வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Monday, September 06, 2010

*1*: நட்சத்திர வணக்கம்வணக்கம்!

இந்த வாரத்தின் தமிழ்மண நட்சத்திரமாக என்னைத் தேர்ந்தெடுத்த தமிழ்மணத்திற்கு எனது முதற்கன் நன்றி!

தமிழ்மணத்தை காசி அவர்கள் 2004/2005 ஆம் ஆண்டு தொடங்கிய காலகட்டத்திலிருந்து தமிழ்மணத்தின் வளர்ச்சியையும் அதன் சேவைகளையும் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். காசி அவர்கள் தமிழ்மணத்தை விற்க முடிவு செய்தபோது “தமிழ்மணம்ஒரு நல்ல அமைப்பிடம் சென்றடைந்து தமிழ் பதிவுலகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பியவர்களில் நானும் ஒருவன். அதன்படியே அமெரிக்காவிலிருக்கும் நண்பர்கள் TMI என்ற அமைப்பை ஏற்படுத்தி தமிழ்மணத்தை வாங்கி நடத்த முடிவு செய்தார்கள். இந்த நண்பர்கள் அன்றிலிருந்து இன்று வரை தங்களது சொந்த நேரத்தையும், பணத்தையும் செலவழித்து தமிழ்மணத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளில் தமிழ்மண  நிர்வாகிகளை அவ்வப்போது சிலர் கடுமையாக விமர்சித்ததைப் பார்த்து வருந்தியிருக்கிறேன். காரணம்... தமிழ்மணத்தை நிர்வகிப்பது அவர்களது முழு நேர தொழில் அல்ல. தமிழ் மொழி மற்றும் இன ஆர்வத்தில் தங்களுடைய சொந்த நேரத்தை செலவழித்துதான் தமிழ்மணத்தை நடத்தி வருகிறார்கள்.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரிதாம்
சொல்லிய வண்ணம் செயல்

களத்தில் இறங்கி வேலை பார்த்தால்தான் தெரியும்... அதன் கஷ்ட நஷ்டங்கள். இத்தருணத்தில் சேவை மணப்பான்பையுடன் பணியாற்றும் தமிழ்மண நிர்வாகிகள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள்!

என்னைப்பற்றிய ஒரு சிறிய அறிமுகம்:
தஞ்சைத்தரணியில் மன்னார்குடிக்கு அருகிலுள்ள வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த புலம் பெயர்ந்த அமெரிக்கத் தமிழன். 8 வருடங்கள் அமெரிக்கா [பாஸ்டன் – 1999 to 2006] வாழ்க்கை மற்றும் 8.5+ வருடங்கள் [1994-1998 + 2007--] சிங்கப்பூர் வாழ்க்கை. தற்போது வசிப்பது சிங்கப்பூர்.
படிப்பு:
B.E – Electronics and Communication Engineering (Guindy Engineering College, Chennai)
MBA (University of South Australia)

தொலைத்தொடர்பு (Telecommunications) துறையில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி.

நான் வலைப்பதிவாளரான கதை பிறகு மீண்டும நான்கு வருடங்கள் கழித்து திரும்பி எழுத வந்த கதை இந்த பதிவில்:

ஜாம்பவான்களான பாலா சார், பா.ரா அண்ணன் அவர்களைத் தொடர்ந்து இந்த வாரம் நான்...கொஞ்சம் உதறலாகத்தான் இருக்கிறது...but சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கை!

இந்த நட்சத்திர வாரத்தில் வெவ்வேறு Subject-ல், தளங்களில் எழுதலாம் என்ற எண்ணம்!

                                            *                     *                     *
Post a Comment