வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Thursday, July 01, 2010

Dr.Sam Pitroda - Last Part (5)


முனைவ்ர். சாம் பிட்ரோடா (5)1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியது. வி.பி.சிங் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆட்சியை கைப்பற்றியது. கேரளாவைச் சேர்ந்த உன்னிகிருக்ஷ்ணன் தொலைத் தொடர்பு மந்திரியானார். சாம் தனது அறிவியல் ஆலோசகர் (Scientific Advisor to Prime Minister) பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் தொலைத் தொடர்பு குழ தலைவர் அரசியல் சாராத பதவி (Non political appointment) என்பதால் இந்த பதவியை ராஜினாமா செய்ய வில்லை. தான் தொடங்கிய திட்டங்களை முழுமையாக முடிக்க வேண்டும் என்று தனது கொள்கையில் உறுதியாக இருந்தார்.

சாம் அவர்கள் ராஜீவின் நண்பர் என்பதை மனதில் கொண்டு தொலைத் தொடர்பு மந்திரி உன்னிகிருக்ஷ்ணன் சாமிற்கு பல தொல்லைகள் கொடுத்தார். ஆனால் சாம் அவற்றை கண்டு கொள்ளாமல் தனது திட்டங்களை தொடர்ந்து செயல் படுத்தும் வேலைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். பல மாதங்கள் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்தும் தாங்கிக் கொண்டு ராஜினாமா செய்யாமல் வேலை பார்க்கும் சாமை பார்த்து கோபம் கொண்டு சாம் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி விசாரணைக் கமிசன் அமைத்தார் உன்னிகிருக்ஷ்ணன். இதை சாம் சற்றும் எதிர் பார்க்கவில்லை. கோடிக் கணக்கில் அமெரிக்காவில் சம்பாதிக்ககூடிய வேலையை விட்டு விட்டு இந்தியாவிற்கு திரும்பி வந்து ஒரு ரூபாய் சம்பளம் வாங்க்கிக்கொண்டு இரவு பகலாக தாய்நாட்டிற்கு உழைத்த என் மீதா ஊழல் குற்றசாட்டு என்று வேதனையில் துடித்தார் சாம். இதன் பலன் 1990 ஆம் ஆண்டில் தனது 48 வயதில் சாமிற்கு பெரிய மாராடைப்பு (Massive Heart Attack).

இந்தியா முழுவதும் உள்ள விங்ஞானிகள், போராசிரியர்கள், தொலைத் தொடர்பு பொறியிலாளர்கள் கொதித்து போய் அரசாங்காத்திற்கு எதிராக போரட்டத்தில் ஈடுபட்டார்கள். சாமிற்கு நான்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சாம் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றசாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா கூறி தொலைத்தொடர்பு மந்திரி உன்னிகிருக்ஷ்ணன் மீது கடும் அதிருப்தியை தெரிவித்தார். 1990 ஆம் ஆண்டு வி.பி.சிங்கின் அரசாங்கம் ஆட்சியை இழந்தது. சந்திரசேகர் காங்கிரஸ் ஆதரவில் பிரதமரானர். பை பாஸ் அறுவைச் சிகிச்சை முடிந்து பல மாதங்கள் ஓய்வுக்குப் பிறகு 1991 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் தொலைத் தொடர்பு குழு தலைவர் பணிக்கு திரும்பினார். ஆனால் 1991 ஆம் ஆண்டு மே மாதம் தனது உற்ற தோழன் ராஜீவ் காந்தி கொலையால சாம் மிகவும் மனமொடிந்து போய்விட்டார். நரசிம்மராவ் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டவுடன் அப்போதைய தொலைத் தொடர்பு மந்திரி ராஜேக்ஷ் பைலட்டிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு 1991 ஆம் ஆண்டு இறுதியில் குடும்பத்துடன் சிகாகோவிற்கு திரும்பி சென்று விட்டார் சாம்.

சிகாகோவிற்கு திரும்பி வந்தபிறகு சில காலம் ஓய்வெடுத்து விட்டு C-SAM, Inc என்ற கம்பெனியை தொடங்கி இன்றும் வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார். 2004 ஆம் ஆண்டு டாக்டர். மன்மோகன் சிங் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டவுடன் இந்திய அறிவுசார் ஆணையத்தை (National Knowledge Commission) அமைத்து அதன் தலைவராக சாம் அவர்களை தலைவராக நியமித்தார். 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை அறிவுசார் ஆணையத்தின் தலைவராக பணியாற்றி 300-க்குக் மேற்பட்ட பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு சமர்பித்தார். 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங்கின் அறிவியல் ஆலோசராக (Scientific Advisor to Prime Minister) ஆக பணியாற்றி வருகிறார்.

இந்திய அரசு 2009 ஆம் ஆண்டு சாம் அவர்களுக்கு “பத்மபூசன் விருது வழங்கி கவுரவித்தது.  

இந்திய தொலைத் தொடர்பில் புரட்சி ஏற்படுத்தி பல சாதனைகள் செய்த முனைவர். சாம் பிட்ரோடா அவர்கள் மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்து இந்தியாவின் முன்னேற்றதிற்கு உதவ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

சில சுட்டிகள்:

1. சாம் அவர்களைப் பற்றிய you tube வீடியோகள்:
  


    
பி.கு:

1. 1991 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் சாம் அவர்கள் தொலைத் தொடர்பு குழு தலைவராக பணியாற்றிய போது அவரது அலுவகத்தில் புது கணணியை நிறுவி Novell LAN கணணி கட்டமைப்பில் இணைத்து சாம் அவர்களுக்கு Novell LAN கணணி கட்டமைப்பை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இந்த 22 வயது சிறியவன் விளக்கியிருக்கிறேன். சாம் அவர்களுடன் பணியாற்றிய போது ஏற்பட்ட பிரமிப்புகளுக்கு தனி பதிவு தேவைப்படும். சாம் அவர்கள் தொடங்கிய C-DOT நிறுவனத்தில் வேலை பார்க்க வேண்டும் என்று எண்ணி C-DOT-க்கு விண்ணப்பம் செய்து தேர்வாகி 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத்தில் C-DOT, Bangalore-ல் சேர்ந்தேன்.

2. இந்திய தொலைத் தொடர்பு கட்டமைப்புக்கு வெவ்வேறு கால கட்டத்தில் ஒரு துளி பங்காற்றியிருக்கிறேன்

  • 1992-1992 ஆம் ஆண்டுகளில் C-DOT-ல் பணியாற்றியபோது C-DOT முதல் 10,000 தொலைபேசி இணைப்புகள் இணைப்பகம் சோதனையில் (Field Trial) பணியாற்றியது. மேலும் த்மிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் பல C-DOT எண்ணியல் 500-2000 Lines தொலைபேசி இணைப்பகங்களை நிறுவியிருக்கிறேன்
  • 1998 ஆம் ஆண்டு இந்தியாவில் முதன் முதலில் கட்டணம் இல்லா (Toll Free ) தொலைபேசி சேவையை அறிமுகப் படுத்திய புராஜக்டில் C-DOT-டோடு இணைந்து பணியாற்றியிருக்கிறேன்
  • 2006-2007 ஆம் ஆண்டுகளில் ரிலையன்ஸ் தொலைபேசி நிறுவனத்தின் Voice Over IP கட்டமைப்பை வடிவமைத்தவர்களில் நானும் ஒருவன் (Architect) 
  • 2008 ஆம் ஆண்டு முதல் BSNL, MTNL, Reliance Communications, Bharti AirTel  போன்ற நிறுவனங்களுக்கு அடுத்த தலைமுறை கட்டமைப்பு (Next Generation Networks) என்ற தொழில் நுட்பத்த்திற்கு ஆலோசகராக (Consultant) பணியாற்றி வருகிறேன்.

சரி.. இவ்வளவு தூரம் படித்து தொலைத் தொடர்பு பற்றி ஓரளவு தெரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். எனவே இந்த ஆடியோவைக் கேட்டு “யார் அந்த இன்கம்மிங்என்று கொஞ்சம் சொல்லி விட்டு போங்களேன்.


-- நிறைவு --


Post a Comment