வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Wednesday, June 30, 2010

Dr.Sam Pitroda - Part 4

முனைவ்ர். சாம் பிட்ரோடா (4)




தொலைபேசித்துறை (DOT) உயர் அதிகாரிகள் மேல் நாட்டு நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அந்த நிறுவன்ங்கள் கொடுக்கும் காலாவதியான இயந்திரவியல் விசைமாற்றிகளையும் மற்ற உபகரணங்களையும் வாங்க்கிக்கொண்டிருந்தார்கள். C-DOT மற்ற அரசாங்க நிறுவனங்களைப் போல் சொன்ன நேரத்தில் எதையும் முடிக்க மாட்டார்கள், கொஞ்ச நாட்களில் மூடி விடுவார்கள் என்று நினைந்திருந்தார்கள். ஆனால், சாம் மூன்று ஆண்டுகளுக்கு குறைவாக 128 Lines RAX உற்பத்தி செய்து காட்டியபோது மிரண்டு விட்டார்கள். காரணம்... C-DOT மிடமிருந்து எண்ணியல் விசைமாற்றிகளை தொலைபேசித்துறை வாங்கினால் அவர்களுக்கு லஞ்சம் கிடைக்காது! எனவே C-DOT 128 Lines RAX  இணைப்பகத்தை தொலைபேசித்துறை கட்டமைப்பில் சோதனை செய்ய (Filed Trial) தாமதப்படுத்துதல், தேவையானவைற்றை செய்து கொடுக்காமல் இழுத்தடித்தல் போன்ற பல தொல்லைகளை C-DOTக்கும் சாம் அவர்களுக்கும் தொலைபேசித்துறை உயர் அதிகாரிகள் கொடுத்தார்கள்.

சந்தையில் போட்டித்தன்மை இருந்தால்தான் எண்ணியல் விசைமாற்றிகளின் விலை குறைவு, சந்தை ஆற்றல் (Market Efficiency) ஆகியவை மேம்படும் என்று சாம் யோசித்து C-DOT-ன் எண்ணியில் விசைமாற்றிகளை பொதுத்துறை மற்றும் L&T, WS Industries போன்ற தனியார் நிறுவனங்களுக்கு C-DOT தொழில்நுட்பத்தை ராயல்டி (Royalty) அடிப்படையில் விற்கும் திட்டத்த்தை கொண்டு வந்தார். ஆனால் அதற்கு தொலைபேசித்துறை உயர் அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ITI (India Telephone Industries) எனப்படும் பெங்களூரில் உள்ள மத்திய அரசு பொதுத்துறை நிறுவனத்திடம்தான் C-DOT தனது எண்ணியல் விசைமாற்றி தொழில்நுட்பத்தை கொடுக்க வேண்டும். ITI மட்டும்தான் C-DOT எண்ணியல் விசைமாற்றிகளை தயாரிக்க வேண்டும் என்று கூறினார்கள். ITI பெரும்பாலன பொதுத்துறை நிறுவனங்கள் போன்ற ஒரு ஆற்றலற்ற (Inefficient) நிறுவனம். ITI-யிடம் கொடுத்தால் அவர்கள் ஒரு வழி பண்ணி விடுவார்கள் என்பது தொலைபேசித்துறை உயர் அதிகாரிகளின் கணக்கு (என்னா... ஒரு வில்லத்தனம்!). ஆனால் சாம் ஒரு போதும் முடியாது என்று கூறிவிட்டார்.

தொலைபேசித்துறை அதிகாரிகள் கொடுக்கும் தொல்லைகளை ராஜீவ் காந்தியிடம் எடுத்து கூறினார் சாம். அதற்கான தீர்வு என்ன என்று ராஜீவ் சாமிடம் கேட்டார். இந்தியாவில் உள்ள அனைத்து தொலைபேசி சார்ந்த நிறுவனங்களான DOT (Department of Telecommunications), TEC (Telecommunication Engineering Centre), C-DOT (Centre for Development of Telematics), ITI (Indian Telephone Industries) ஆகியவற்றையெல்லாம் Telecom commission எனற ஒரு அமைபின்கீழ் கொண்டு வர வேண்டும் என்றார். உடனே ராஜீவ அப்படியே செய்து விடலாம்... நீங்களே Telecom commission தலைவர் ஆகி விடுங்கள் என்றார். மேலும ராஜீவ் நீங்கள் அமெரிக்க குடிமகன் (American Citizen), இதற்கு மந்திரிசபையில் பலத்த எதிர்ப்பு இருக்கும். நீங்கள் அமெரிக்க குடியுரிமையை கொடுத்து விடுங்கள். உங்களுக்கு காபினெட் மந்திரி அந்தஸ்தில் Scientific Advisor to Prime Minister என்ற பதவி கொடுக்கிறேன்என்றார். அரசாங்க அதிகாரிகளின் எதிர்ப்பை சமாளித்து தனது செயல் திட்டங்களை செயல்படுத்த ராஜீவ் சொல்வதுதான் சரியான வழி என்று முடிவு செய்து 1987 ஆம் ஆண்டு தனது அமெரிக்க குடியுரிமையை கொடுத்துவிட்டு பிரதமரின் அறிவியல் ஆலோசகர் (Scientific Advisor to Prime Minister) மற்றும் தொலைபேசித்துறை குழு (Telecom Commission) தலைவர் என்ற பதவிகளை ஏற்றுக்கொண்டார். சாமின் மனைவியும், குழந்தைகளும் டில்லிக்கு வந்து செட்டிலானார்கள்.

அதிகாரமுள்ள இரண்டு பதவிகள் சாமிடம் இருந்ததால் அரசாங்க அதிகாரிகளின் தடைகளை தவிடுபொடியாக்கிவிட்டு முன்னேறினார். தடை போட்ட உயர் தொலைபேசித்துறை அதிகாரிகளை பெண்டு நிமித்தினார். சாம் ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பர் என்பதால் எல்லா மந்திரிகளும், தலைவர்களும் சாமிடம் மரியாதையாக நடந்து கொண்டார்கள். சாம் தனது திட்டப்படியே  C-DOT எண்ணியியல் விசைமாற்றிகள் மற்றும் தொலைபேசி அனுப்புதல் (Telecom transmission) உபகரணங்கள் தாயாரிக்கும் உரிமைகளை ராயல்டி அடிப்படையில் 40 தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கினார். 128 RAX கிராமப்புற தொலைபேசி இணைப்பகம் தொலைபேசித்துறை கட்டமைப்பில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்தக் கால கட்டத்தில் 256 RAX கிராமப்புற தொலைபேசி இணைப்பகமும் தயாராகி சோதனை செய்யப்பட்டது. 40 நிறுவனங்கள் இந்த கிராமப்புற தொலைபேசி இணைப்பககங்களை அதிக அளவில் உற்பத்தி செய்யத் தொடங்கின. இந்தியாவில் உள்ள கிராமங்கள்தோறும் கிராமப்புற தொலைபேசி இணைப்பககங்கள் அமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டன.

1988 ஆம் ஆண்டில் சிறிய நகரத்துக்கான 512 Lines SBM (Single Base Module) தொலைபேசி இணைப்பகம் ரெடி. பெரிய நகரத்துக்கான 10,000 lines தொலைபேசி இணைப்பகம் குறித்த 5 ஆண்டுகளில் முழுவதுமாக தாயார் ஆகவில்லை. ஆனால் அதன் நகல் (Prototype) தாயாராக இருந்தது. 1989 ஆம் ஆண்டு பெங்களூரில் உள்ள அல்சூர் (Ulsoor) தொலைபேசி இணைப்பகத்தில் C-DOT-ன் 10,000 Lines தொலைபேசி இணைப்பகதின் சோதனை (Field Trial) தொடங்கியது. இதன் சிறப்பு என்னவென்றால் 1000 தொலைபெசி இணைப்புகள் தொடங்கி தேவைக்கேற்ப Base Module-களை இணைத்து 10,000 இணைப்புகள் வரை கொண்டு செல்லலாம்.



        C-DOT’s First 10,000 Lines Exchange - Ulsoor, Bangalore - 1992
                
இந்தக் காலகட்டத்தில் டில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற பெரிய நகரங்களில் மேல் நாட்டு நிறுவனங்களிடமிருந்து எண்ணியில் நிலைமாற்றிகள் வாங்கி தொலைபேசித்துறையின் கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டது. இதனால் STD/ISD தொலைதூர சேவைகள் தொடங்கப்பட்டன. நகரங்களில் PCO (Public Calling Office) எனப்படும் மஞ்சள் நிற பொது தொலைபேசி நிலையங்கள் அமைக்கப்பட்டன. PCO அமைக்க ஊனமுற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. வருமானத்தில் PCO உரிமையாளர்களுக்கு 20% கமிசன் கொடுக்கப்பட்டது.
  
இவ்வாறாக சாமின் திட்டங்கள், கனவுகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேறிக் கொண்டிருந்தது. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் வாழ்க்கையில் எப்போதும் வெற்றிகள் மட்டும் கிடைத்துக் கொண்டிருக்காது. தோல்விகள், சோதனைகள் எல்லோருக்கும் வரும். அது கடவுளின் நியதி.... Law of Average! 1989 ஆம் ஆண்டில் சாமிற்கு மிகப் பெரிய சோதனை வந்தது. அதன்பின் ஏற்பட்ட தொல்லைகள், மன அழுத்தங்களால் சாமின் 48 வயதில் 1990 ஆம் ஆண்டு மிகப்பெரிய மாரடைப்பு (Massive Heart Attack)..... ஏன்?                                                     
              -தொடரும்

6 comments:

பா.ராஜாராம் said...

மிக சிறப்பான நடையில், துல்லியமாக விவரிக்கிறீர்கள் ரவி.

இவ்வளவு காலமா, எப்படிய்யா எழுதாம இருந்தீங்க?

fantasic! go ahead...

தமிலிஷ்- திரட்டியிலும் இணைத்து விட்டீர்களா? ஏன், ஓட்டு பட்டை இல்லை? ஓட்டு முக்கியமில்லை ரவி. பரவலாக இந்த எழுத்து/ இடுகை பார்க்கப் படனும் என்பதால் கேட்கிறேன்...

Ravichandran Somu said...

பா.ரா - அண்ணே, இந்த தொடருக்கு தாங்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதவிற்கு மிக்க நன்றி!

தமிலிஷ்- திரட்டியில் இன்னும் இணைக்க வில்லை. இணைத்து விடுகிறேன்.

சிவபிரகாஷ் பெரியசாமி said...

மிக சிறப்பான இடுகை.

மிகவும் சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் அமைந்து இருக்கிறது.

இடுகைக்கு மிக்க நன்றி!

Ravichandran Somu said...

சிவபிரகாஷ் - நன்றி

Saravanan, Edamelaiyur said...

Excellent Ravi. First time i read this article and really good stuff.

Keep it up.

Ravichandran Somu said...

சரவணன் - நன்றி