வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Wednesday, August 18, 2010

பதிவுலகம் - நான் யார்?வலைப்பதிவுலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு தொடர் பதிவு வலம் வந்து கொண்டிருக்கும். ஒரு சில தொடர்கள் மிகவும் அருமையானவை... குறிப்பாக பிடித்த புத்தகங்கள் தொடர். ஆனால் “பதிவுலகில் நான்என்ற இந்த மொக்கைத் தொடரை ஆரம்பித்து வைத்த பதிவர் யார் என்று தெரியவில்லை. பாசமிகு அண்ணன் பா.ராஜாராம் அவர்கள் அழைப்பு விடுத்ததால் எழுத வேண்டிய கட்டாயம். அண்ணன் என்னையும் என் வீட்டு Boss-யையும் கூப்பிட்டு பல நாட்கள் ஆகிவிட்டது. ஆனால்...ஆஸ்திரேலியா பயணம் மற்றும் வேலைப்பளு காரணமாக இப்பொழுதுதான் எழுத முடிந்தது.

1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

ரவிச்சந்திரன்

2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

ரவிச்சந்திரன்  என்னுடைய உண்மையான பெயர்

2003-2004 காலகட்டத்தில் முதன் முதலில் திண்ணை மற்றும் மரத்தடி, உயிரெழுத்து யாஹூ மடலாடற் குழுக்களில் “பொன்னி வளவன்என்ற பெயரில் எழுதினேன். காரணம்... “பொன்னியின் செல்வன்நாவல் ஏற்படுத்திய தாக்கத்தில் பொன்னி நதி ஓடி விளையாடும் தஞ்சைத்தரணி மைந்தன் என்பதால். பொன்னி வளவன்என்ற பெயர் பெரிய இலக்கியவாதி பெயர் போல் இருப்பதால்.. இலக்கியத்திற்கும் எனக்கும் ரொம்ப தூரம் என்பதால்... வலைப்பதிவில் என் சொந்தப்பெயரிலேயே எழுதி வருகிறேன்.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?

கெரகம்தான்:)

நான் வலைப்பதிவாளரான கதை பிறகு மீண்டும நான்கு வருடங்கள் கழித்து திரும்பி எழுத வந்த கதை இங்கே

4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம் செய்தீர்கள்?

பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. நான்கு வருடங்கள் கழித்து எழுத ஆரம்பித்தவுடன் நண்பர்களுக்கு மெயில் அனுப்பி தெரிவித்தேன். தமிழ்மணம் வழியாக பதிவுகளை படிக்கும்போது, பின்னூட்டம் போட நேரம் இருந்தால் ஒரு சிறிய பின்னூட்டம் போடுவேன்.

5. வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

என் அனுபவங்கள் மற்றும் என்னை பாதித்த விடயங்களைத்தான் நான் பெரும்பாலும் எழுதுகிறேன்.

6. நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா? அல்லது பதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

மனதில் புதைந்து கிடக்கும் எண்ணங்கள் திரி வைக்கப்படாத வெடிகுண்டுகள்என்று அறிஞர் ஒருவர் கூறியிருக்கிறார். என் மனதில் புதையுண்டு கிடக்கும் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளத்தான் வலைப்பதிவில் எழுதுகிறேன். வேலை... வேலை என்று பொருள் தேடி அலையும் இந்த பொருளற்ற வாழ்க்கையில் சற்று இளைப்பாற இந்த எழுத்து பயணம். மேலும்.. வலைப்பதிவில் எழுதுவதன் மூலம் பல நல்ல நண்பர்களை பெற்றிருக்கிறேன்.

என்னது... வலைப்பதிவில் எழுதி சம்பாதிப்பது எல்லாம் ரொம்ப ஓவரா தெரியல... நல்லா கேட்கிறாங்கப்பா கேள்வி:)

7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப் பதிவு?

வெட்டிக்காடு என்னுடைய சொந்த கிராமத்தின் பெயரில் எழுதும் இந்த ஒரு வலைப்பதிவுதான்.

8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆமாம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

பொறாமை:
இல்லை...ஒவ்வொருத்தரிடமும் ஒரு தனிப்பட்ட திறமை இருக்கிறது. அவரவர் பாதையில் அவருடைய திறமையை வெளிப்படுத்தி எழுதுகிறார்கள். அதனால் யாரையும் பார்த்து பொறாமைப் பட தேவையில்லை. பொறாமை மனிதனிடம் உள்ள கெட்ட குணம். நாம் ஒருவரைப் பார்த்து அவரிடம் உள்ளது நம்மிடம் இல்லையே என்று பொறாமைப்பட்டால் அவர் நம்மைப் பார்த்து நம்மிடம் உள்ளது அவரிடம் இல்லையே என்று பொறாமைப்படுவார். இதுதான் மனித இயல்பு. அக்கரைக்கு இக்கரை பச்சை! எனவே.. Be Happy with what you are – This is my motto!

கோபம்:
தங்களை நாட்டாமையாக நினைத்துக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஒரு சில இணைய ரவுடிகளை பார்த்து கோபம் ஏற்படுவது உண்டு. 


9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டை பற்றி?

நான் மரத்தடியில் 2003 ஆம் ஆண்டு எழுத ஆரம்பித்த போதும் பிறகு வலைப்பதிவு ஆரம்பித்து 2006-ல் முதல் பதிவு எழுதிய போதும் என்னை பாரட்டி உற்சாகப்படுத்தியவர் சகோதரி மதி கந்தசாமி

நான்கு வருடங்கள் கழித்து கடந்த இரண்டு மாதங்களாக நான் எழுதும் பதிவுகளை தொடர்ச்சியாக படித்து பின்னூட்டங்கள் மற்றும் தனி மடல்கள் மூலம் உற்சாகப்படுத்தும் நண்பர்கள்:
அண்ணன் பா.ராஜாராம்
அண்ணன் கோவி.கண்ணன்
ஜோ
ஜோதிஜி
கே.ஆர்.பி.செந்தில்

10. கடைசியாக- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டியது அனைத்தையும் பற்றி கூறுங்கள்

கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு எனவே நிறைய படிக்க வேண்டும்.

என்னால் முடிந்த உதவி/சேவைகளை கிராம மாணவர்கள்களின் கல்வி மற்றும் கிராமங்களின் வளர்ச்சிக்கு செய்ய வேண்டும். AIMS India  (www.aimsindia.net) என்ற தொண்டு நிறுவணம் 2001-ல் Washington DC-யில் இருக்கும் நண்பர்களால் தொடங்கப்பட்டது. 2003-ல் Boston-ல் இருக்கும் என் நண்பர்களுடன் சேர்ந்து AIMS India – Boston Chapter-ஐ தொடங்கினேன். கடந்த ஏழு ஆண்டுகளாக பாஸ்டன் நண்பர்கள் தமிழகத்தில் பல கிராம கல்வி வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.
சமீபத்திய Dharmapuri Dist - Govt Schools LIBRARY Project:

அழைக்க விரும்புவர்கள்:

இந்த மொக்கைத்தொடர் என்னுடன் முடியட்டும்:)

20 comments:

ஜோதிஜி said...

இந்த மொக்கைத்தொடர் என்னுடன் முடியட்டும்:)


எழுத்தில் எதையுமே இப்படி கொண்டு வர முடியல ரவி. நாம எடுத்துக்கிறதைப் பொறுத்து தான் இருக்கு.

உங்கள் சேவைகளுக்கு வாழ்த்துகள்.

பொன்மொழி உருவாக்கிய தாக்கம் அதிகம்.

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

நீங்க பழைய ஆளாக இருந்தாலும் மீண்டும் வலைஉலகிற்கு வந்ததால்.. இப்படிபட்ட மொக்கை பதிவையும் எழுதியே ஆகனும். :)

பதிவு மொக்கையாக இல்லை. ;)

கே.ஆர்.பி.செந்தில் said...

//இந்த மொக்கைத்தொடர் என்னுடன் முடியட்டும்:)//

இதுக்கு மட்டும் பாராட்டுக்கள்... ஹா ...ஹாஆ...

புன்னகை தேசம். said...

இந்த மொக்கைத்தொடர் என்னுடன் முடியட்டும்:)

---------------

அருமை

ஜாக்கி சேகர் said...

நண்பர்களோடு சமுக பணி ஆற்றும் உங்களுக்கு எஙன வாழ்த்துக்கள்..

shortfilmindia.com said...

உங்கள் சமூக பணிக்கு வாழ்த்துக்கள்..

shortfilmindia.com said...

ungkal samuka panikku vazhthukkal.

ஜோ/Joe said...

உங்கள் சமூக அக்கறையும் உதவும் மனப்பான்மையும் என்னை மிகவும் கவர்ந்தது

பா.ராஜாராம் said...

:-)

Be Happy with what you are – This is my motto!

my motto also.

நல்லா எழுதி இருக்கீங்க ரவி.

ரவிச்சந்திரன் said...

ஜோதிஜி -- நன்றி நண்பரே!

யெஸ்.பாலபாரதி-- வாங்க... வாங்க தல! நம்ம குடில் பக்கம் வந்து கருத்து தெரிவித்தற்கு நன்றி.

கே.ஆர்.பி.செந்தில்-- நன்றி தம்பி!

புன்னகை தேசம்-- முதல் வருகைக்கு நன்றி.

ஜாக்கி சேகர்-- நன்றி ஜாக்கி

shortfilmindia.com-- நன்றி தலைவரெ!

ஜோ-- நன்றி!

பா.ராஜாராம்-- நன்றி அண்ணா!

தருமி said...

//இந்த மொக்கைத்தொடர் என்னுடன் முடியட்டும்:)//

இது ரொம்ப நல்லா இருக்கு!

முனியாண்டி said...

//என் மனதில் புதையுண்டு கிடக்கும் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளத்தான் வலைப்பதிவில் எழுதுகிறேன். // உண்மை.

உங்கள் சமுக அக்கறைகளுக்கும் சேவைக்கும் தலைவணங்குகிறேன்.

Cable Sankar said...

அந்த ஷார்ட் பிலிம் இண்டியா நான் தான்..ஹி..ஹி

ரவிச்சந்திரன் said...

தருமி--நன்றி சார்

முனியாண்டி-- நன்றி

கேபிள் சங்கர்-- உங்களத் தெரியாமல தலைவரே?

”புல்லட் பாண்டி” போட்டோ கலக்கலா இருக்கு:)

RVS said...

ரவிச்சந்திரன் அண்ணே... எனக்கு மன்னார்குடி.. ஊர் பேரையும் என் பேரையும் ஒண்ணா சேர்த்து maanirvs.blogspot.com. ன்னு ஒன்னு கிறுக்கிட்டு இருக்கேன். டயம் கிடச்சா பாருங்க.. நன்றி..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

கோவி.கண்ணன் said...

//அண்ணன் கோவி.கண்ணன்//

:) ஜோதிஜி சந்தேகம் போய் இருக்கும்னு நினைக்கிறேன்

ஜோதிஜி said...

:) ஜோதிஜி சந்தேகம் போய் இருக்கும்னு நினைக்கிறேன்


NO NO.

பிரியமுடன் பிரபு said...

அழைக்க விரும்புவர்கள்:

இந்த மொக்கைத்தொடர் என்னுடன் முடியட்டும்:)

/////

ha ha

பிரியமுடன் பிரபு said...

உங்கள் சேவைகளுக்கு வாழ்த்துகள்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தாங்கள் ஆற்றி வரும் அறப்பணிகளை அறிவேன்!

தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் அண்ணா!