
இந்த வார இறுதியில் ஜுலை 1, 2 தேதிகளில் நியுயார்க் நகரில் நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவையின் (FETNA) தமிழர் விழாவில் கலந்துகொண்டேன். இந்த விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களைச் சந்தித்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க வாய்ப்பு கிட்டியது. வைரமுத்து அவர்களின் தீவிர ரசிகன் நான், காரணம் அவரும் என்னைப்போல் ஓர் கிராமத்து மனிதர். பல ச்நதர்ப்பங்களில் அவருடைய எழுத்துக்களைப் படிக்கும்போது நானே எழுதியது போன்று உணர்ந்திருக்கின்றேன். கிடைத்த சிறிது நேரத்தில் என்ன பேசுவது என்ற தயக்கம். "கள்ளிக்காட்டு இதிகாசம்" பற்றி எனது எண்ணங்களை பகிர்ந்துகொண்டேன்.
"மிக்க மகிழ்ச்சி, கருவாச்சி காவியம் படித்தீர்களா?" என்றார்.
"இன்னும் படிக்கவில்லை, புத்தகமாக வந்தபிறகு படிக்கலாம் என்று இருகிகிறேன்" என்றேன்.
"கூடிய விரைவில் புத்தகம் வரவுள்ளது, கட்டாயம் படியுங்கள்" என்றார்.
அதற்குள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள பலர் வந்துவிட்டனர். நானும் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு விடைபெற்றேன்.
பி.கு:
எனக்கு V.I.Pக்களிடம் புகைப்படம் எடுத்துக் கொள்வதில் அவ்வளவு ஆர்வம் கிடையாது. இந்த விழாவில் நடிகர் சரத்குமார், பேராசிரியர் ஞானசம்பந்தன், பட்டிமன்ற நடுவர் டாக்டர் அறிவொளி, கவிஞர் இலந்தை இராமசாமி ஆகியோர்களையும் சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றவில்லை. கவிப்பேரரசு எனது ஆசான் என்பதால் மிகுந்த ஆர்வத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், ஆனால் புகைப்படம் எடுத்த நண்பர் சற்று சொதப்பி விட்டார்!!.
3 comments:
ரவிச்சந்திரன்,
நல்ல சந்திப்பு.
நல்ல பதிவு.
இந்த மாதிரி சந்தர்ப்பங்கள் வாய்ப்பது அரிது என்பதால், புகைப்படம் எடுக்க ஆர்வம் வருவது இயற்கையே. அதனால் இரண்டு அல்லது மூன்று புகைப்படங்கள் எடுத்து கொள்வது நல்லது.
பரவாயில்ல.
படம் பார்க்கும்படிக்கு உள்ளதே.
படமும், பதிவும் காலத்துக்கும் இருக்கும்ல.
Post a Comment