சீனா-2
டெங் ஜியாபெங் திறந்த பொருளாதார கொள்கையின்படி சீனாவின் சந்தையை ஒரேயடியாக திறந்து விடாமல் படிப்படியாக திறந்து விட்டார். நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் அதிகாரிகளை முக்கிய பொறுப்புகளில் அமர்த்தி சீனாவின் பொருளாதாரத்தை ஒரு கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரமாக (Controlled Economy) வழிநடத்தி சென்றார். சீனாவின் இந்த பொருளாதார கொள்கையினால் அடைந்த சாதனைகள்:
1. டெங் ஜியாபெங் முதன்முதலில் “Special Economic Zone (சிறப்பு பொருளாதார மண்டலம்)” என்ற திட்டத்தை அறிமுகப் படுத்தினார். இந்த சிறப்பு பொருளாதார வட்டத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் தொழிற்சாலைகள் அமைக்க அனைத்து வசதிகள் மற்றும் வரிச்சலுக்கைகள் கொடுக்கப்பட்டன. இதனால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களின் தொழிற்சாலைகளை இந்த சிறப்பு பொருளாதார வட்டாரத்தில் தொடங்கின. 20 வருடங்களுக்கு முன்பு ஹாங்கிங்கிற்கு அருகில் ஒரு சிறிய கிராமமாக இருந்த சென்சென் (Shenzhen) இன்று ஒரு கோடி மக்கள்கள் வசிக்கும் ஒரு நகரமாக திகழ்கிறது. சீனாவின் கிழக்கு கடற்கரையையொட்டியுள்ள பகுதிகளில் மட்டும் தற்போது 14 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளன. ஷங்காய் நகருக்கு அருகிலுள்ள ஷுஜாவு (Shouzou) நகரில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்திலிருக்கும் Michell wool தொழிற்சாலைக்கு சென்று வந்தோம். மிக அருமையான கட்டமைபு வசதிகள் இந்த சிறப்பு பொருளாதார மண்டல தொழிற்பேட்டையில். இந்த தொழிற்சாலையில் பணியாற்றும் சவுத் ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த பொது மேலாளர் ஷுஜாவு (Shouzou) நகர அதிகாரிகள் செய்து கொடுக்கும் வசதிகளையும், உதவிகளையும் மிகவும் பாராட்டினார். சீனாவின் இந்த சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்தின் வெற்றியைப் பார்த்த்துதான் இன்று இந்தியா, பிரேசில் போன்ற மற்ற நாடுகள் இந்த திட்டத்தை பின்பற்றி வருகின்றன
2. கடந்த முப்து ஆண்டுகளாக சீனாவின் பொருளாதாரம் சராசரியாக ஆண்டிற்கு 10% வளர்ச்சியடைந்து வருகிறது. உலகிலேயே ஒரு நாட்டின் பொருளாதாரம் தொடர்ச்சியாக இந்த அளவிற்கு வளர்சியடைந்து வருவது இதுதான் முதல் தடவையாகும்.
4. கடந்த 30 ஆண்டுகளில் கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கோட்டிலிருந்து வெளியே வந்துள்ளார்கள். சீனாவின் கணக்குப்படி சீனாவில் வறுமையில் வாடும் மக்களின் சதவீதம் 1981 ஆம் ஆண்டு 53%. அது 2005-ஆம் ஆண்டு வெறும் 2.5 சதவீதம்தான்.
5. சீனாவின் சாலைகள், தொடர் வண்டி பாதைகள் (Railways), விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்ற கட்டமைப்பு (Infrastructure) வள்ர்ச்சியடைந்த நாடுகள்களுக்கு இணையாக தற்போது உள்ளன. ஷங்காய் நகரிலிருந்து பீஜிங் நகருக்கு தொடர் வண்டியில் பயணம் செய்தபோது ஐரோப்பா அதிவிரைவு தொடர்வண்டி பயணம் போல மிக அருமையாக இருந்தது.
6. பொருளாதார தலைநகரான ஷங்காய் நகரின் கட்டமைப்பு வியக்கும் வகையில் உள்ளது. நான் கடந்த 17 வருடங்களாக வேலை நிமித்தம் உலகிலுள்ள பல நாடுகள், நகரங்களுக்கு பயணம் செய்து வருகிறேன். ஷங்காய் நகரின் கட்டமைப்பைக் கண்டு பிரமித்து போனேன்! ஷங்காய் நகரின் கட்டமைப்பு வளர்ச்சியடைந்த நாடுகளின் கட்டமைப்பு குறிப்பாக நியுயார்க் நகரித்தின் கட்டமைப்பைவிடச் சிறப்பாக உள்ளது. நகர் முழுவதும் பறக்கும் அதிவிரைவு சாலைகள் (Elevated highways), சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகணங்களுக்கு தனி சாலைப் பாதை, 11 வழித்தடங்கள் உள்ள மெட்ரோ ரயில், புதிய விமான நிலையம், நகர் முழுவதும் வானுயர்ந்த கட்டிடங்கள் என்று ஷங்காய் நகரின் கட்டமைப்பைப் பற்றி அடுக்கிக்கொண்டே போகலாம்....
7. உலகமே மூக்கின் மேல் விரல் வைத்து வியக்கும் வண்ணம் 2008 ஒலிம்பிக் போட்டிகளை வெற்றிகரமாக பீஜிங் நகரில் சீனா நடத்திக்காட்டி தன்னுடைய பொருளாதார சக்தியை உலகுக்கு காட்டியது.
8. ஷங்காய் நகரில் Expo-2010 உலக வர்த்தக கண்காட்சிக்காக ஹுயாங் பூ (Huang Pu) ஆற்றங்கரையில் 5.5 சதுர கிலோ மீட்டரில் புதிய நகரத்தை உருவாக்கி தற்போது வெற்றிகரமாக Expo-2010 கண்காட்சியை சீனா நடத்தி வருகிறது.
9. சீனா வாங்கி வைத்திருக்கும் அமெரிக்காவின் கருவூல கடன் பத்திரங்கள்களின் (Treasury Bills) மதிப்பு கிட்டத்தட்ட $1 Trillion. இதன் மூலம் அமெரிக்கா-சீனா வர்த்தக பேச்சு வார்த்தைகளின்போது அமெரிக்காவின்மீது சீனாவால் கடுமையான் அழுத்தம் கொடுக்க முடியும்.
10. தன்னிடம் உள்ள அபரிதமான அந்நிய செலவாணியைக் கொண்டு சீனா பல நாடுகளிலுள்ள இயற்கை வளங்களை முக்கியமாக எண்ணெய் வயல்களை (Oil Fields) வாங்கி வருகின்றது.
11. தொலை நோக்கு திட்டத்தில் ஆப்ரிக்கா கண்டத்தில் பல நாடுகளில் நிலங்களை சீனா வாங்கி குவித்து வருகின்றது. வருங் காலத்தில் சீனாவில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டால இந்த நிலங்களில் உணவு உற்பத்தி செய்வதற்காக!
12. சீனாவின் குறைந்த உற்பத்தி செலவு காரணமாக இன்று சீனா உலக மக்களுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக விளங்குகிறது.
10. தன்னிடம் உள்ள அபரிதமான அந்நிய செலவாணியைக் கொண்டு சீனா பல நாடுகளிலுள்ள இயற்கை வளங்களை முக்கியமாக எண்ணெய் வயல்களை (Oil Fields) வாங்கி வருகின்றது.
11. தொலை நோக்கு திட்டத்தில் ஆப்ரிக்கா கண்டத்தில் பல நாடுகளில் நிலங்களை சீனா வாங்கி குவித்து வருகின்றது. வருங் காலத்தில் சீனாவில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டால இந்த நிலங்களில் உணவு உற்பத்தி செய்வதற்காக!
12. சீனாவின் குறைந்த உற்பத்தி செலவு காரணமாக இன்று சீனா உலக மக்களுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக விளங்குகிறது.
சீனாவின் வளர்ச்சி மற்றும் சாதனைகளைப் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்..... சீனாவின் பிரச்சனைகள், சீனா எதிர்நோக்கும் சவால்கள் என்ன?
--தொடரும்
சீனா படங்கள்:
Tiaanmen Square
Shanghai Stock Exchange
Michell Wool Factory
Wu Zen Cultural Village
Shanghai Railway Station
11 comments:
சிறப்பான இடுகை ரவி,
சீனாவின் வளர்ச்சியை உலக நாடுகள் கட்டுபடுத்தாத அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது, அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்ற போது அங்கும் சீனப் பொருள்களின் ஆக்கிரமிப்புகளையே காண முடிந்தது. உலக சந்தையை ட்ராகன் கைகளில் சிக்கி இருக்கிறது. சீனா வல்லரசு நிலையை அடைந்துவிட்டதாகவே நினைக்கிறேன்.
அருமையான தகவல்கள்..தொடருங்கள்.
அடுத்த இடுகைக்காக காத்திருக்கிறேன்
வாழ்த்துகள்
Thanks for sharing
கோவி.கண்ணன் -- நன்றி
ஜோ -- நன்றி
நிகழ்காலத்தில் -- நன்றி
வானம்பாடிகள் -- நன்றி பாலா சார்
நல்ல இடுகை, தகவல்கள்!
சீனாவின் வளர்ச்சி பிரமிக்கத்தக்கது!
இருக்கின்ற வளங்களை சிறப்பாக பயன்படுத்தி கடுமையாக உழைப்பதால் முன்னேற்றம் தானாக வரும். தனி மனித முன்னேற்றத்தைக் காட்டிலும் சமூக முன்னேற்றத்தில் கவனம் இருப்பதால்
இந்த வளர்ச்சி என்பது எனது எண்ணம். உங்கள் பதிவுகள் சிறப்பாக உள்ளன. வாழ்த்துக்கள்.
ஜோதிபாரதி -- நன்றி ஜோதியாரே!
விண்சென்ட் -- தங்களின் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
good!
go ahead...
பா.ரா - நன்றி பா.ரா அண்ணே!
நிறைய நண்பர்கள் வந்துள்ளார்கள். மகிழ்ச்சி.
Post a Comment