலகட்டத்தில் சீனாவில் பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு கோடிக்கும் மேல் (20 Million). மாவின் ஆட்சிக் காலத்தில் சீனா குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சி எதுவும் அடையவில்லை.
1976 ஆம் ஆண்டு சேர்மன் மா இறந்த பிறகு மாவின் கம்யூனிச கொள்கைகளை ஆதரிப்பவர்களுக்கும் மாவின் காலாட்சார புரட்சி கொள்கையை எதிர்த்தவர்களுக்கும் நடந்த மோதலில் காலாட்சார புரட்சியை எதிர்த்த டெங் ஜியாபிங் (Deng Xiaoping) ஆட்சியைக் கைப்பற்றி 1978 ஆம் ஆண்டு சீனாவின் சனாதிபதியானார். கம்யூனிச கொள்கைகளால் மக்களுக்கு குடிப்பதற்கு கஞ்சி கூட கிடைக்காது என்ற உண்மையை உணர்ந்து சீனாவின் சந்தையை உலக நிறுவனங்களுக்கு திறந்துவிட்டு சீனாவின் “திறந்த பொருளாதாரம் (Open Economy)” கொள்கைக்கு அடிததளம் அமைத்தார். 1949 ஆம் ஆண்டு மாவின் கம்யூனிச கொள்கையால் வெளியேற்றப்பட்ட கோகோ கோலா (Coca-Cola) போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவிற்கு திரும்பி வர சீனா சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. டெங் ஜியாபிங் உயரத்தில் சிறியவராக இருந்தாலும் அவருடைய தொலைநோக்கு கொள்கைகளால் உயரமானவர்! அதனால்தான் டெங் ஜியாபிங் ”புதிய சீனாவின் சிற்பி (Architect of Modern China)” என்றழைக்கப்படுகிறார். டெங் ஜியாபிங் தனது திறந்த பொருளாதார கொள்கையில் உறுதியாக இருந்து மேலும் பல சீர்சிறுத்தங்கள் செய்து சீனாவின் சந்தையை கம்யூனிசத்திலிருந்து கேபிடலிசத்திற்கு(Capitalism) படிப்படியாக மாற்றினார். இதன் காரணமாக சீனாவின் பொருளாதாரம் அசுர வேகம் எடுத்து வளர ஆரம்பித்தது.
டெங் ஜியாபிங்
டெங் ஜியாபிங்கிற்கு பதவி ஏற்றுக்கொண்ட ஜியாங் ஜெமின் (Jiang Zemin), ஹு ஜிண்டாவு (Hu Jintao) போன்ற தலைவர்கள் திறந்த பொருளாதார கொள்கையை பின்பற்றி சீனாவை வளர்ச்சி பாதையில் வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார்கள். கடந்த முப்பது ஆண்டுகளில் குறிப்பாக கடந்த பத்து ஆண்டுகளில் சீனா அடைந்திருக்கும் முன்னேற்றங்கள் என்ன?
சீனா சில படங்கள்:
Expo-2010
Shanghai - View from Hung Pu river
Shanghai - Night View
சீன உணவு - பொறித்த தேள்கள் (Fried Scorpions)
சீன உணவு - பாம்பு, அட்டை... சரி சரி நீங்களே படித்துக் கொள்ளுங்கள்:)
19 comments:
சீன உணவுகளைப் படமெடுத்துப் போட்டதோடு, சமீபத்தில் சீனர்களின் உணவுப் பட்டியலில் இருந்து நாய், பூனை, எலி எல்லாம் விடுபட்டுப் போன செய்தியையும் சேர்த்தே சொல்லி இருக்கலாமோ?
டெங் சியாவோ பிங் கடந்து வந்த பாதை கொஞ்சம் கரடு முரடானது. கம்யூனிஸ்ட் கட்சியால் கட்டம் கட்டப்பட்டு ஒதுக்கப் பட்டவர் மறுபடி அங்கீகரிக்கப் பட்டதே ஓர் வரலாற்றுத் தேவை தான்.
ரஷ்யாவில் கோர்பசேவ் கொண்டு வர முயன்ற சீர்திருத்தங்கள் தோற்று, சோவியத் யூனியனே சிதறுண்டு போனதற்கும், சீனாவில் ஒரு எல்லைக்குட்பட்டு முதலாளித்துவ முறைக்கு கதவு திறக்கப் பட்டதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.
தொடருங்கள்!
சரியான பாதைக்கு வந்து உள்ளீர்கள்
கிருக்ஷ்ணமூர்த்தி - தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
//சீனாவில் ஒரு எல்லைக்குட்பட்டு முதலாளித்துவ முறைக்கு கதவு திறக்கப் பட்டதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன//
உண்மை. இதைத்தான் டெங் ஜியாபெங் அருமையாக திட்டமிட்டு படிப்படியாக நிறைவேற்றினார்.
ஜோதிஜி - தங்கள் தொடர் வ்ருகைக்கும் ஆதவிற்கும் நன்றி
very good!
அடுத்த intresting தொடங்கியாச்சு. :-)
keep going ravi.
சீனா போய்விட்டு வந்து ஒருவாரம் சாப்பிடவே இல்லையாமே......!
:)
iNteresting
பா.ரா -- நன்றி அண்ணா!
கோவி.கண்ணன் -- உண்மைதான் கோவியாரே. எனது வகுப்பில் நான் ஒருவன்தான் இந்தியன். பன்னி,மாடு என்று என் நண்பர்கள் கட்டு கட்டியதை பார்த்து நொந்து போய்விட்டேன். எப்படா வீட்டுக்கு வந்து சாம்பார், ரசம் சாப்பிடப்போகிறோம் என்று ஏங்கி விட்டேன்.
கேபிள் - நன்றி தலைவரே!
அந்த பொரிச்ச தேளை சாப்பிட்டு பார்க்கவேண்டும்..
சுவாரஸ்யம் அண்ணா! தொடருங்கள்.
சாப்பாட்டு வகைப் படங்கள் மிட் அருமை...அருவருப்பு தான்... ஆனால் தெரிந்துகொள்ள முடிகிறது
கே.ஆர்.பி.செந்தில்-- தைரியம் இருந்தால் சாப்பிடலாம்:)
ரோஸ்விக் - நன்றி தம்பி
சாப்பிடுவதற்குத் தைரியம் எல்லாம் வேண்டாம்! பசி, அப்புறம் வேறெதுவும் கிடைக்காது என்ற நிலை இருந்தாலே போதும்!
/சமீபத்தில் சீனர்களின் உணவுப் பட்டியலில் இருந்து நாய், பூனை, எலி எல்லாம் விடுபட்டுப் போன செய்தி/
என்று முதல் பின்னூட்டத்தில் சொல்லியிருந்ததே அதைத்தானே!
உணவுக்கு வேறு வழி இல்லாதபோது,எலி, தவளை, பாம்பு என்று எதையும் விட்டுவைக்காத சீன உணவுமுறை, இப்போது கொஞ்சம் பொருளாதார நிலை உயர ஆரம்பித்தவுடன் மாற ஆரம்பித்திருப்பதாக சமீபத்தில் படித்த இணையச் செய்தியின் சாராம்சம் அது.
ரவி மாமா அவர்களே , தங்களின் சீன பயண குறிப்புகள் அருமை
தங்கள் MBA முடித்ததற்கு வாழ்த்துக்கள்.
மாமா ஒரு சின்ன சந்தேகம் - ஆமா MBA வை சிங்காப்பூர் கும் , சீனா கும்
"எம்பி எம்பி "போயி படித்து தானே முடித்தீர்கள் ?
மாமா உடம்பை ஏற்றுங்கள் இன்னும் சின்ன பையன், அதே NHSS மாணவன்
கிரிக்கெட் Player ஆக இருக்கிறீர்கள். தங்களுக்கு வயது 43 மறந்துடாதீங்க .மாமா ஏதும் தப்பா
சொல்லி இருந்தா இந்த வாலு பையனை மன்னிசிடுங்க சரியா?
என்றும் அன்புடன்
வாலுபையன்
வாலுபையன் -- நன்றி. வாலுபையன் என்ற முகமூடியில் வந்து என்னை கலாப்பது சென்னையில் இருக்கும் என் NHSS வகுப்பு நண்பன் என்று நினைக்கிறேன். சரிதானே நண்பரே.
//மாமா உடம்பை ஏற்றுங்கள் இன்னும் சின்ன பையன், அதே NHSS மாணவன்
கிரிக்கெட் Player ஆக இருக்கிறீர்கள். தங்களுக்கு வயது 43 மறந்துடாதீங்க //
என் வயது 41-தான்:)
இந்த வருட புத்தாண்டு உறுதிமொழியாக தொடர்ந்து Gym-சென்றுகொண்டு, டயட்டில் இருந்து இப்பதான் ஐந்து கிலோ வெயிட் குறைத்து சரியான எடைக்கு வந்துள்ளேன். நீங்கள் என்னடான்னா உடம்பை ஏற்ற சொல்கிறீர்களே :((
என்னுடைய சீனப்பயணத்திலும் நிறைய பேரிடம் கம்யூனிசம் பற்றியெல்லாம் பேசிப்பார்த்தேன், எனக்குத்தெரிந்தவரை அவர்களுக்கு அரசியல் அறிவு ஒன்றுமில்லை/ அல்லது ஆர்வமில்லை.
சாம் பிரிட்டாடோ என்னுடைய பழைய கம்பெனிக்கு இப்போ CEO.
குடுகுடுப்பை - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குடுகுடுப்பையாரே!
கவனிக்க மறந்து இப்போது தான் வாசிக்கிறேன்.
இந்தியாவையும் சீனாவையும் கிட்டத்தட்ட ஒரே தளத்தில் வைத்து சிந்திக்கும் பொதுவான பார்வையிலிருந்த எனக்கு சீனப்பயணம் எதார்த்தத்தை புரிய வைத்தது ..சீனா இந்தியாவை விட 30 வருடங்கள் முன்னால் சென்று கொண்டிருக்கிறது என்பதே என் கணிப்பு.
அருமையான தொடர் ..தொடர்ந்து எழுதுங்கள்.
பொதுவாகவே சீனர்கள் என்றால் மூணு வேளையும் பாம்பு ,பல்லி ,பூரான் போன்றவற்றை தான் சாப்பிடுவார்கள் என இந்தியாவில் இருக்கும்(தவறான) பொதுச் சித்திரம் .ஆனால் உண்மையில் அப்படி அல்ல . சுவாரஸ்யத்துக்காக நீங்கள் போட்டிருக்கும் படங்கள் நம் மக்களின் பொதுச்சித்திரத்தை வலுப்படுத்தும் போலிருக்கே :)
சீனாவில் எனக்கு எந்த உணவுப்பிரச்சனையும் இருக்கவில்லை .என்னைக் கேட்டால் நம்மை விட சீனர்கள் அதிகமாக காய்கறி சாப்ப்பிடுகிறார்கள் .சீனாவில் சீன உணவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
ஜோ -- நன்றி ஜோ!
சீனாவின் இந்த வளர்ச்சிக்குக் காரணம் உறுதியான visionary leadership!
//சுவாரஸ்யத்துக்காக நீங்கள் போட்டிருக்கும் படங்கள் நம் மக்களின் பொதுச்சித்திரத்தை வலுப்படுத்தும் போலிருக்கே :)//
ஆமாம்.. ஒரு சுவாரஸ்யத்துக்காக போட்ட படங்கள்தான்:)
visionary leadership!
உண்மையான வார்த்தைகள்.
இங்குள்ள அரசியல் வியாதிகளிடமும் இந்த பார்வையை எதிர்பார்த்து எதிர்பார்த்து தான் இடுகையில் புலம்ப வேண்டியதாய் உள்ளது.
Post a Comment