வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Wednesday, February 01, 2006

அறிமுகம்

வணக்கம்!

ஒருவழியாக நானும் என்னுடைய கிறுக்கல்களை பதிவு செய்ய இந்த வலைப்பதிவை ஆரம்பித்துவிட்டேன்.

என்னைப்பற்றிய சிறிய அறிமுகம்:

எனது பெயர் ரவிச்ச்ந்திரன். பிறந்து, வளர்ந்தது தஞ்சைத்தரணியில் மன்னார்குடிக்கு அருகில் உள்ள வெட்டிக்காடு கிராமம். படித்தது கிண்டி பொறியியல் கல்லூரியில் மின்னனுவியல் மற்றும் தொலைத்தொடர்பு (Electronics & Communications), தற்போது வசிப்பது அமெரிக்காவில் பாஸ்டன் பகுதியில். எனது எண்ணங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

மரத்தடி மற்றும் திண்ணையில் ஒரு காலத்தில் எழுதியவற்றை இங்கு முதலில் போடுவதாக உத்தேசம்.


அன்புடன்,
-ரவிச்சந்திரன்

5 comments:

சந்தோஷ் aka Santhosh said...

வாங்க ரவிச்சந்திரன் எழுதுங்க படிக்க நாங்க தயார் களத்துல இறங்குங்க. நான் படிச்சது தஞ்சையில் தான்.

vssravi said...

சந்தோஷ்,

வருகைக்கு நன்றி. தஞ்சையில் எந்த கல்லூரியில் படித்தீர்கள் ? சொந்த ஊர் தஞ்சைச்தரணியா ?

-ரவிச்சந்திரன்

மதி கந்தசாமி (Mathy) said...

அடடே! நீங்களா? எப்படி இருக்கீங்க?

உங்களுடைய பழைய கவிதைகளை ஒவ்வொண்ணா இடலாமே?

-மதி

vssravi said...

மதி,

தங்கள் வருகைக்கு நன்றி!

மிக்க நலம்.

நேரம் கிடைத்து ஏதாவது புதுசா கிறுக்கிற வரைக்கும் பழச போட்டுதான் ஒப்பேத்தனும் !

-ரவிச்சந்திரன்

cheena (சீனா) said...

அன்பின் ரவி

நான் பிறந்தது தஞ்சையில் தான் - ஆரம்பக் கல்வி பயின்றது தஞ்சையில்தான் -
நல்வாழ்த்துகள் ரவி
நட்புடன் சீனா