வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Thursday, March 09, 2006

கல்லூரித் திருவிளையாடல்

CEG'ல் Final Year படிக்கும்போது எனது வகுப்பில் நடந்த சம்பவங்களைக் கொண்டு எழுதிய skit .


கல்லூரித் திருவிளையாடல்
**********************************

நடிகர்கள்
------------
சிவன் : ECE HOD Dr.V.Krishnamoorthy (ரவிச்சந்திரன்)

தருமி : சங்கர் நாரயணன் (Comedian of my Class)

நக்கீரன்: கிஷோர் (Fellow with a old man look and always questions every thing)

பான்டிய மன்னன்: 'Gulty' வெங்கட் (Class Rep)

காட்சி-1
----------
Dept Attender: Final Year Electronics மக்களுக்கு ஓர் நற்செய்தி, 'சைட்' மன்னர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு. நமது Final year class Rep.. 'Gulty' வெங்கட்டிற்கு ஓர் பெருத்த சந்தேகம் ஏற்ப்பட்டுள்ளது. நமது வகுப்பு பெண்கள் அழகாக தோற்றமளிப்பதற்க்கு காரணம், இயற்கை அழகா? அல்லது செயற்கை அழகா? இச்சந்தேகத்தைத் தீர்த்து வைப்பவருக்கு ஆறு Kingfisher Beer பாட்டில்கள் இலவசமாக வழங்கப்படும்.

தருமி: தலைவா... எத்தனை பாட்டில்கள்? என்னது.. ஆறு பாட்டில்களா!!! ஐயோ.. ஐயோ.. ஒரு பாட்டிலா, ரெண்டு பாட்டிலா? ஆறு பாட்டில்களாச்சே! இவ்வளவு நாளா ஃபிகர்களை சைட் அடிச்சி என்ன பிரயோசனம்? இந்த நேரம் பார்த்து பாட்டு எழுத மூடு வரமாட்டேங்குதே? இப்ப நான் என்ன பண்ணுவேன்?

சிவன்: நண்பரே...

தருமி: யாருப்பா நீ?

சிவன்:

கல்லூரிக்குச்
செல்லாமல்
கட் அடித்துவிட்டு
காலையும் மாலையும்
கண்ட கண்ட தெருக்கள்
பெண்கள் கல்லூரிகள்
பல சுற்றி
கண்ணில் படும்
கலர்களை
கள்ளப்பார்வை வீசி
கண்டு களிக்கும்
கள்வன் நான்!

தருமி: போச்சுடா.. நீயும் நம்ம கோஷ்டிதானா!

சிவன்: 'Gulty' வெங்கட்டின் சந்தேகம் தீர்க்கும் பாடல் உனக்கு வேண்டுமா?

தருமி: என்னது.. எனக்குப் பாட்டை நீ எழுதித் தருகின்றாயா? நான் யார் தெரியுமா? 'சைட்' அடிப்பதே தொழிலாக இருப்பவன். எனக்கு நீ பாட்டு எழுதி தர்றீர்யா?

சிவன்: நண்பரே, உனக்கு என் திறமை மீது சந்தேகம் இருந்தால் நீ என்னை சோதித்து பார்க்கலாம். கேள்விகளை நான் கேட்கட்டுமா? அல்லது நீ கேட்கின்றாயா?

தருமி: வேண்டாம்ப்பா.... நமக்கு கேள்வி கேட்டுத்தான் பழக்கம், பதில் சொல்லிப் பழக்கம் கிடையாது. கேள்விகளை ஆரம்பிக்கின்றேன்.'கடலை போடுதல்' என்றால் என்ன?

சிவன்: காரணமே இல்லாமல் ஜொள்ளு விட்டுக்கொண்டு பெண்களுடன் பேசி நேரத்தை வீணடிப்பதுதான் கடலை போடுதல்.

தருமி: 'இடி இடிப்பது' என்றால் என்ன?

சிவன்: Dr.V.Krishnamoorthy class எடுப்பது.

தருமி: GRE, TOEFL English என்றால் என்ன?

சிவன்: Dr.ரவீந்திரன் பேசுவதுதான் GRE, TOEFL English.
(மனுசன் English Grammer என்றால் விலை என்ன என்று கேட்பார். மனதில் தோன்றும் ஆங்கில வார்த்தைகளை கமா, Full Stop இல்லாமல் அவர் பாட்டுக்கு பேசிக்கொண்டே போவார். என்ன சொல்றாருன்னு ஒருத்தனுக்கும் கடைசிவரைக்கும் விளங்கியது கிடையாது)

தருமி: எங்கே அவர் பேசிய வசனம் ஒன்று கூறவும்.

சிவன்: "This instrument cannot be able to function properly.. but it can work.. you can see it... but on the other hand I cannot be able to... or in other words.. (goes on)

Students.. These days computer books are going on coming... and next class I will brought the book"

தருமி: டி.ராஜேந்தர் Style English பேசும் Professor யார்?

சிவன்: KPR (Dr.K.P.Ramakrishnan)

தருமி: எங்கே அவர் கூறிய வசனம் ஒன்று கூறவும்?

சிவன்:
(மனுசன் சரியான பிளேடு.. ஆங்கிலத்தைத் தமிழாகப் பாவித்துத் தமிழ் பேசும் உச்சரிப்போடுதான் பேசுவார். கேட்க சகிக்காது. மூன்றாம் ஆண்டில் Microprocessor என்ற பாடம் எடுத்தார். ஆள் சரியான பிளேடு என்பதால் ஒருத்தனும் வகுப்பை கவனித்தது கிடையாது. முதல் டெஸ்டில் 25-க்கு இரண்டு பசங்களைத் தவிர எல்லோரும் எடுத்த மதிப்பெண்கள் ஐந்துக்கும் குறைவு. Test Papers எல்லோருக்கும் கொடுத்துவிட்டு அவர் பேசிய famous டி.ராஜேந்தர் style ஆங்கிலத் தமிழ் வசனம்)

"I taughtu one thingu, I askedu the same thingu, but you wroteu some thingu, these are the dibbicult thingsu you cannot get good marksu "

தருமி: சாரயம் காய்ச்சுவது என்றால் என்ன?

சிவன்: Manjit-யை கேட்டுப் பாரும்.(Chemistry Lab-ல் சாரயம் காய்ச்சி Chemistry Professor 'டைகர்' சங்கரிடம் வசமாக மாட்டியவன்)

தருமி: 'Test' என்றால் என்ன?

சிவன்: ஒருவன் படித்து எழுதிய பேப்பரைக் குறைந்தது பத்து பேராவது பார்த்து, காப்பி அடித்து மார்க் வாங்குவது.

தருமி: 'Assignment' என்றால் என்ன?சிவன்: அடுத்தவன் எழுதிய Assignmnentஐ பார்த்து அப்படியே Xerox காப்பி எடுப்பதுதான் Assignment எழுதுதல் ஆகும்.

தருமி: Test எழுதப் படிப்பதற்கு?

சிவன்: ஒரு கோபல், ஒரு சந்தானம் (First, Second rank Students)

தருமி: Test-ல் காப்பி அடிப்பதற்கு

சிவன்: ஒரு ராஜா சண்முகம்

(Test நடக்கும் தருணங்களில் அதிகாலையிலேயே Exam Hall-க்கு வந்து கோபால், சந்தானம் இருவருக்கும் சீட் போட்டுக் காத்துக் கிடப்பான்)

தருமி: Assignment எழுதுவதற்கு?

சிவன்: ஒரு Issac Davies.(Final Semester வரை பொறுப்பாக Assignment எழுதிய ஒரு அப்பிராணிப் பையன்)

தருமி: அதைப்பார்த்து Xerox எடுப்பதற்கு?

சிவன்: ஒரு 'பட்டு' செந்தில்(Assignment Xerox copy எடுப்பதில் மன்னன். ஆனால் சரியான Tension பேர்வழி. ஓரு முறை லோகநாதன் என்பவனுடைய Assignment-ஐ அரக்கப் பரக்கக் காப்பியடித்து Tension-ல் Lognathan name, Roll No ரெண்டையும் சேர்த்து காப்பி அடிச்சுட்டான். Professor Rajapal Perinbam வகுப்பில் வந்து கூறியது "There are two assignments with same name S.Lognathan, Roll Number 3352, How come?"

தருமி: Visiting student யார்?

சிவன்: Ravinder Shonvi(Ravinder Shonvi-ன் தந்தை ஒரு Indian Foreign Service officer. எப்போதாவது ஒரு முறை வகுப்பு பக்கம் வந்து நானும் இந்த வகுப்பில்தான் படிக்கிறேன் என்று எல்லோருக்கும் ஞாபகப்படுத்திவிட்டுச் செல்பவன்)

தருமி: Classஐ கட் அடிப்பதற்கு ?

சிவன்: நீ

தருமி: சைட் அடிப்பதற்கு?

சிவன்: நான்

தருமி: மச்சி.. நீதான் King மச்சி. நீ பாட்டை எழுதிக்கொடு. நான் Beerபாட்டில்களை வாங்கி வற்றேன். ரெண்டு பேரும் சேர்ந்து Enjoy பண்ணுவோம்.

சிவன்: Beer பாட்டில்கள் எனக்கு வேண்டாம். நீயே உனது கோஷ்டியோடு Enjoyபண்ணு.

தருமி: ரொம்ப Thanks மச்சி.

காட்சி-2-(Class Room)
-----------------------------

தருமி: பார் Gulty.. என்னைப் பார் Gulty... பாட்டுடன் வந்திருக்க்கும் என்னைப் பார் Gulty.

மன்னன்: சைட் அடிப்பதில் வல்லவரே.. என் சந்தேகம் தீர்க்கும் பாடலை எழுதி வந்திருக்கின்றீரா?

தருமி: ஆமாம் Gulty, நானே சொந்தமாக எழுதி வந்திருக்கின்றேன்.

மன்னன்: எங்கே பாடலை படித்துக் காட்டும்...

தருமி:

பெண்ணே!
பல்லவன் பேருந்தில்
கருப்பு மை தீட்டிய
உன்
கயல் விழிகள் பேசிய
காதல் மொழிகளில்
கணநேரம்
மயங்கி நின்ற நான்...

பயணச்சீட்டு
எடுப்பதற்காக
பாக்கெட்டில்
கை வைத்தவுடன்
பதறிப்போனேன்
பணம்
அங்கு இல்லாததால்!

மன்னன்: ஆகா! ஆகா! அற்புதமான பாடல். தீர்ந்தது எனது சந்தேகம். ஜொல்லு சங்கம் தீர்த்து வைக்காத ஒரு சந்தேகத்தைத் தனி ஒருவனாக வந்து தீர்த்துவைத்த தருமியே நீ வாழ்க. யாரங்கே.. எடுத்து வாரும் அந்த Kingfisher Beer பாட்டில்களை.

தருமி: ஆகா ! ஆகா! இன்றைக்கு ஒரே Jollyதான். முதல்ல Manjit பயலுக்கு ஒரு பாட்டில் கொடுத்து அவன் கடனை ஒழிக்கனும்.

மன்னன்: இந்தாருங்கள் நண்பரே, Beer பாட்டில்கள்.

நக்கீரன்: வகுப்புத் தலைவரே... சற்று பொறும். நண்பரே இப்படி வருகின்றீர்களா?

தருமி: யோவ் தாத்தா... பொறுய்யா. பாட்டில்களை வாங்கிட்டு வர்றேன்.

நக்கீரன்: அதில்தான் பிரச்சனை உள்ளது.

தருமி: என்னய்யா பிரச்சனை?

நக்கீரன்: நீர் எழுதிய பாட்டில் பிழை இருக்கின்றது.

தருமி: பிழையா? எவ்வளவு பிழை இருக்கின்றதோ அதற்கு தகுந்தாற்போல பாட்டில்களைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

நக்கீரன்: உமது பாடலின் பொருள் என்ன?

தருமி: மன்னருக்கே புரிந்து விட்டது. உமக்கு புரியவில்லையா? நல்ல பாட்டய்யா. "கயல் விழிகள் பேசிய காதல் மொழிகளில்" அருமையான வரிகள்.

நக்கீரன்: சரியான பாடல் ஒன்றிற்கு எமது வகுப்புத்தலைவர் பரிசு கொடுக்கின்றார் என்றால் அதைக்கண்டு சந்தோசப்படும் முதல் மனிதன் நாந்தான். அதேசமயம் தவறான பாடல் ஒன்றிற்கு வகுப்புத்தலைவர் பரிசு கொடுக்கின்றார் என்றால் அதைக்கண்டு வருத்தப்படும் முதல் மனிதனும் நாந்தான்.

தருமி: ஓகோ, இங்கே எல்லாமே நீர்தானோ?

(நக்கீரன் சிரிக்கின்றார்)

தருமி: நல்ல சிரிப்பய்யா... உன் சிரிப்பு. நான் வர்றேன்.

காட்சி-3
------

தருமி: வேணும்... எனக்கு நல்லா வேணும். புதுசா சைட் அடிக்கிறவன நம்பினேன். எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும். டேய்.. எங்கடா போயிட்டே.. வரமாட்டான். அவன் வரமாட்டான்....

சிவன்: நண்பரே, பாட்டில்கள் கிடைத்ததா?

தருமி: வாய்யா... வா. உதை ஒன்னுதான் பாக்கி. இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருந்தால் அதுவும் கிடைத்து இருக்கும்.

சிவன்: என்ன நடந்தது? விளக்கமாகக் கூறவும்.

தருமி: உன் பாட்டில் குற்றமாம்.

சிவன்: எவன் அவன் என் பாட்டில் குற்றம் கூறியவன்?

தருமி: இந்தக் கோபத்திற்கு மட்டும் குறைச்சல் இல்லை. ஆனா.. பாட்டு எழுதுறதுல கோட்டை விட்டுடு. அங்கே கிஷோர்னு ஒரு தாத்தா இருக்க்கான். அவந்தான் உன் பாட்டில் குற்றம் கூறியவன்.

சிவன்: காட்டு அவனை....

காட்சி-4 (Class Room)
------------------------------

சிவன்: எவன் அவன் என் பாட்டில் குற்றம் கண்டுபிடித்தது?

நக்கீரன்: எவன் அவன் என்று மரியாதை இல்லாமல் பேச வேண்டாம். நாந்தான் உமது பாட்டில் குற்றம் கண்டுபிடித்தேன்.

சிவன்: எல்லாம் எனக்கு தெரியும்.

நக்கீரன்: எல்லாம் தெரிந்தவன் என்று நினைத்தால் எழுதிய பாட்டில் குற்றம் இருக்காதா என்ன?

சிவன்: என்ன் குற்றம் கண்டீர்... என் பாட்டில்?

நக்கீரன்: பாடலை எழுதிய நீர் கொண்டு வராமல் மற்றொருவரிடம் கொடுத்து அனுப்பியதன் காரணம்.

சிவன்: அது நடந்து முடிந்த கதை. என் பாட்டில் என்ன குற்றம் கண்டீர்? சொற்குற்றமா அல்லது பொருட்குற்றமா?

நக்கீரன்: சொற்குற்றம் கிடையாது. அப்படியே இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம். பொருளில்தான் குற்றம் உள்ளது.

சிவன்: என்ன குற்றம்?நக்கீரன்: எங்கே உமது பாடலைக் கூறும்.

சிவன்:

பெண்ணே!
பல்லவன் பேருந்தில்
கருப்பு மை தீட்டிய
உன்
கயல் விழிகள் பேசிய
காதல் மொழிகளில்
கணநேரம்
மயங்கி நின்ற நான்...

பயணச்சீட்டு
எடுப்பதற்காக
பாக்கெட்டில்
கை வைத்தவுடன்
பதறிப்போனேன்
பணம்
அங்கு இல்லாததால்!

நக்கீரன்: இப்பாடலின் பொருள்.

சிவன்: நமது வகுப்பு நண்பன் ஒருவன் பல்லவன் பேருந்தில் பயணம் செய்யும்போது நமது வகுப்புத் தோழியைப் பேருந்தில் பார்க்கின்றான். அப்போது அவளுடைய மீன் விழிகளின் அழகில் மயங்கி நிற்கும்போது அவன் தன் பர்சை பிக்பாக்கெட்டில் கோட்டை விட்டான் என்பதுதான் இப்பாடலின் பொருள்.

நக்கீரன்: இதன் மூலம் நீர் நமது வகுப்புத் தலைவருக்குத் தெரிவிக்கும் கருத்து.

சிவன்: ம்ம்... இன்னுமா புரியவில்லை. நமது வகுப்பு பெண்கள் அழகாக இருப்பதற்குக் காரணம்.. இயற்கை அழகுதான்.

நக்கீரன்: ஒருக்காலும் இருக்க முடியாது. நமது வகுப்பு பெண்கள் அழகாக தோற்றமளிப்பதற்கு காரணம் செயற்கை அழகே தவிர இயற்கை அழகு கிடையாது. ஐடெக்ஸ் கண்மையையும், உதட்டுச் சாயத்தையும் பூசிக்கொள்வதால் ஏற்பட்ட செயற்கை அழகே தவிர அது இயற்கை அழகு கிடையாது.சிவன்: மற்ற வகுப்புப் பெண்களுக்குக்கூட இயற்கை அழகு கிடையாதா?

நக்கீரன்: கிடையாது.

சிவன்: Stella Marris, Queen Marris, Ethiraj college பெண்களுக்குக்கூட இயற்கை அழகு கிடையாதா?

நக்கீரன்: கிடையாது.

சிவன்: சினிமாவில் நடிக்கும் பெண்களுக்குக்கூட?

நக்கீரன்: சினிமாவில் நடிக்கும் பெண்கள் என்ன?.. நான் அன்றாடம் இரவில் வணங்கும் எனது கனவுக்கன்னி அந்த ஸ்ரீதேவிக்குக்கூட இயற்கை அழகு கிடையாது.

சிவன்: உண்மையா

கநக்கீரன்: உண்மையாக

சிவன்: நிச்சயமாக

நக்கீரன்: நிச்சயமாக

சிவன்: கிஷோர்... நன்றாக எனது கையைப்பார்.

நக்கீரன்: நீர் எமது Electronics Department H.O.D என்று உமது Visiting Cardஐ காட்டினாலும் குற்றம் குற்றம்தான்.

சிவன்: கிஷோர்.....(கிஷோர் மயக்கம் போட்டு விழுகின்றான்)

Gulty: சார்.. கிஷோர் தெரியாம உங்களை எதிர்த்துப் பேசிட்டான் சார். அவனுக்குக் 'கப்பு' (Arrears) கொடுத்திடாதிங்க சார். அவனை மன்னித்து விடுங்கள்.

சிவன்(H.O.D): கிஷோரைச் சோதிப்பதற்காக நான் நடத்திய நாடகம் இது. கிஷோர் அமெரிக்கா சென்று படிப்பதற்காக என்னிடம் Recommendation letter கேட்டிருந்தான். அவன் US சென்று அங்குள்ள Freak-out பெண்களைப் பார்த்து ஜொல்லு விடாமல் ஒழுங்காகப் படிப்பானா என்று சோதிப்பதற்காக நான் நடத்திய ஒர் சிறிய சோதனை இது. இதில் அவன் வெற்றி பெற்று விட்டான்.

(கிஷோர் மயக்கம் தெளிந்து எழுந்து வருகின்றான்).

கிஷோர் நான் நடத்திய சோதனையில் நீ வெற்றி பெற்று விட்டாய். இந்தா, நீ கேட்ட Recommentation letter.

கிஷோர்: ரொம்ப Thanks Sir.

(நிறைவு)
Post a Comment