நண்பர் சுரேகா கடந்த வாரம் சிங்கப்பூர் வந்திருந்தபோது அவர் எழுதிய “தலைவா வா” புத்தகத்தை அன்பளிப்பாக கொடுத்தார்.
இந்த வார சிங்கப்பூர்-> டோக்கியோ விமானப் பயணத்தில் படிக்க ஆரம்பித்தேன். "பார்க்கலாம் என்று எடுப்பீர்கள்... படித்து முடித்துதான் எழுவீர்கள்." என்று பின்னட்டையில் எழுதியியிருந்தது முற்றிலும் உண்மை என்பதை படிக்க ஆரம்பித்தவுடன் தெரிந்து கொண்டேன். ஒரே மூச்சில் படித்து விட்டேன். நான் ஆங்கிலத்தில் பல சுய முன்னேற்ற புத்தகங்களை படித்திருக்கின்றேன். நான் தமிழில் படித்த சிறந்த சுய முன்னேற்ற புத்தகம் “தலைவா வா” !!!
நான் ஒரு MNC- கார்ப்பரேட் தொலைத் தொடர்பு நிறுவனத்தில் ஆசிய பசிபிக் வட்டார தலைமைப் பொறுப்பில் இருப்பதால் இந்த புத்தகத்தில் அவர் கூறியுள்ள “SERVE" மேலாண்மை (Management) மாடலை என்னால் மிகச் சுலபமாக ரிலேட் செய்து கொள்ள முடிந்தது.
“The Monk Who Sold His Ferrari" என்ற புத்தக விமர்சனத்தில் -http://vssravi.blogspot.jp/2010/09/5-monk-who-sold-his-ferrari.html “பெரும்பாலான சுய முன்னேற்ற புத்தகங்கள் கருத்து கந்தசாமிகளாக இப்படி செய், அப்படி இரு என்ற பெரிய பட்டியல்களை கொடுத்து படிக்கும்போது படிப்பதற்கு சுவாரசியம் இல்லாமல் ஒரு டிரை பீலிங்கை ஏற்படுத்தும் என் ராபின் சர்மா இந்த புத்தகத்தில் ஒரு கதை வழியாக சுய முன்னேற்ற தத்துவங்களைச் சொல்கிறார்” என்று எழுதியிருந்தேன். அதே போல் சுரேகாவும் இந்த புத்தகத்தில் ஒரு கதையின் வழியாக குரு-சிஷ்ய குருகுல முறையில் அடிப்படையில் (Mentorship )
SERVE Model
S – See the Future. See and communicate a compelling vision of the future.
E – Engage and Develop Others. Recruit and select the right people to achieve the vision.
R – Reinvent Continuously. Focus on continuous and never-ending improvement.
V – Value Results and Relationships. Deliver positive results and cultivate great relationships.
E – Embody the Values. Live and work in a manner consistent with your values.
"SERVE" மாடல் தலைமத்துவ பண்புகளை சுலபமாக எல்லோரும் புரிந்துகொள்ளும்படி சொல்லிக் கொடுக்கிறார்.
தலைமத்துவ (Leadership) பண்புகளை வளர்த்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பவர்கள், முக்கியமாக நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் !!
No comments:
Post a Comment