இந்திய அரசியலை தற்போது மையம் கொண்டு தாக்கி வரும் புயல் ஒட்டு கேட்கப்பட்ட நீரா ராடியாவின் தொலைபேசி பேச்சுகள். இதனால் வெளிவரும் பல அரசியல் தகிடு தத்தங்கள். நான் அரசியல் தெரியாத ஒரு அப்பாவி:((( ஆனால் இந்த தொலைபேசி ஒட்டு கேட்கும் தொழில் நுட்பம் பற்றி நன்றாக தெரியும். பல தொலை பேசி/செல்பேசி நிறுவனங்களுக்கு இந்த ஒட்டு கேட்கும் தொழில் நுட்ப கட்டமைப்பை வடிவமைத்து கொடுத்திருக்கிறேன். தொலைபேசி ஒட்டு கேட்கும் தொழில் நுட்பம் பற்றிய சிறிய விளக்கம்.
Lawful Interception (LI) என்பது நாட்டிலுள்ள சந்தேக நபர்களின் தொலைபேசி பேச்சுகளை ஒட்டு கேட்பதற்காக ITU (International Telecommunication Union - http://www.itu.int ) மற்றும் ANSI (American National Standards Institute - http://www.ansi.org ) போன்ற நியம அமைப்புகளால் ஏற்படுத்தப்பட்ட தகவல் பறிமாற்ற வரையறை.
இதன்படி ஒவ்வொரு தொலைபேசி/செல்பேசி நிறுவனத்தின் கட்டமைப்பிலுள்ள தொலைபேசியை எப்படி ஒட்டு கேட்க வேண்டும் அதற்கான தேவையான கட்டமைப்பு தொழில்நுட்பம் எப்படி இருக்க வேண்டும் என்று வரையறுக்கப் பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப் படும் தொழில்நுட்பம் என்பதால் மிகக் கடுமையான பலத்த பாதுகாப்பு வரையறைகள் இந்த தொழில்நுட்பத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாம் தொலைபேசி வழியாக பேசும் பேச்சுகள் தொலைபேசி கட்டமைப்பிலுள்ள பல விசைமாற்றிகள் (Switches) வழியாக கன நேரத்தில் கடத்தி செல்லப்படுகின்றன.
விசைமாற்றியில் ஒரு கொக்கி போட்டு பேசுபவர்கள் இருவருக்கும் தெரியாத வகையில் விசைமாற்றி அவர்கள் பேசுவதை அப்படியே ஒரு காப்பி எடுத்து CBI , RAW போன்ற உளவுத்துறை நிறுவனத்திலிருக்கும் LEMF (Law Enforcement Monitoring Facility) என்றழைக்கப்டும் ஒட்டு கேட்கும் நிலையங்களுகு அனுப்பி வைத்து விடும்.
சற்று விரிவாக பார்க்கலாம்...
உளவுத்துறை ஒருவரை சந்தேகத்திற்குரிய நபர் என்று அடையாளம் கண்டு கொண்டவுடன் அவ்ருடைய தொலைபேசியை ஒட்டுகேட்க வேண்டும் என்ற வாரண்டை உளவுத்துறை அதிகாரி LEMF செண்டரில் உள்ள கம்யூட்டரில் பதிவு செய்வார்.
உடனே அந்த தகவல் அந்த சந்தேக நபரின் தொலைபேசி நிறுவனதிலுள்ள IMC (Interception Management Centre) எனப்படும் கம்யூட்ருக்கு HI-1 (Hand Over Interface-1) என்ற தகவல் பாதை வழியாக வந்து சேரும். அதை நிர்வாகம் செய்யும் அதிகாரி யார்? ஏன்? என்ற எந்த கேள்வியும் கேட்காமல் உடனே அந்த தொலைபேசி எண்ணை ஒட்டு கேட்க IMC -யில் பதிவு செய்து விடுவார்.
இந்த IMC -யை ஆபரேட் செய்வதற்கு பலத்த பாதுகாப்பு வரையறைகள் உள்ளன. அவ்வளவு சுலபமாக இதை யாரும் ஹேக் செய்ய முடியாது. IMC கம்யூட்டரை நிர்வகிக்க ITU மற்றும் ANSI நியமனப்படி தேவையான பாதுகாப்பு விதிமுறைகளை தொலைபேசி நிறுவணம் பின்பற்றா விட்டால் அதன் லைசன்ஸ் ரத்து செய்யப் பட்டு விடும். இது தெரியாமல்தான் நீரா ராடியா தன்னுடைய நிறுவனமான டாடா நிறுவன செல்பேசி வழியே பேசினால் யாரும் ஒட்டு கேட்க மாட்டார்கள் என்ற தப்புக் கணக்கு போட்டு “வல்லவனுக்கு வல்லவன்” இந்த உலகத்தில் உண்டு என்ற உண்மையை உணராமல் மாட்டிக் கொண்டார்:( ஒரு சில முறை தப்பு செய்து மாட்டிக்கொள்ளவில்லை என்றால் நாம் செய்யும் தப்பை யாராலும் கண்டு கொள்ள முடியாது என்ற அகம்பாவம் மனிதனுக்கு வந்து விடுகிறது. எனவே தொடர்ந்து தப்புகளை செய்கிறான். ஆனால்... “பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டு கொள்வான்” இதுதான் உண்மை. Law of Average!
சந்தேக நபர் கால் செய்யும்போதோ அல்லது அவருக்கு கால் வரும்போதோ அந்த தொலைபேசி எண் ஒரு சந்தேகப் பேர்வழியின் எண் என்று விசைமாற்றி (Switch)-க்கு தெரிந்து விடும். உடனே அவர் யாருக்கு போன் செய்கிறார் அல்லது யாரிடமிருந்து போன் வருகிறது என்ற தகவல்களை HI-2 (Hand Over Interface-2) என்ற தகவல் பாதை வழியாக உளவுத்துறை நிறுவனத்திலுள்ள LEMF-செண்டருக்கு அனுப்பி விடும். உடனே... பழைய படத்தில் வில்லன் நம்பியார், பி.ஸ்.வீரப்பா அவர்கள் உட்கார்ந்திருக்கும் இடத்தில் சிவப்பு கலர் பல்பில் லைட் எரிவது போல் LEMF செண்டரில் உட்கார்ந்திருக்கும் உளவுத்துறை அதிகாரியின் மேசையில் சிவப்பு கலர் அலராம் அடிக்க ஆரம்பித்து விடும். அவர் ஒரு ஹெட்போனை மாட்டிக்கொண்டு ரெடியாக உட்கார்ந்து விடுவார்.
இந்த பேச்சுகள் LEMF செண்டரிலுள்ள ஹார்டு டிஸ்க்கில் MP-3 பைலாக சேமிக்க படும். ஆனால்.. நம் ஊடகங்கள் (Media) டேப் என்று சொல்லி ஏதோ டேப்பில்தான் ரெக்கார்ட் செய்யப்ப்டுகிறது என்று நம் காதில் பூ சுற்றிக் கொண்டுள்ளார்கள்:) இந்த காலத்தில் யார் டேப் பயன்படுத்துகிறார்கள்? டேப்பில் பதிவு செய்தல் ஒரு காயலான் கடை தொழில்நுட்பம்:)))
தேவைப்ப்ட்டால் இந்த பேச்சுகளை CBI , RAW, Economic Enforcement, State Police போன்ற பல உளவுத்துறை நிறுவனங்களுக்கும் ஒரே நேரத்தில் அந்தந்த உளவுத்துறை நிறுவனத்திலுள்ள LEMF செண்டருக்கு அனுப்பி வைக்க முடியும். எனவே சந்தேக நபர் பேசுவதை பல உளவுத்துறை நிறுவனங்கள் ஒரே சமயத்தில் கண்காணிக்க முடியும்.
தொலைபேசி பேச்சுகள் மட்டுமன்றி சந்தேக நபர்களின் மின்னஞ்சல் (E-mail), மின் அரட்டை (Chat) போன்றவைகளையும் இதே தொழில் நுட்ப அடிப்படையில் ஒட்டு கேட்கலாம்.
போனில் பேசும்போது பார்த்து சூதனமா பேசுங்க... சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ளாதீர்கள்:)))
Wikileaks பற்றி அண்ணன் சுடுதண்ணி கொதிக்க கொதிக்க எழுதும் தொடரையும் படித்து பாருங்கள்...
* * *
பி.கு:
2.5 வார விடுமுறையில் இந்த வாரம் இந்தியா செல்கிறேன். நண்பர்கள் அனைவருக்கும் ”இனிய புத்தாண்டு வாழ்த்துகள்-2011”
* * *
29 comments:
Good Explanation.
ஓ!அப்படியா சேதி...
//இந்திய அரசியலை தற்போது மையம் கொண்டு தாக்கி வரும் புயல் ஒட்டு கேட்கப்பட்ட நீரா ராடியாவின் தொலைபேசி பேச்சுகள்.//
இது மாதிரி ஏதாவது நடந்தாதான் இம்மாதிரி தொழில்நுட்ப பதிவுகள்லாம் வருது. நாங்களும் கொஞ்ச விஷயம் தெரிஞ்சிக்க முடியுது. அதுக்காகவாவது இந்த மாதிரி ஏதாவது நடக்கணும் போல இருக்கு.:-) நாங்கெல்லாம் இன்னும் Strowger swithcing system தாண்டி வரலே. அப்பப்ப கொஞ்சம் தீனி போடுங்க.
இந்த பதிவரை முதல்ல தமிழ்நாட்டுக்கு நாடு கடத்துங்கய்யா!நிறைய வேலை கிடப்புல இருக்குது:)
தகவல்களுக்கு நன்றி.
http://cellphonespymaster.com/
ஒட்டுக்கேட்பு - இந்த சேவையை தனியார் நிறுவனங்கள் செய்வதாக சொல்கின்றன. உண்மையில் வாய்ப்பிருக்கிறதா ?
ஒட்டுக்கேட்பது தவறு என்று தெரிந்த நண்பர் ஒருவர் வேறு சில காரணங்களுக்காக இந்த சேவையை நாடலாமா என்று கேட்டார், அது டுபாக்கூர் நிறுவனம் என்று எச்சரித்தேன். சரியா ?
nice explanations!
Thanks!
Welcome to native!
மேட்டரையும் வெளக்கமா போட்டுட்டு, ஊருக்கும் போறேன்னு சொல்லிருக்கீங்க.. யாராவது புடிச்சு வெச்சுக்கப் போறாங்க...
கோவி.கண்ணன்--
//
http://cellphonespymaster.com/
ஒட்டுக்கேட்பு - இந்த சேவையை தனியார் நிறுவனங்கள் செய்வதாக சொல்கின்றன. உண்மையில் வாய்ப்பிருக்கிறதா ?
//
கோவியாரே,
இது போன்ற சில ஒட்டு கேட்கும் (Localized) தொழில்நுட்பம் இருக்கின்றது. இதற்கு 100% உத்ரவாதம் கிடையாது. மேலும் இது போன்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் போது ஒட்டு கேட்கப்படும் செல்பேசியை பயன்படுத்துவருக்கு சந்தேகம் வர வாய்புகள் உள்ளன.
நான் சொல்லியிருக்கும் முறைதான் ITU and ANSI போன்ற நியமனங்களால் வரையறுக்கப்பட்ட தொழில்நுட்பம். இதைத்தான் எல்லா நாடுகளிலுள்ள உளவுத்துறை நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. இதை பயன்படுத்தும்போது கண்காணிக்கப்டும் சந்தேக நபருக்கு தான் ஒட்டு கேட்கப்படுவது எக்காரணம் கொண்டும் தெரியாது.
ரவி நீங்க எழுதின பதிவுகளில் அழுத்தமான பதிவு இது. அரசியல் தொடர்புள்ள நண்பர்கள் என்னிடம் பேசும் போது உன் பேச்சுக்கூட ஓட்டுக் கேட்க வாய்ப்புண்டு என்று கலாய்ப்பார்கள். இப்போது பல விசயங்கள் புரிகின்றது. வாய்ப்பு இருந்தால் வாருங்கள். திருப்பூர் தேவியர் இல்லம் உங்களை இனிதே வரவேற்கிறது.
சூடான விஷயம் பற்றி எல்லோரும் விவாதித்தாலும் அதில் உள்ள தொழில்நுட்ப விஷயத்தை யாரும் கண்டு கொள்வதில்லை. தெளிவா சொல்லி இருக்கீங்க அங்கிள் ...நன்றி !
அருமை நணபரே... மிக்க நன்றி..
மிக அருமையான விளக்கம். அதேபோல் வளைகுடா நாடுகளில் வாய்ப் போன்களை தடை செய்து அனைவரும் தங்கள் டெலிகாம்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று எங்களின் மேல் மண்னை அள்ளிப்போடுகிறார்கள். டெலிகாம் நிறுவங்கள் எப்படி வாய்ப்பை தடை செய்கிறார்கள். தடை இல்லாமல் நாங்கள் வாய்ப் (ஆக்சன் வாய்ப் மற்றும் பல) கால்களை எப்படி பாவிப்பது என்று தெளிவாக அறியத்தாருங்களேன்.
நட்புடன்
பெரோஸ்கான்
RIM நிறுவனம் அதன் encryption தொழில்நுட்பம் மூலம் ஒட்டு கேட்க இயலாது (என் கணிப்புபடி email, messaging மட்டுமே) என சொல்கிறதே. இது பற்றி சிறிது விளக்கவும்.
Enjoy Trip!!!
எனக்கொரு சந்தேகம். என்றோ பேசியதை இப்போது பதிவு செய்ய முடியுமா? (அப்போது பதிவு செய்யாமல் விட்டது)
One of the best technological explanation in recent times.
Thanks for sharing.
இந்த பதிவரை முதல்ல தமிழ்நாட்டுக்கு நாடு கடத்துங்கய்யா!நிறைய வேலை கிடப்புல இருக்குது:)
nanum valimolikiren
பயனுள்ள கட்டுரை. வாழ்த்துகள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்-2011
உங்களின் கட்டுரை எனக்கு மிகவும் பயன்பட்டது ஆசிரியர் என்ற முறையில் என் மாணவர்களுக்கு இக்கட்டுரையை அச்சிட்டு எடுத்துச்செல்வேன் மிக்க மகிழ்ச்சி நேற்று உங்களுடன் ஒருநாளைக் கழித்ததை எண்ணி மகிழ்கிறேன். தொடரட்டும் உங்கள் தொழில்நுட்பப் பணிகள்
அசத்தல்!
//நாங்கெல்லாம் இன்னும் Strowger swithcing system தாண்டி வரலே. அப்பப்ப கொஞ்சம் தீனி போடுங்க.//
கும்மி டெலிகாம் dept ஆள் மாதிரி தெரியுது. strowger எல்லாம் தெரியுது. அதை எல்லாம் கயலான் கடைக்கு அனுப்பியாச்சு
//கும்மி டெலிகாம் dept ஆள் மாதிரி தெரியுது. strowger எல்லாம் தெரியுது. அதை எல்லாம் கயலான் கடைக்கு அனுப்பியாச்சு//
கல்லூரியில் படித்ததோடு சரி. அதற்கு பின்பு டெலிகாம் தொடர்பான அறிதல் அற்றுப் போய் விட்டது. அவ்வப்போது இது போன்ற பதிவுகள் மூலம் கொஞ்சம் அறிந்து கொள்ளலாம் என்னும் நப்பாசைதான். :-)
////கும்மி டெலிகாம் dept ஆள் மாதிரி தெரியுது. strowger எல்லாம் தெரியுது. அதை எல்லாம் கயலான் கடைக்கு அனுப்பியாச்சு//
எதோ முனைவர் சாம் பிட்ரோடா அருளிய CDOT இன்னமும் ஓடிக்கொண்டு இருக்கிறது. Landline கதை முடிந்தால் டெலிகாம் துறையில் சீனா ஆதிக்கம் தான் (ZTE, HUAWEI)
உங்கள் ஊக்கத்துக்கும், அன்புக்கும் மிக்க நன்றி தோழரே, தொடர்ந்து எழுதி அசத்துங்க :)
திரு.சுடுதண்ணி அவர்களின் வலை பூ மூலம் தங்களின் வலை பூ அறிமுகம் கிடைத்தது. அருமையான பதிவுகள். வாழ்த்துக்கள். தங்கள் பணி தொடரட்டும்.
குறிப்பு:எமது தளத்தில் தங்களது பதிவுகளை பிரசுரிக்க அனுமதி கிடைக்குமா?
பொங்கல் திருநாள் வாழ்த்துகள் ரவி.
தெளிவான விளக்கம்
தகவலுக்கு நன்றி
Post a Comment